Posts

Showing posts from 2016

இயற்கை வழி விவசாயம்

Image
பரமுவின் முதல் கட்டுரை: 2014 நவம்பரில் எழுதியது..  தமிழில் எழுதி கொடுத்த முகநூல் நண்பர் Vasuki_vm அவர்களுக்கு நன்றி இயற்கை வழி விவசாயம் இது வானத்தை வில்லாக வளைக்கிற கற்பனை வேலையோ... தலைய சுத்தி காத தொடற கடினமான விசயமோ.. வசதி படைதவர்கள் செய்யும் விவசாய முறையோ.. சரியாய் செய்ய வேண்டிய அறிவியல் கோட்பாடுகளோ கணித சூத்திரங்களோ... படித்து கற்றுக்கொண்டோ, முழுவதுமாய் தெரிந்து கொண்டு செய்யும் விசயமோ... புகாகோ, நம்மாழ்வார், பாலேக்கர் போன்றவர்களின் வழிமுறைபடி தான் செய்ய வேண்டுமோ என்ற கட்டாயமான விசயமோ.. இயற்கை இடுபொருட்கள் என்று சொல்லும் மண்புழு உரம் தொடங்கி, அமிர்தகரைசல், பஞ்சகாவ்யா என்று பெயர் தெரியாத பொருட்கள் இருந்தால் மட்டுமே சாத்தியமான விவசாய முறையோ இல்லை....! இல்லை....! இல்லை...! அன்பான விவசாய நண்பனே..! நீ யாரையேனும் பின்பற்றி தான் இயற்கைவழி விவசாயம் செய்ய வேண்டுமென்று இல்லை..! மேலே சொன்ன விஷயங்களை தாண்டியது தான் இயற்கை வழி விவசாயம்.. நம்புவது சிறிது கடினம் தான்.. உரம்,பூச்சிகொல்லி, களைக்கொல்லி இவை எல்லாம் இருந்தால் தான் விவசாயம் சாத்தியம் என்று நம் முன்னோர்களை நம்ப வைத்து

மரபு ரக பூசணி விதை சேகரிப்பு வீட்டுத்தோட்ட நண்பரிடமிருந்து..

Image
நாட்டு விதை சேகரிப்பில், விதை கொடுத்து உதவிய பெரும்பங்கு வீட்டுத்தோட்ட நண்பர்களையே சேரும்.. விதை வங்கிகளோ, விதை பாதுகாப்பவர்களோ பெரிதாக தேவையில்லை எனும் ஒரு சூழல் உள்ளது. தன் குடும்பத்தற்கு தேவையான உணவென்றால் "" #நாட்டு_விதை #நஞ்சில்லா_உணவு"" என்ற எண்ணத்தை கொண்டு விவசாயம் செய்யும் சூழலே நான் கூறுவது.. அவ்வாறு தன் வீட்டு உணவிற்காக பயிரிட்டதில் கிடைத்த ஒரு மரபு ரக பூசணிக்காய் தனது வித்துகளுடன் கம்பீரமாய் அமர்ந்துள்ளது.. வீட்டுத்தோட்ட நண்பர் வித்யா மோகன் அவர்களின் வீட்டுத்தோட்டத்திலிருந்து இந்த படம்...

ஒரு மாத கால வீட்டுத்தோட்டம் சார்ந்த இணையதள பயிற்சி

Image
#LEARN_FIRST இணையதளம் மூலமாக ஒரு மாத கால வீட்டுத்தோட்ட வகுப்புகள்.. என் வீட்டிற்கு தேவையான உணவை நானே உற்பத்தி செய்துகொள்ள விரும்புகிறேன். ஆனால் அதற்கான அடிப்படையான விசயங்கள் ஏதும் தெரிவதில்லை..என நினைக்கும் நண்பர்களுக்காக..  இரண்டு வருடங்களாக தோட்டம் அமைப்பதில் நாங்கள் கற்ற விசயத்தை  ஒரு மாத பயிற்சியாக கற்றுத்தருகிறோம். இந்த பயிற்சி வீட்டுத்தோட்டம் அமைப்பவர்களை பயிற்றுனர்களாகவே மாற்றி விடுகிறது. நீங்கள் உங்களுக்காக தோட்டம் அமைத்திருந்தாலோ, மற்றவர்களுக்கு தோட்டம் அமைத்து தரும் வேலையை செய்து வருபவர்களாகவோ இருக்கலாம்.. அடிப்படையான விசயங்களை  கற்றுக்கொண்டு செயல்படுங்கள்.. செயல்படுத்துங்கள்.. வாட்ஸ்அப் மூலம் வகுப்புகளை பயிற்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். டிசம்பர் 20 அன்று பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது. கலந்துரையாடலும் சில வீட்டுப்பாடங்களுமாக கூட பயிற்சிகள் இருக்கும். நோக்கம் ஒன்று தான்.. 400சதுர அடி இடப்பரப்பு 4,5பேர் உறுப்பினர்களாக கொண்ட குடும்பத்தின் காய்கறி தேவையை பூர்த்தி செய்திடும் என்று அனைவரும் கற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டும்.. பயிற்சி காலத்திலேயே உங்களுக்கான தோட்டத்தை

மிருதுவான பற்பொடி

Image
ஓர் சிறந்த #பல்பொடி இன்னிக்கு காலையில பக்கத்து தோட்டத்து ஐயாவை பார்க்க போயிருந்தப்ப வரப்புல ஏதோ தேடீட்டு இருந்தாரு.. என்னங்க ஐயா தேடறீங்கன்னு கேட்டேன்.. பல்லு வெளக்குனா ஈறுல இரத்தமா வருது சாமி..அதான் எறும்பு குழியை தேடறேன்னு சொன்னாரு.. ஒரு எறும்பு குழியை தேடி பிடிச்சு அந்த குழியை சுத்தி இருந்த மண்ணை எடுத்து பல்லு வெளக்கீட்டு வந்தவரு சொன்னாரு, நானும் ஊரெல்லாம் தேடி எது எதுலயோ பல்லு வெளக்கி பார்த்தேன்..பல்லுல விரல் பட்டாவே இரத்தம் வந்துரும். இல்லை குச்சி வச்சு பல்லு வெளக்குனாலும் இரத்தம் வரும். கொஞ்ச நாளா #ஆலம்விழுதுல பல்லு வெளக்கிட்டு இருந்தேன். அதுக்கப்புறம் இந்த எறும்பு குழி மண்ணுல வெளக்குறேன்.. அருமையா இருக்குதுன்னு சொன்னாரு.. சாதாரணமா செங்கல்லை இடிச்சு வெளக்குவோம், இல்லைனா தோட்டத்துல மண்ணை எடுத்து பல்லு வெளக்குவோம். ஆனால் இந்த எறும்பு குழி மண்ணு அவ்ளோ அருமையா இருக்கு..  #softest_tooth_powder #way_to_self_sustainable

Food First Gardening workshop december-2016 chennai

Image
One Day Terrace Garden Workshop& Seeds Sharing Event In #Chennai  _____________________ Date: 04.12.16 Sunday Time: 10am-4.30pm Venue: No:9A, Govindaswamy st, sholinganallur , chennai. 🍒Training by  "#Aadhiyagai_Food_First" Team  For Registration:   👉whatsapp to 8526366796  👉Text @ (Name, Ch2016Dec4) 👉Fee for Training and Food: 500₹ 👉Seeds Sharing Event: 3.30pm-4.30pm  Cheap way of gardening methods  By "Reduce-Reuse-Recycle" ஒவ்வொரு முறையும் ஒரு தோட்டத்தை அமைக்கும்போது பயிற்சி நடத்துவோம். இந்த முறை எங்கள் குழுவின் ஒரு மாதிரி தோட்டத்தில் பயிற்சி நடத்துகிறோம்.. __________________________________ செய்முறையுடன் கூடிய ஒருநாள் வீட்டுத்தோட்ட பயிற்சி முகாம்: தம்பி, வணக்கம் பா.. நான் விவசாயத்துக்கு புதுசு , எனக்கு விவசாயத்தை பத்தி ஒன்னும் தெரியாது .. ஆனா ஏதோ ஒன்னு பண்ணனும் .. எங்க வீட்டுக்கு வேணங்குற காய்கறிகளையாவது நான் உற்பத்தி செஞ்சுக்கனும் .. உன்னால உதவ முடியுமா ..!!!! தம்பி,எங்க வீட்டு மாடில கொஞ்சம் இடம் இருக்கு .. அதுல எங்க குடும்பத

One day terrace garden workshop October:2016

Image
One day terrace gardening workshop & seeds sharing event in #chennai_madipakkam (October 9) #Covai_peelamedu (October 16) _______________________ Chennai training detail: Date: 9.10.16 Sunday Time: 10am-4pm Venue: 40, MGR Road, Gandhinagar, madipakkam, Chennai. For registration:  SMS to 8526366796 <name> <ch-oct9> _____________________ Coimbatore training detail: Date: 16.10.16 Sunday  Time: 10am- 4pm Venue: 33 D, Balan nagar,  MKP road, near KVB ATM,  peelamedu, Coimbatore. For registration:  SMS to 8526366796 <name> <cbe-oct16> ___________________ Seeds sharing and selling Time: 4pm-5pm Training fee: 500₹ for Training and lunch Trainings are conducted by:   #Aadhiyagai  செய்முறையுடன் கூடிய ஒருநாள் வீட்டுத்தோட்ட பயிற்சி முகாம்: தம்பி, வணக்கம் பா.. நான் விவசாயத்துக்கு புதுசு , எனக்கு விவசாயத்தை பத்தி ஒன்னும் தெரியாது .. ஆனா ஏதோ ஒன்னு பண்ணனும் .. எங்க வீட்டுக்கு வேணங்குற காய்கறிகளையாவது நான் உற்ப

Marriage Return gift தாம்பூலப்பை விதைகள்

Image
#Return_gift_பரிசு #Marriage_திருமண_தாம்பூலம் #Native_seeds_நாட்டு_விதைகள் #home_seed_banks_வீட்டுக்கு_வீடு_விதைவங்கி #save_seeds_விதை_பாதுகாப்பு #share_seeds_விதை_பகிர்தல் #awareness_விழிப்புணர்வு Paramez Aadhiyagai 8526366796 WHATSAPP for further details. நண்பர்களுக்கு வணக்கம்.                               2014 ஆம் ஆண்டு முதல் மரபு விதைகளை சேகரித்து வருகிறோம். கிடைப்பது 5விதையோ 10விதையோ தோட்டத்தில் விதைத்தால் மண்ணும் மழையும் பல மடங்கு விதைகளை திருப்பி கொடுத்தன.. அவ்வாறு தோட்டத்தில் கிடைத்த விதைகளை பொட்டலங்களாக்கி மரபு விதைகள் கேட்போருக்கு கொடுத்து வருகிறோம். விதைகளை யாருக்கும் நிறைய கொடுப்பதில்லை. 10,20 விதைகளாக கொடுக்கின்றோம். அவ்வாறு வாங்கி செல்லும் நண்பர்கள் விதைப்பெறுக்கம் செய்து அவர்கள் தேவை போக மீதமுள்ள விதைகளை பகிர்கின்றனர். இவ்வாறு விதைகளை பகிர்ந்து வரும் சூழலில் நிறைய நண்பர்கள் தங்களுடைய வீட்டில் நடக்கும் திருமணம், வளைகாப்பு, புதுமனை புகுவிழா, தொழில் தொடங்கும் விழா, ஊர் திருவிழா என பல்வேறு நிகழ்வுகளுக்கு அவ்வபோது விதைகளை கேட்டதை தொடர்ந்து "தாம்பூல விதைப்ப

மரபு ரக பருத்தி விதை சேகரிப்பு

Image
#நாட்டு_ரக_பருத்தி #செம்பருத்தி #கருங்கண்_பருத்தி #பல்லாண்டு_பருத்தி இப்படி பல பெயர் கொண்ட நம் மரபு ரக பருத்தி ஆங்காங்கே கோயில்களிலும், சில வீடுகளிலும் தெரிந்தோ தெரியாமலோ வாழ்ந்து வருகிறது.. கடந்த வருடம் சேகரித்த விதைகளை சில நூறு பேருக்கு கொடுத்திருந்தோம். இந்த வருடம் விதை தேடிக்கொண்டிருந்தபோது கண்ணில் தென்பட்டுள்ளது.. நாள்: அக்டோபர் 4 செவ்வாய் இடம்: ஈரோடு நசியனூர் அருகே உள்ள கந்தாம்பாளையம். தோட்டம் அமைக்க வந்த போது கிடைத்துள்ளது.. முகநூல் நண்பர் Aravind Murugesan க்கு நன்றிகள் பல.. இந்த ரக பருத்தி பஞ்சில் திரி போட்டு விளக்கு ஒளிர்வது வீட்டிற்கு நல்லது, சிவனுக்கு உகந்தது என கூறுகிறார்கள், இப்பொழுது யாரும் பருத்திபால் குடித்திருக்க வாய்ப்பு மிக குறைவு.. பருத்திபால் செய்து  நாம் குடிக்கவும் மாடுகளுக்கு பருத்திக்கொட்டை தீவனமாகவும் கொடுத்ததும் இவ்வாறான பாரம்பரிய ரகங்களை தான். இன்றைய பொழுதில் ஒட்டு ரக பருத்திகளும் பீ.டி பருத்திகளும் தான் விவசாயிகள் பயிரிடுகறார்கள். நம்மால் இயன்றவரை தோட்டங்களிலும் வீடுகளிலும் மாடித்தோட்டங்களிலும் இந்த பருத்தியை பயிர் செய்து மரபை பாதுகாப்போம். நன

செடி எப்படி வளர்த்தனும் எனவும், நாம எப்படி வாழனும் எனவும் நாம தான் முடிவு செய்யனும்

Image
இலையில ஓட்டை விழுந்துட்டா பூச்சி தாக்குதல் நோய் தாக்குதல் நடந்துட்டா அந்த இலைகளை பிடுங்கி போட சொல்றாங்களே நீங்க ஏன் அப்படியே விட சொல்றீங்க..?? ஒடஞ்ச கையை வச்சிக்கிட்டு நம்ம வேலை செய்யறதில்லையா.. கை ஒடஞ்சிருந்தாலும் உடம்போடு இருக்குறத நம்ம விரும்புவோமா, இல்லை இந்த கை வேண்டான்னு வெட்டி எறிய நினைப்போமா!! ஒடஞ்ச கையை ஒத்தாசைக்கு வச்சுக்கிட்டு நம்மனால பொழப்பு நடத்த முடியும்னா நோய்,பூச்சி தாக்குதலால பாதிக்கப்பட்ட இலையை வச்சுக்கிட்டு ஒளிச்சேர்க்கை செஞ்சு பொழச்சுக்க செடிகளுக்கு தெரியாதா என்ன!!?? நம்ம கையும் காலும் நல்லா இருக்குங்கறத வச்சு 100% ஆரோக்கியமா இருக்கோம்னு நம்மனால சொல்லீட முடியுமா என்ன!?? நமக்குள்ளயும் நோய் தாக்குதல் நடந்துக்கிட்டு தா இருக்கும்.. அதை எதிர்த்து நம்ம ஒடம்பும் சண்டை போட்டு நம்மளையும் வாழ வச்சிக்கிட்டு தா இருக்கும்.. அதுமாதிரி தா செடிகளும்.. பூச்சி நோய்ன்னு தாக்குதல் நடந்தாலும் அதை எதிர்த்து வாழ்ந்துட்டு காய்ச்சிக்குட்டே இருக்கும்.. நம்ம வளர்த்தற செடி பச்சை பசேரென மட்டுமே இருக்கனும்னு நம்ம நெனைக்க கூடாது.. அதுக்காக நம்ம செய்யற பராமரிப்பும் பாதுகாப்பும் அளவுக்கு அத

மரபு விதைகளின் தாம்பூல விதைகள்

Image
#Return_gift #தாம்பூல_விதைகள் நண்பர்களுக்கு வணக்கம் ..                                                  திருமணத்திற்கு வந்து வாழ்த்திச் செல்லும் உறவுகளுக்கு தாம்பூலப்பை கொடுப்பது நம் மரபு. .. அதில் தேங்காய் கொடுப்பது சிறப்பாக இருந்தது .. பயண கலைப்பு நீங்க போகும் வழியில் தாகம் தீர்க்க அந்த அற்புத நீர் பயன்படும் நோக்கில் தேங்காயை தாம்பூலப்பைகளில் கொடுத்து அனுப்பினர் ..                                                                                           சமீப காலமாக மரக்கன்றுகள் வழங்கி வரும் நற்காரியங்களும் நடந்து வருகிறது .. அதேபோல நகரப்பகுதிகளில் நடக்கும் திருமண நிகழ்வுகளுக்கு வந்து செல்லும் உறவுகளுக்கு தாம்பூல பைகளில் நம் பாரம்பரிய விதைகளையும் கொடுக்கலாம் என நெறைய நண்பர்கள் கேட்டுக்கொண்டதன் படி கடந்த மாதங்களில் சில திருமணங்களுக்கு "ஆதியகை திருமண தாம்பூல விதைகள் " வழங்கி வருகிறது . நம் மரபு விதைகள் அனைவரிடமும் பகிரப்பட வேண்டுமென்பதன் நோக்கத்திலும், நகரங்களின் வீடுகளில் காய்கறி தோட்டங்கள் பெருக வேண்டுமெனவும் இந்த முயற்சி பரவலாக்கப்படுகிறது ..                        

Aadhiyagai Return gifts

Image
                            In our tradition, we offer return gift to our relatives and friend who attended the wedding.  It’s not only tradition, but there is a science behind it.  Our ancestors gave a bag of Beetle leaves, Nuts and Coconut as return gift.  The beetle leaves/Nuts help in digestion and Coconut helps to drive away the tiredness of travelling. Nowadays saplings are given as return gift for many of the functions like Marriages, Birthday parties, House warming ceremonies and many others.  As per requests from our friends “Aadhiyagai” started sharing the native seed bags as return gift for the past one year. Our aim is to initiate people to start kitchen garden and to keep our native seeds in rotation.  By this our native seeds reaches many hands.  Not only farmers, It’s all our duty to save our indigenous seeds. Nowadays many have started terrace gardening, this will help them to plant native seeds and those who haven’t started yet may get interest when they h
கல்லூரி காலத்தில் விமானவியலை கற்க விரும்பியதில்லை.. மொழி ஒரு பெரிய தடையாக கருதி விலகி வந்து எளிமையான விசயங்களை தேடி அலைந்து கிடைத்த பொக்கிசமாக விவசாயத்தை கருதி ஏற்றுக்கொண்டேன்.. முகநூல் தான் அதற்கு ஆதாரமாக விளங்கியது.. மண்ணும் விதையும் சமுதாயமும் கற்றுக்கொடுக்கின்றது.. விமானவியலில் பட்டம் பெறவில்லை.. வாழ்வில் பட்டம் போன்று பறக்க விரும்புகிறேன்..   The young generation needs to turn towards agriculture. We need to practice agriculture for our livelihoods regardless of the  educational qualification that we hold. We have to stop the agricultural debts that previous generations have accumulated.  Let us start the changes from our side for our forthcoming generations. We are no more going to be dependent on others for our food. The younger generation has already started loving natural way of living. It may not be easy to change one’s ways but one must try. Hearty thanks to Prabu Mj anna and thewire.in for this article. http://thewire.in/18333/farmers-notebook-aeronautical-engine
Image
மரபணு மாற்று கடுகு வேண்டாம் என்பதற்காகவும், பொதுமக்களுக்கு மரபணு மாற்று விதைகளை பற்றிய விழிப்புணர்வை தெரியப்படுத்தவும் விதை திருவிழா.. நான் செல்கின்றேன்.. சென்னை மக்கள் கண்டிப்பாக வாருங்கள்..  ""உண்ணும் உணவின் உண்மையை அறிந்திருப்போம்.. ஆனால் அதன் பின் உள்ள அரசியலை நாம் அறியோம்""

Return gift தாம்பூல விதைகள்

Image
#Return_gift #seed_gift #birthday_celebration #மரபு_விதைகள் #தாம்பூலம் #alternative_way_seeds_sharing மாற்று வழியில் மரபு விதைகளை பகிர்தல்: சென்னையில் நண்பரின் குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்.. 70குடும்பங்களுக்கான விதை பரிசு.. #விதைகளை ஏன் பாதுகாக்க வேண்டும்?? #விதைகளை ஏன் பகிர வேண்டும்?? இந்த இரண்டு விசயங்கள் அறிந்தவர்கள் விதைகளை பரிசளிக்க முன்வருகின்றனர். விதைகளை எப்படி அடையாளம் காண்பது..பெயர் ஏதும் எழுதப்படாத நிலையில்.. ?? தக்காளி கத்தரி மிளகாய் வெண்டை கொடி காய்கறிகளின் விதைகளை எளிதில் அடையாளம் காணலாம். தினசரி காய்கறி நறுக்கும்போது தாய்மார்கள் காய்கறிகளின் விதைகளை சற்று உற்று நோக்கினால் போதும். தக்காளியை பிழிந்து அதன் விதையை பார்த்து வைத்துக்கொள்ளுங்கள். கத்தரியை அரிந்து விதை எவ்வாறு இருக்கிறது என்பதை அடையாளம் காணுங்கள். மிளகாய் விதையின் காரம் அதன் விதையை எளிதில் அடையாளம் காட்டிவிடும். வெண்டைக்காயை பச்சையாக உண்ணக்கொடுத்து விதையை பார்த்து வைத்துக்கொள்ளுங்கள். கொடி காய்கறிகளின் விதைகளை அறிய காய்களை வாங்கி அதனுள் இருக்கும் விதைகளை அடையாளம் காணுங்கள். பச்சை காய