புதியதோர் உலகம் செய்வோம்

பொதிகை தொலைக்காட்சியில்
ஏப்ரல் 16ஞாயிறு இரவு 8.30 முதல் 9மணி வரையிலும், மறு ஒளிபரப்பு ஏப்ரல் 21 வெள்ளி மாலை 5 மணி முதல் 5.30 மணி வரையிலும் ஒளிபரப்பாகிறது. சுய உணவு தேவையை பூர்த்தி செய்திட வேண்டும்.அதுவே அனைத்திற்கும் ஆதாரம் என்ற ஒற்றை நோக்கத்திற்காக இயங்குபவர்களை இந்த நிகழ்ச்சியில் படம் பிடித்து காட்டியுள்ளார்கள். அரை மணி நேரம் தான் இந்த நிகழ்ச்சி என்றாலும் ஒரு முறை ஒளிபரப்பு செய்திட 80,000ரூ மற்றும் மறு ஒளிபரப்பிற்காக 30,000 என செலவு ஆகும். உலகின் பெரும்பாலான நாடுகளிலும் ஒளிபரப்பாகும். இந்த அரை மணி நேர நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்திட பிரபு.MJ ஒரு தனிமனிதன் செய்த வேலைகளும் சந்தித்த நெருக்கடிகளும் ஏராளம்..

படிப்பை இடைநிறுத்தம் செய்துவிட்டு எனக்கு பிடித்த வேலைகளையெல்லாம் தேடி செய்துகொண்டிருந்த சமயம்.. என்ன வேலை கிடைத்தாலும் செய்யவேண்டுமென தேடி கொண்டிருப்பேன். அந்த சமயத்தில் 2013இல் கிடைத்த முகநூலில் நண்பராக அறிமுகமானவர் "Prabu Mj" அண்ணா.. அவ்வபோது அழைத்து பேசுவார்.. நலம் விசாரிப்பார்.. ஒரு வழியாக விவசாயத்தில் விருப்பம் ஏற்பட்டு இதில் பயணப்பட துவங்கி ஒரு பாதை கிடைத்துவிட அவ்வபோது செல்பேசியில் அழைத்து பாராட்டு வாங்குகேன். ஒரு வருடத்திற்கு முன்பு thewire.in என்ற ஆங்கில இதழுக்கு பரமுவை பற்றிய கட்டுரை எழுத வேண்டுமென்றார். வெறுமனே தோட்டம் அமைப்பதையும் விதைகள் சேகரிப்பதையும் எதற்கு அண்ணா என கேட்டபோது மக்களுக்கு நீ தேவையா இருக்கையோ இல்லையோ.. நீ செய்யற வேலை தேவைப்படும் என கூறி பரிந்துரை செய்தார்..  இப்படியாக சென்றுகொண்டிருக்கையில் கடந்த வருடத்தில் அண்ணாவிடமிருந்து அழைப்பு.. பொதிகையில் புதிதாக "புதியதோர் உலகம் செய்வோம்" என்ற நிகழ்ச்சி துவங்க இருக்கின்றது. சமுதாயத்திற்காக, விவசாயத்திற்காக இயங்கும் இளைஞர்களை மக்களிடம் அடையாளம் காட்டிட வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி, அதில் நீ செய்யும் விசயங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என கூறினார்..
கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சென்னை சென்று 80% படப்பிடிப்பு நடந்தது. மீதம் 20% சென்னையில் அமைத்த தோட்டங்களில் படமெடுக்க கேட்டனர். தோட்டக்காரர்களிடம் அனுமதி வாங்க வேண்டும்..ஆனால் பெரிதாக தோட்டம் ஏதுமில்லை.. அனுமதி வாங்கி கொண்டு அழைப்பதாக கூறிவிட்டு ஊருக்கு வந்தோம்.கடந்த ஒரு வருடம் சரியான சந்தர்ப்பமும் வரவில்லை. தோட்டமும் கிடைக்கவில்லை.. இதற்கிடையில் பல்வேறு விமர்சனங்களை கடந்து ஒரு வருடம் சென்னையில் வேலை செய்ததில் ஏறக்குறைய 200 வீட்டுத்தோட்ட நண்பர்களும் 20-30தோட்டங்களும் மாதிரியாக கிடைத்தது..

அதே சமயம் பிரபு அண்ணாவிடமும் விமர்சனங்கள் நெருக்கடிகளும் சென்றுள்ளது. இந்த பையனை பற்றி நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யாதீர்கள் என்று எச்சரிக்கைகள் சென்றுள்ளது.. அதே சமயம் தொலைக்காட்சி சார்ந்தவர்களும் இதை தவிர்த்து விடலாமென முடிவெடுத்து ஒதுக்கி வைத்துவிட்டனர்.

என்னை முடக்க வேண்டுமானால் எனக்கு ஆதரவாகவும் ஆதாரமாகவும் இருக்கும் அனைத்தையும் முடக்கும் வேலைகள் சுற்றிலும் நடந்துகொண்டிருந்த சமயம் அது..

தம்பி, இவர்களெல்லாம் பார்க்காத பரமனை எனக்கு தெரியும்.. தனிப்பட்ட மனிதனை எனக்கு தெரியாது.. ஒவ்வொருவருக்கும் மூன்று முகங்கள் உள்ளதென ஜப்பான் வாசகம் ஒன்று சொல்கிறது.. மக்களுக்கு தேவையான ஒன்றை, தேவையான ஒன்றை செய்யற.. சமூக வலைதளங்களை கடந்து சாதரண மக்களுக்கும் நீ செய்யும் வேலைகள் செல்லவேண்டி உள்ளது..  அதுக்காக மட்டும்தான் நான் படமெடுத்து இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒளிபரப்ப விரும்புகிறேன் என்றார்..
இந்த ஒரு வருட இடைவெளியில் குறைந்தது நூறு முறையாவது தொடர்பு கொள்ள முயற்சி செய்திருப்பார். ஆனால் இந்த ஒளிபரப்பே வேண்டாம்.. ஒதுங்கி சென்று சிவனேன்னு வேலை செய்வோமென இருந்துவிட்டேன்..
பிரபு அண்ணாவின் முயற்சியால் நாம் அனைத்து மக்களிடமும் சென்றுள்ளோம்.. தனியாக, குழுவாக ""சுய உணவு தேவையை பூர்த்தி செய்திட வேண்டும். அதுவே அனைத்திற்கும் ஆதாரம்"" என்ற விசயத்திற்காக வேலை செய்துகொண்டிருந்ந எங்களை, எங்களின் நோக்கத்திற்காக மட்டும் மக்களிடம் கொண்டு போய் சேர்த்திட்ட பிரபு அண்ணாவிற்கே எங்களின் நன்றிகள் அனைத்தும்..சேரும்.

ஞாயிறு ஒளிபரப்பான அந்த இரவிலிருந்து இன்று வரை அழைப்புகள் வந்துகொண்டே உள்ளது.. அழைத்தவர்களில் அதிகமானோர் கிராமத்து மக்கள்..
தம்பி 30செண்ட்டுல வெண்டை போட்டிருக்கேன் வீட்டுலயே உரம் செய்யலாம்ன்னு சொன்னயே என்னவெல்லாம் செய்யலாமென சொல்லு என ஒரு அம்மா..
நிகழ்ச்சி பார்த்ததிலிருந்து உங்களின் மீது ஒரு ஈர்ப்பு.. நல்ல மனிதனை அடையாளம் கண்டேன்..ஈரோடு வருகையில் கண்டிப்பாக
வீட்டிற்கு வாருங்கள் என ஒரு மருத்துவர்..
எங்க ஊரு ஏரியில வண்டல் மண் எடுக்க விடமாட்டேங்குறாங்க.. இனி பேசும்போது கண்டிப்பா இந்த விசயத்தை அழுத்தமாக பேசுங்க என திருவண்ணாமலை விவசாயி..
பயிற்சி நடந்தா சொல்லுங்க..
உங்க குழுவோடு இணைத்துக்கோங்க..
விதை வேண்டும்..
தோட்டம் அமைக்கனும்..
இப்படியாக 260க்கும் அதிகமானவர்கள் அழைத்து பேசியுள்ளார்கள்..

பிரபு அண்ணா சொன்னது போல கிராமத்து மக்களிடம் பொதிகை தொலைக்காட்சியின் மூலம் ஒரு விசயத்தை ஒரு துளி அளவு கொண்டு சென்றுவிட்டோம்.. இதற்காக தான் இத்தனை முறை அழைத்து சுற்றியுள்ளவர்களை சமாளித்து நினைத்ததை நடத்தி காட்டிவிட்டார்..

மனமகிழ்வோடு இதை எழுதுகிறேன்..
நன்றிகளுடன்..
புதியதோர் உலகம் செய்வோம்.
Prabu Mj
Doordasan tv
Food First Group -Chennai
பரமுவாகிய நான்..

நிகழ்ச்சி பற்றி

                              பிரபு.MJ

அக்பர் அண்ணா

சந்திரா அக்கா

ஜெயலக்ஷ்மி அக்கா

மார்ட்டீனா அக்கா

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY