Posts

Showing posts from May, 2019

தி இந்து நாளிதழ் - மரபு விதைகள்

Image
அதிக தூரம் காய்கறிகளை எடுத்து போக முடியல, அதிக நாள் சேமித்து வைக்க முடியல.. ரொம்ப பெரிய காயாக இருகு அதனால போக்குவரத்துல சிக்கலாக இருக்கு, மக்கள்தொகை அதிகமாக இருக்கறதால அவங்க எல்லாருக்கும் சோறு வேணும் இப்படி ஆயிரகணக்கான காரணங்களை சொல்லி அதிக விளைச்சல் தரும் தரும் வீரிய இரகங்களையும், மரபணு மாற்றப்பட்ட இரகங்களையும் அடுத்தடுத்து கொண்டு வர்றாங்க. விவசாயிகளிடம் விதைகள் பெற்று அதில் ஒட்டு ரகமாக உருவாக்கி அந்த விதைகளை விவசாயிகள் வைத்து கொள்வதற்கே உரிமை இல்லை என உதார் விடும் நிறுவனங்களும் நம்மை கழுகு போல சுற்றி கொண்டு வந்தாலும் மரபு விதைகளை பாதுகாக்க வேண்டுமானால் நாம் உற்பத்தி செய்து நாம் உண்பதும், உள்ளூர் சந்தைகளில் உடனடியாக விற்பனை செய்வதும், அதிக தூரம் அதிக நாள் என வைத்திருக்காமல் சந்தையை குறுகிய வட்டத்தில் #நாம் வைத்திருப்பதன் மூலம் மரபு விதைகளை பாதுகாக்கலாம். இயற்கை வழியில் உற்பத்தி செய்கிறேன் ஆனால் அதற்கு அதிக விளைச்சல் தரும் ஹைபிரிட் ரகங்கள் தான் வேண்டும் என்போரை கடந்த வருடங்களில் கண்டது முதல், இவர்கள் எவ்வாறு இயற்கை விவசாயித்தை பேணுகிறார்கள் என்பதை காண முடிந்தது.. அதே சமயம், இயற்