தி இந்து நாளிதழ் - மரபு விதைகள்

அதிக தூரம் காய்கறிகளை எடுத்து போக முடியல, அதிக நாள் சேமித்து வைக்க முடியல.. ரொம்ப பெரிய காயாக இருகு அதனால போக்குவரத்துல சிக்கலாக இருக்கு, மக்கள்தொகை அதிகமாக இருக்கறதால அவங்க எல்லாருக்கும் சோறு வேணும் இப்படி ஆயிரகணக்கான காரணங்களை சொல்லி அதிக விளைச்சல் தரும் தரும் வீரிய இரகங்களையும், மரபணு மாற்றப்பட்ட இரகங்களையும் அடுத்தடுத்து கொண்டு வர்றாங்க. விவசாயிகளிடம் விதைகள் பெற்று அதில் ஒட்டு ரகமாக உருவாக்கி அந்த விதைகளை விவசாயிகள் வைத்து கொள்வதற்கே உரிமை இல்லை என உதார் விடும் நிறுவனங்களும் நம்மை கழுகு போல சுற்றி கொண்டு வந்தாலும் மரபு விதைகளை பாதுகாக்க வேண்டுமானால் நாம் உற்பத்தி செய்து நாம் உண்பதும், உள்ளூர் சந்தைகளில் உடனடியாக விற்பனை செய்வதும், அதிக தூரம் அதிக நாள் என வைத்திருக்காமல் சந்தையை குறுகிய வட்டத்தில் #நாம் வைத்திருப்பதன் மூலம் மரபு விதைகளை பாதுகாக்கலாம்.

இயற்கை வழியில் உற்பத்தி செய்கிறேன் ஆனால் அதற்கு அதிக விளைச்சல் தரும் ஹைபிரிட் ரகங்கள் தான் வேண்டும் என்போரை கடந்த வருடங்களில் கண்டது முதல், இவர்கள் எவ்வாறு இயற்கை விவசாயித்தை பேணுகிறார்கள் என்பதை காண முடிந்தது..

அதே சமயம், இயற்கை வழியில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் அதிக லாபம் கிடைக்கறது, அதனால் அதை பின்பற்றுங்கள் என கூவும் நிலையில் உள்ள பண்ணாடிமார்களும், அதிகாரம் செய்வோரும், நிறுவனங்களும் நம்மிடம் மீண்டும் மீண்டும் சொல்வது நம் நாட்டில் மக்கட்தொகை அதிகம், அதனால் அதிக விளைச்சல் தரும் வீரிய ரகங்களை பயிரிடுங்கள்..

இவ்வாறு பல காரணங்களால் மரபு விதைகள் காணாமல் போனது. காணாமல் போன விவசாயிகளின் விதைகள் நிறுவனத்திற்கு சொந்தமானதால் அதை நீங்கள் வைத்திருக்க கூடாது என கால்வயிறும் அரைவயிறுமாக அலையும் விவசாயிகளின் மீது நஷ்ட ஈடும் கேட்கிறது.

என் புள்ளைய எவனோ ஒருத்தன் தூக்கிட்டு போயி கோட்டு சூட்டுன்னு மாட்டி விட்டு என ஊருக்கே தூக்கிட்டு வந்துவிட்டு, நீ இருக்கறது எனக்கு சொந்தமான நெலம்..அதனால் வெளியேறுன்னு சொல்ல வைக்கறாங்க.. நம்ம புள்ளைய நம்ம வளர்க்கவில்லை என்றால் இறுதியில் இது தான் சூழல் என புரிந்து கொண்டு மரபு விதைகள் காப்போம்..

பரமேஸ்வரன்,
ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்.
19மே19

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY