Posts

Showing posts from April, 2017

15417 சென்னை மேடவாக்கத்தில் ஒருநாள் வீட்டுத்தோட்ட பயிற்சி முகாம்

Image
ஒரு ஏக்கரில் அல்ல..ஒரு செண்ட் இடத்தில் ஒரு குடும்பத்தின் காய்கறி தேவைகளை எப்படி பூர்த்தி செய்து கொள்வது என்ற ஒற்றை இலக்குடன் தான் எங்களின் பயணம் தொடர்கிறது..  நிரூபித்துவிட்டீர்களா.. சாத்தியமா என கேட்காதீர்கள்.. உங்களால் அதை சாத்தியப்படுத்த இயலும்.. தயவுகூர்ந்து முயன்று பாருங்கள்.. வெறுமனே 1செண்ட் இடத்தை நிலத்திலோ மாடியிலோ ஒதுக்கி தோட்டம் அமைத்து உங்கள் குடும்பத்திற்கு தேவையான காய்கறி கீரைகளை மட்டும் அதில் உற்பத்தி செய்து பயன்படுத்துங்கள்.. தேவையை பூர்த்தி செய்ய முடிகிறது.. தேவைக்கு அதிகமாகவே கிடைக்கிறதே என்ற பதிலை தான் உங்களிடம் எதிர்பார்க்கின்றோம்.. அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி கீரைகளின் பெயர்களையெல்லாம் பட்டியலிடுங்கள்.. நல்ல தரமான விதைகளை கையில் வைத்துக்கொள்ளுங்கள். மண்ணை நன்கு வளமாக்கிக்கொண்டு விதைப்பு செய்திடுங்கள்.. மற்றதை பிறகு பார்ப்போம். நினைவில் கொள்ள வேண்டியது ஒன்று தான்.. அறுவடை தினசரி இருக்க வேண்டுமல்லவா..அப்படியானால் விதைப்பும் தினசரி இருக்க வேண்டும்.. புரியவில்லையா.. 5வகை கீரைகளை 2சதுர அடி பரப்பிற்கு ஒரு ரக கீரை என விதைக்க வேண்டும். ஆனால் ஒரே நாளில் விதைக்காமல்

புதியதோர் உலகம் செய்வோம்

Image
பொதிகை தொலைக்காட்சியில் ஏப்ரல் 16ஞாயிறு இரவு 8.30 முதல் 9மணி வரையிலும், மறு ஒளிபரப்பு ஏப்ரல் 21 வெள்ளி மாலை 5 மணி முதல் 5.30 மணி வரையிலும் ஒளிபரப்பாகிறது. சுய உணவு தேவையை பூர்த்தி செய்திட வேண்டும்.அதுவே அனைத்திற்கும் ஆதாரம் என்ற ஒற்றை நோக்கத்திற்காக இயங்குபவர்களை இந்த நிகழ்ச்சியில் படம் பிடித்து காட்டியுள்ளார்கள். அரை மணி நேரம் தான் இந்த நிகழ்ச்சி என்றாலும் ஒரு முறை ஒளிபரப்பு செய்திட 80,000ரூ மற்றும் மறு ஒளிபரப்பிற்காக 30,000 என செலவு ஆகும். உலகின் பெரும்பாலான நாடுகளிலும் ஒளிபரப்பாகும். இந்த அரை மணி நேர நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்திட பிரபு.MJ ஒரு தனிமனிதன் செய்த வேலைகளும் சந்தித்த நெருக்கடிகளும் ஏராளம்.. படிப்பை இடைநிறுத்தம் செய்துவிட்டு எனக்கு பிடித்த வேலைகளையெல்லாம் தேடி செய்துகொண்டிருந்த சமயம்.. என்ன வேலை கிடைத்தாலும் செய்யவேண்டுமென தேடி கொண்டிருப்பேன். அந்த சமயத்தில் 2013இல் கிடைத்த முகநூலில் நண்பராக அறிமுகமானவர் "Prabu Mj" அண்ணா.. அவ்வபோது அழைத்து பேசுவார்.. நலம் விசாரிப்பார்.. ஒரு வழியாக விவசாயத்தில் விருப்பம் ஏற்பட்டு இதில் பயணப்பட துவங்கி ஒரு பாதை கிடைத்துவிட அவ்வப

கோடம்பாக்கத்தில் பாம்பு புடலை விதை சேகரிப்பு

Image
கோடம்பாக்கத்தில் பாம்பு புடலை விதை சேகரிப்பு: (Long one is 139 inches,other one is 120inches)  சென்னை வீட்டுத்தோட்ட நண்பர்கள் வாட்ஸ்அப் குழுவில் மேற்கண்ட படமும், அதனுடன் அம்மாவின் கையிலிருக்கும் புடலையின் நிற அளவும் கொடுக்கப்பட்டு 8/4/17 அன்று  செய்தி வந்தது. தகவல் கேட்டபொழுது அம்மாவின் பெயர் வசந்தி என்றும், சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார் என்றும் தகவல் கிடைத்தது. அன்றைய தினம் சென்னையிலிருந்ததால் உடனே வசந்தி அம்மாவை தொடர்பு கொண்டு பரமுவை அறிமுகம் செய்துகொண்டு படத்தில் உள்ள தகவலின் உண்மை நிலையை கேட்டபோது. தனது வீட்டு தோட்டத்தில் விளைந்தது தான் என கூறினார். இது போன்ற ரகங்கள் அரிதானதாக உள்ளதால் விதையை பாதுகாப்பதை பற்றி தகவல் தருகிறேன் அதன்படி செய்யுங்கள் என்றேன். அடுத்த நாள் வீட்டிற்கு வரும்படி கேட்டுக்கொண்டார். அடுத்த நாள் 9/4/17 சென்னை வீட்டுத்தோட்ட நண்பர் ராஜேஸ்வரி அம்மாவுடன் மதியத்திற்கு மேல் அவரது வீட்டை அடைந்தோம். விதையை நான் போட்டேனா, அல்லது தானாக வளர்ந்ததா என தெரியவில்லை, ஒரே ஒரு கொடி தான் உள்ளது, என்றார்.. அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு சிறிய இடத்தில் உ

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

Image
மரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு..  native seeds collection.. நம் தமிழகத்தின் மரபு விதைகளை சேகரித்து வருகிறோம். அந்த விதைகளை விவசாயிகளுக்கும், வீடுகளில் தோட்டம் அமைப்பதற்கும் சிறிதளவு கொடுத்து வருகிறோம். உங்கள் பகுதிகளில் ஏதேனும் காய்கறி, கீரை, மூலிகை, நெல், சிறுதானியம், பருப்பு வகைகள், மரங்கள் என நம் மரபு விதைகள் எதுவாக இருந்தால் எங்களுக்கு கொடுக்கலாம். எங்களிடமும் சில விதைகள் உள்ளது அவ்விதைகள் தேவையென்றாலும் எங்களிடம் வாங்கி பயிர் செய்து விதைகளை பாதுகாக்கலாம். We r collecting native variety seeds of grains, vegetables, tree seeds. We r collecting-conserving-sharing & seed swap our collections. • 2014-18ஆம் ஆண்டுகளில் சேகரித்த 130க்கும் மேற்பட்ட மரபு விதைகளை  பகிர்ந்து கொள்கிறோம். விதைகள் தேவைப்படுவோருக்கு கொரியர் செய்கிறோம்..we r ready to give 130 variety of seeds collection தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் செய்யவும் +918526366796 _________________ 6 ரக தக்காளி: 6 variety tomato • •நாட்டு தக்காளி Tomato bush round • • கொடி தக்காளி tomato vine • • ஆரஞ்சு இன