Posts

Showing posts from October, 2016

One day terrace garden workshop October:2016

Image
One day terrace gardening workshop & seeds sharing event in #chennai_madipakkam (October 9) #Covai_peelamedu (October 16) _______________________ Chennai training detail: Date: 9.10.16 Sunday Time: 10am-4pm Venue: 40, MGR Road, Gandhinagar, madipakkam, Chennai. For registration:  SMS to 8526366796 <name> <ch-oct9> _____________________ Coimbatore training detail: Date: 16.10.16 Sunday  Time: 10am- 4pm Venue: 33 D, Balan nagar,  MKP road, near KVB ATM,  peelamedu, Coimbatore. For registration:  SMS to 8526366796 <name> <cbe-oct16> ___________________ Seeds sharing and selling Time: 4pm-5pm Training fee: 500₹ for Training and lunch Trainings are conducted by:   #Aadhiyagai  செய்முறையுடன் கூடிய ஒருநாள் வீட்டுத்தோட்ட பயிற்சி முகாம்: தம்பி, வணக்கம் பா.. நான் விவசாயத்துக்கு புதுசு , எனக்கு விவசாயத்தை பத்தி ஒன்னும் தெரியாது .. ஆனா ஏதோ ஒன்னு பண்ணனும் .. எங்க வீட்டுக்கு வேணங்குற காய்கறிகளையாவது நான் உற்ப

Marriage Return gift தாம்பூலப்பை விதைகள்

Image
#Return_gift_பரிசு #Marriage_திருமண_தாம்பூலம் #Native_seeds_நாட்டு_விதைகள் #home_seed_banks_வீட்டுக்கு_வீடு_விதைவங்கி #save_seeds_விதை_பாதுகாப்பு #share_seeds_விதை_பகிர்தல் #awareness_விழிப்புணர்வு Paramez Aadhiyagai 8526366796 WHATSAPP for further details. நண்பர்களுக்கு வணக்கம்.                               2014 ஆம் ஆண்டு முதல் மரபு விதைகளை சேகரித்து வருகிறோம். கிடைப்பது 5விதையோ 10விதையோ தோட்டத்தில் விதைத்தால் மண்ணும் மழையும் பல மடங்கு விதைகளை திருப்பி கொடுத்தன.. அவ்வாறு தோட்டத்தில் கிடைத்த விதைகளை பொட்டலங்களாக்கி மரபு விதைகள் கேட்போருக்கு கொடுத்து வருகிறோம். விதைகளை யாருக்கும் நிறைய கொடுப்பதில்லை. 10,20 விதைகளாக கொடுக்கின்றோம். அவ்வாறு வாங்கி செல்லும் நண்பர்கள் விதைப்பெறுக்கம் செய்து அவர்கள் தேவை போக மீதமுள்ள விதைகளை பகிர்கின்றனர். இவ்வாறு விதைகளை பகிர்ந்து வரும் சூழலில் நிறைய நண்பர்கள் தங்களுடைய வீட்டில் நடக்கும் திருமணம், வளைகாப்பு, புதுமனை புகுவிழா, தொழில் தொடங்கும் விழா, ஊர் திருவிழா என பல்வேறு நிகழ்வுகளுக்கு அவ்வபோது விதைகளை கேட்டதை தொடர்ந்து "தாம்பூல விதைப்ப

மரபு ரக பருத்தி விதை சேகரிப்பு

Image
#நாட்டு_ரக_பருத்தி #செம்பருத்தி #கருங்கண்_பருத்தி #பல்லாண்டு_பருத்தி இப்படி பல பெயர் கொண்ட நம் மரபு ரக பருத்தி ஆங்காங்கே கோயில்களிலும், சில வீடுகளிலும் தெரிந்தோ தெரியாமலோ வாழ்ந்து வருகிறது.. கடந்த வருடம் சேகரித்த விதைகளை சில நூறு பேருக்கு கொடுத்திருந்தோம். இந்த வருடம் விதை தேடிக்கொண்டிருந்தபோது கண்ணில் தென்பட்டுள்ளது.. நாள்: அக்டோபர் 4 செவ்வாய் இடம்: ஈரோடு நசியனூர் அருகே உள்ள கந்தாம்பாளையம். தோட்டம் அமைக்க வந்த போது கிடைத்துள்ளது.. முகநூல் நண்பர் Aravind Murugesan க்கு நன்றிகள் பல.. இந்த ரக பருத்தி பஞ்சில் திரி போட்டு விளக்கு ஒளிர்வது வீட்டிற்கு நல்லது, சிவனுக்கு உகந்தது என கூறுகிறார்கள், இப்பொழுது யாரும் பருத்திபால் குடித்திருக்க வாய்ப்பு மிக குறைவு.. பருத்திபால் செய்து  நாம் குடிக்கவும் மாடுகளுக்கு பருத்திக்கொட்டை தீவனமாகவும் கொடுத்ததும் இவ்வாறான பாரம்பரிய ரகங்களை தான். இன்றைய பொழுதில் ஒட்டு ரக பருத்திகளும் பீ.டி பருத்திகளும் தான் விவசாயிகள் பயிரிடுகறார்கள். நம்மால் இயன்றவரை தோட்டங்களிலும் வீடுகளிலும் மாடித்தோட்டங்களிலும் இந்த பருத்தியை பயிர் செய்து மரபை பாதுகாப்போம். நன

செடி எப்படி வளர்த்தனும் எனவும், நாம எப்படி வாழனும் எனவும் நாம தான் முடிவு செய்யனும்

Image
இலையில ஓட்டை விழுந்துட்டா பூச்சி தாக்குதல் நோய் தாக்குதல் நடந்துட்டா அந்த இலைகளை பிடுங்கி போட சொல்றாங்களே நீங்க ஏன் அப்படியே விட சொல்றீங்க..?? ஒடஞ்ச கையை வச்சிக்கிட்டு நம்ம வேலை செய்யறதில்லையா.. கை ஒடஞ்சிருந்தாலும் உடம்போடு இருக்குறத நம்ம விரும்புவோமா, இல்லை இந்த கை வேண்டான்னு வெட்டி எறிய நினைப்போமா!! ஒடஞ்ச கையை ஒத்தாசைக்கு வச்சுக்கிட்டு நம்மனால பொழப்பு நடத்த முடியும்னா நோய்,பூச்சி தாக்குதலால பாதிக்கப்பட்ட இலையை வச்சுக்கிட்டு ஒளிச்சேர்க்கை செஞ்சு பொழச்சுக்க செடிகளுக்கு தெரியாதா என்ன!!?? நம்ம கையும் காலும் நல்லா இருக்குங்கறத வச்சு 100% ஆரோக்கியமா இருக்கோம்னு நம்மனால சொல்லீட முடியுமா என்ன!?? நமக்குள்ளயும் நோய் தாக்குதல் நடந்துக்கிட்டு தா இருக்கும்.. அதை எதிர்த்து நம்ம ஒடம்பும் சண்டை போட்டு நம்மளையும் வாழ வச்சிக்கிட்டு தா இருக்கும்.. அதுமாதிரி தா செடிகளும்.. பூச்சி நோய்ன்னு தாக்குதல் நடந்தாலும் அதை எதிர்த்து வாழ்ந்துட்டு காய்ச்சிக்குட்டே இருக்கும்.. நம்ம வளர்த்தற செடி பச்சை பசேரென மட்டுமே இருக்கனும்னு நம்ம நெனைக்க கூடாது.. அதுக்காக நம்ம செய்யற பராமரிப்பும் பாதுகாப்பும் அளவுக்கு அத