One day terrace garden workshop October:2016
One day terrace gardening workshop & seeds sharing event in #chennai_madipakkam (October 9)
#Covai_peelamedu (October 16)
_______________________
Chennai training detail:
Date: 9.10.16 Sunday
Time: 10am-4pm
Venue: 40, MGR Road, Gandhinagar, madipakkam,
Chennai.
For registration:
SMS to 8526366796 <name> <ch-oct9>
_____________________
Coimbatore training detail:
Date: 16.10.16 Sunday
Time: 10am- 4pm
Venue: 33 D, Balan nagar,
MKP road, near KVB ATM,
peelamedu, Coimbatore.
For registration:
SMS to 8526366796 <name> <cbe-oct16>
___________________
Seeds sharing and selling Time: 4pm-5pm
Training fee: 500₹ for Training and lunch
Trainings are conducted by:
#Aadhiyagai
செய்முறையுடன் கூடிய ஒருநாள் வீட்டுத்தோட்ட பயிற்சி முகாம்:
தம்பி, வணக்கம் பா.. நான் விவசாயத்துக்கு புதுசு , எனக்கு விவசாயத்தை பத்தி ஒன்னும் தெரியாது .. ஆனா ஏதோ ஒன்னு பண்ணனும் .. எங்க வீட்டுக்கு வேணங்குற காய்கறிகளையாவது நான் உற்பத்தி செஞ்சுக்கனும் .. உன்னால உதவ முடியுமா ..!!!!
தம்பி,எங்க வீட்டு மாடில கொஞ்சம் இடம் இருக்கு .. அதுல எங்க குடும்பத்துக்கு வேணங்குற காய்கறி கீரைகள விளைவிச்சுக்க முடியுமா பா.....!!!
தம்பி, எங்க வீட்டுக்கு பக்கத்துல கொஞ்சம் காலி இடம் இருக்கு பா..அதுல எங்க வீட்டுக்கு வேணுங்குற காய்கறிகளை உற்பத்தி செஞ்சுக்க முடியுமா ?????
தம்பி, நாங்க எங்க வீட்டுல காய்கறி தோட்டம் போட்டிருக்கோம் .. ஆனா ஒன்னும் சரியா வர மாட்டேங்குது பா .. என்ன செய்யலாம் !!!
இந்த பூச்சிகளோட தொந்தரவு தாங்க முடியல பா, என்ன பண்ண!!!
செடி வளர்க்கறேன் .. அதுக்கு என்ன உரம் போடறது பா .. பஞ்சகாவியம்லாம் எங்க கிடைக்கும் ..???
தம்பி மாடியில தொட்டி வச்சு தோட்டம் அமச்சா மாடி தாங்குமா பா. .??
தம்பி தண்ணி விழுகறனால மாடிக்கு ஏதும் தொந்தரவு இருக்குமா பா..!!!
இந்த நாட்டு ரக விதைகளெல்லாம் எங்க கிடைக்கும் ..??
ஒவ்வொரு முறையும் விதை வாங்கி தான் ஆகனுமா !!!
விதைகளையெல்லாம் எப்படி பாதுகாத்து வைக்கறது ..
நீ எப்ப பாத்தாலும் மண்ண உயரமா போட்டு மேட்டுப்பாத்தி, அப்பறம் வட்ட வட்டமா பாத்தி போட்டு வட்டப்பாத்தினு சொல்றயே ... அது ஏன் பா அப்படி போடற ?? அதனால என்ன பயன் !!
தம்பி என்னால தோட்டத்த பராமரிச்சுக்க முடியுமா ..எனக்கு வயசாயிடுச்சு பா !!!
தம்பி , என் வீட்டு மாடியில இருக்குற தோட்டத்துக்கு சொட்டுநீர் போடனும் .. எனக்கு கால்வலி .. வயசாயிடுச்சு .. வெளியில கேட்ட நெறைய காசு கேட்குறாங்க .. உனக்கு அதை பத்தி ஏதும் தெரியுமா ..!!
தம்பி காலி இடம் இருக்கு ... அதுல கட்டாந்தரையாக இருக்கு பா ..அங்க என்ன பா பண்றது???
இப்படி ஆயிரம் சந்தேகங்களோட நகரத்து நண்பர்கள் அழைக்கின்றனர் ... அவர்களுக்காக ஒரு பயிற்சி கொடுக்கலாம்னு முடிவு செஞ்சு ஏற்பாடுகள் நடந்துகொண்டு உள்ளது ..
இந்த வீட்டுத்தோட்டம் கட்டாயம் தேவை என நினைக்கும் நண்பர்களுக்கான துவக்க நிலை பயிற்சி .. இது வெறும் பயிற்சியாக இல்லை ..முழு அனுபவ பகிர்வு .. ..
100சதுர அடி இடம் ஒரு நபருக்கு தேவையான காய்கறி கீரை போன்ற அத்தியாவசிய உணவு தேவையை பூர்த்தி செய்யும் .. அந்த இடம் மாடியாகவோ , நிலமாகவோ , எதற்கமே ஆகாது என நீங்கள் நினைக்கும் பாறை நிலமாகவோ , கட்டாந்தரையாகவோ இருக்கலாம் ..
தற்சார்பு வாழ்க்கை என்ற ஒன்று உள்ளது .. அது, நம் வாழ்வை நாம் நமக்காக வாழும் ஒரு வாழ்க்கை முறை ..அந்த வாழ்க்கை முறைக்கு நம்மை இட்டு செல்ல முதல் அடி, நம் உணவை நாம் உற்பத்தி செய்து கொள்வது ..
முதல் அடியை எடுத்து வைக்கும் நண்பர்களுக்காக நண்பர்களை வரவேற்கின்றோம் ..
நம்மை சுற்றிலும் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி தோட்டம் அமைத்து ஒரு குடும்பத்திற்கான காய்கறி தேவையை ஒரு செண்ட் இடத்தில் பூர்த்தி செய்துகொள்ள இயலும்..என்ற கருவை கொண்டு பயிற்சி நடத்தப்படுகிறது.
பயிற்சி:
1)ஏன் வேண்டும் வீட்டுத்தோட்டம்
2)வீட்டுத்தோட்டம் மூலம் என்னென்ன தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்து கொள்ள இயலும்.
3)என்னென்ன செடிகள் உங்களுக்கு தேவை
4)எவ்வளவு இடம் உங்களுடைய விருப்பமான தோட்டத்திற்கு தேவை
5)400சதுர அடி இடத்தை எப்படி முழுமையாக பயன்படுத்துவது
6)பயிர்களின் சாகுபடி முறைகள்
7)உங்கள் வீட்டின் தோட்டத்தை எப்படி முழுமையாக பயன்படுத்துவது
8)பயிர் சுழற்சி முறைகள்
9)உங்கள் வீட்டின் கொடி காய்கறிகளுக்கு எப்படியெல்லாம் பந்தல் அமைத்து தேவையை பூர்த்தி செய்வது
10)தினந்தோறும் கீரையை அறுவடை செய்யும் சுழற்சி முறைகள்.
11)மூலிகைகளை, பூக்களை பற்றிய கலந்துரையாடல்
12)மரபு ரக விதைகள் பற்றிய விழிப்புணர்வு
13)விதைகளை எங்கெல்லாம் சேகரிப்பது
14)விதைகளை முறையாக வீட்டில் பராமரிப்பது, பாதுகாப்பது.
15)பூச்சிப்பராமரிப்பு
16)பூச்சிகள் பற்றிய விழிப்புணர்வு
17)பயிர்களை தாக்கும் நோய்களும் அதலிருந்து செடிகளை பாதுகாக்கும் முறைகளும்
18)வீட்டு கழிவுகளை தினந்தோறும் தோட்ட தேவைக்கு பயன்படுத்தும் முறைகள்..
_____________________________
தங்களுடைய வீட்டில் புதிதாக அமைக்க விரும்பினால் அந்த இடத்தின் புகைப்படத்தையோ, அல்லது தற்போதைய வீட்டுத்தோட்டத்தின் புகைப்படங்களை கொண்டு வாருங்கள்.. தோட்டத்தை வடிவமைப்பதை பற்றியும் ஆலோசனை பெற்றக்கொள்ளலாம்..
Regards,
Paramez Aadhiyagai..
8526366796
ஆதியகை வீட்டுத்தோட்ட பயிற்சி குழு.
Comments
Post a Comment