Posts

Showing posts from February, 2023

இணையவழியில் வீட்டுத்தோட்ட மாடித்தோட்ட பயிற்சி

Image
இணையதளம் மூலமாக ஒரு மாத கால வீட்டுத்தோட்ட வகுப்புகள்.. என் வீட்டிற்கு தேவையான உணவை நானே உற்பத்தி செய்துகொள்ள விரும்புகிறேன். ஆனால் அதற்கான அடிப்படையான விசயங்கள் ஏதும் தெரிவதில்லை..என நினைக்கும் நண்பர்களுக்காக..  எட்டு வருடங்களாக தோட்டம் அமைப்பதில் நாங்கள் கற்ற விசயத்தை  ஒரு மாத பயிற்சியாக கற்றுத்தருகிறோம். இந்த பயிற்சி வீட்டுத்தோட்டம் அமைப்பவர்களை பயிற்றுனர்களாகவே மாற்றி விடுகிறது. நீங்கள் உங்களுக்காக தோட்டம் அமைத்திருந்தாலோ, மற்றவர்களுக்கு தோட்டம் அமைத்து தரும் வேலையை செய்து வருபவர்களாகவோ இருக்கலாம்.. அடிப்படையான விசயங்களை  கற்றுக்கொண்டு செயல்படுங்கள்.. செயல்படுத்துங்கள்.. வாட்ஸ்அப் மூலம் வகுப்புகளை பயிற்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.  ____________________ 2023 மார்ச் 1 அன்று பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது. மார்ச் 30 வரை வகுப்புகள் நடைபெறும். முன்பதிவு செய்திட  கீழ்கண்டவாறு +916380845836 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்திடுங்கள் _______________________ கலந்துரையாடலும்  வீட்டுப்பாடங்களுமாக கூட பயிற்சிகள் இருக்கும். நோக்கம் ஒன்று தான்.. 400-500சதுர அடி இடப்பரப்பு 4,5பேர் உறுப்

விவசாயிக்கு வரவும் செலவும்

ஏக்கருக்கு 70-80 ஆயிரம் செலவு செஞ்சு, நாலு மாசத்துல ஒரு சாகுபடி முடிச்சு அறுவடை பண்றோம். 5 ஏக்கர் வச்சுருக்குற விவசாயி குறைந்தபட்சம் 3 லட்சம் செலவு செய்யறாரு.. கிடைச்ச அறுவடை மூலமா 3 லட்சத்துக்கு மேல விற்பனை இருந்தால் தான்  நட்டமில்லாம கடனில்லாம விவசாயத்தை கொண்டுபோக முடியும். இது எல்லா விவசாயும் சந்திக்கிற பிரச்சனை.. விவசாயிக்கு இன்னொரு சவால் இருக்கு.. ஒரு வருசத்துக்கு 1லட்ச ரூபாய்ல இருந்து 1.5 லட்ச ரூபாய்க்கு குடும்பத்துக்கான உணவு செலவுக்காக செலவழிக்கிறார். விவசாயம் பண்றது மூலமா வருவாய் வருதோ இல்லையோ ஒவ்வொரு வருசமும் தன்னோட பாக்கெட்ல இருந்து ஒன்றரை லட்சத்தை எடுத்து வெளியே கொடுத்துட்டு தான் இருக்காரு.. அதை குறைப்பதற்காக கொஞ்சம் நிலத்துல தேவையான உணவு பயிர்களை பயிரிட்டு உணவு தேவையை பூர்த்தி செய்துக்கிட்டா இந்த செலவை குறைக்க முடியும். இனி வரக்கூடிய காலத்தில் இதை செய்யலனா ரொம்ப கஷ்டம்.. Paramez Aadhiyagai