விவசாயிக்கு வரவும் செலவும்
ஏக்கருக்கு 70-80 ஆயிரம் செலவு செஞ்சு, நாலு மாசத்துல ஒரு சாகுபடி முடிச்சு அறுவடை பண்றோம்.
5 ஏக்கர் வச்சுருக்குற விவசாயி குறைந்தபட்சம் 3 லட்சம் செலவு செய்யறாரு.. கிடைச்ச அறுவடை மூலமா 3 லட்சத்துக்கு மேல விற்பனை இருந்தால் தான் நட்டமில்லாம கடனில்லாம விவசாயத்தை கொண்டுபோக முடியும். இது எல்லா விவசாயும் சந்திக்கிற பிரச்சனை..
விவசாயிக்கு இன்னொரு சவால் இருக்கு.. ஒரு வருசத்துக்கு 1லட்ச ரூபாய்ல இருந்து 1.5 லட்ச ரூபாய்க்கு குடும்பத்துக்கான உணவு செலவுக்காக செலவழிக்கிறார்.
விவசாயம் பண்றது மூலமா வருவாய் வருதோ இல்லையோ ஒவ்வொரு வருசமும் தன்னோட பாக்கெட்ல இருந்து ஒன்றரை லட்சத்தை எடுத்து வெளியே கொடுத்துட்டு தான் இருக்காரு.. அதை குறைப்பதற்காக கொஞ்சம் நிலத்துல தேவையான உணவு பயிர்களை பயிரிட்டு உணவு தேவையை பூர்த்தி செய்துக்கிட்டா இந்த செலவை குறைக்க முடியும்.
இனி வரக்கூடிய காலத்தில் இதை செய்யலனா ரொம்ப கஷ்டம்..
Paramez Aadhiyagai
Comments
Post a Comment