Posts

Showing posts from October, 2022

பாம்பு புடலை snake gourd long

Image
பாம்பு புடலை விதைகள் கேட்டிருந்த நண்பர்களுக்கு வணக்கம். தற்போது பாம்பு புடலை விதைகள் உள்ளது. தேவைப்படும் நண்பர்கள்  +91 85263 66796 எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் முகவரி அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.  #பாம்பு_புடலை  #snakegourd_long  #traditionalseeds  #nativeseeds  #heirloomseeds  #aadhiyagaifarms #பாரம்பரியவிதை  #மரபுவிதை  #நாட்டுவிதை  நன்றி ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் Aadhiyagai Traditional Seedsavers 27.10.22  

கரூர் கத்தரி (traditional seeds of tamilnadu)

Image
 #கரூர்_கத்தரி •பாரம்பரிய கத்தரி வகை. •ஆளுயரம் வளரும் செடி. •நீண்டகால பயிர்.  •அனைத்து வகை உணவுக்கும் ஏற்றது. •நோய், பூச்சி தாக்குதல் மிக குறைவு •கரூர், வெள்ளகோவில், காங்கேயம் வரை பரவலாக வீடுகளில் உள்ளது. •விதை பகிர்ந்தவர் பஜ்ஜி போன்ற பலகாரம் செய்கிறார். பஜ்ஜி போடுவதற்கு ஏற்றதாக இந்த கத்தரி இருப்பதாக கூறினார். •விதை சேகரிப்பு பற்றிய வீடியோ: https://youtu.be/IOWzl-uLdQA •கத்தரியிலிருந்து விதை எடுத்த வீடியோ: https://youtu.be/T7MKQKGChMU விதை 2023 ஆடிபட்டத்தில் கிடைக்கும்.  நன்றி, ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் Aadhiyagai Traditional Seedsavers  18.10.2022

மரபியல் பன்முகத்தன்மை விழா Genetic Diversity Fair

Image
 மரபியல் பன்முகத்தன்மை விழா  Genetic Diversity Fair நாள்: 16.10.2022 ஞாயிறு நேரம்: காலை 9.30 மணி முதல் இடம்: காந்திகிராம வேளாண் அறிவியல் மையம் (KVK Dindigul) நிகழ்வில் ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் சார்பில் "மரபு விதைகளின் பயன்பாடு" பற்றி பேசவுள்ளோம். மரபு விதைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. வீட்டுத்தோட்டத்திற்கான பாரம்பரிய காய்கறி விதைகளும் கிடைக்கும்.  நன்றி Aadhiyagai Paramez  +918526366796 Aadhiyagai Seedsavers Farm  ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்

2022 ஆதியகை மரபு விதை பட்டியல்

Image
மரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு.. ஐப்பசி வரை விதைப்பதற்கு தேவையான மரபு  விதைகள் / பாரம்பரிய விதைகள் / நாட்டு விதைகள் பகிர்கிறோம்.  https://t.me/aadhiyagai/887 விதைகளின் பெயர்களோடு  வளரியல்பு growth type - பட்டம் sowing month - விதைப்பு ஆழம் depth - இடைவெளி plant distance - முளைப்பு நாள் - avg germination period - காய்ப்பு yield starts - ஆயுள் life - விதைநேர்த்தி seed treatment - விதைப்பு முறை - sowing type - pot size (L*B*H)feet ஆகிய தகவல்களையும் பகிர்ந்துள்ளோம்.  விதைகள் பெறுவதற்கு தாங்கள் +918526366796 எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்ப வேண்டிய தகவல்   1)தங்களின்பெயர், 2) முழு முகவரி, 3) இரண்டு தொடர்பு எண்,  4) தேவைப்படும் விதைகளின் பட்டியல்  5) ST கொரியர் மூலம் அனுப்ப வேண்டுமா அல்லது தபால் மூலம் அனுப்ப வேண்டுமா  ஆகியவற்றை +918526366796 எண்ணிற்கு அனுப்பவும். நன்றி  ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் aadhiyagai seedsavers. நம் தமிழகத்தின் மரபு விதைகளை 2014 ஆம் ஆண்டு முதல் சேகரித்து வருகிறோம். அந்த விதைகளை விவசாயிகளுக்கும், வீடுகளில் தோட்டம் அமைப்பதற்கும் கொடுத்து வருகிறோம

The Smiles of Three Generation

Image
 Smiles of three generation  #agamagilan #paramu #arumugam  பதிமூன்று வயசுல மேழி புடிச்சுவனுங்க நானு.. என்று தான் தோட்டத்திற்கு வரும் அனைவரிடமும் அறிமுகமாகி கொள்வார் என் தந்தை ஆறுமுகம். ஏறக்குறைய 50 வருடங்களுக்கும் மேலாக விவசாயத்தில் அனுபவமும் வாழ்க்கையின் போராட்டமும் தான் இவரின் பயணம். டென்னிஸ் விளையாட்டு வீரர் பெடரர் தன்னுடைய இறுதி ஆட்டங்கள் அனைத்திலும் தோல்வி கண்டதாக ஒரு பதிவை கடந்த மாதம் படித்தேன். அப்பாவின் விவசாய பயணங்களும் அப்படி தான். மூன்று மகன்களும் ஒரு மகளும் என 4 வாரிசுகள். நாங்கள் அனைவரும் திருமணத்திற்கு பிறகு வெவ்வேறு பகுதிக்கு வந்துவிட கடந்த சில வருடங்களாக நாங்கள் இருக்கும் நகரத்தில் இருந்து 18 கிமீ தொலைவில் உள்ள கிராமத்தில் அம்மாவும் அப்பாவும் மட்டும் தனியாக விவசாயம் செய்துவந்தார்கள். அவரின் விருப்பபடி மட்டுமே விவசாயம் செய்யவிரும்பியதால் அவரை தொந்தரவு செய்யவில்லை. கடந்த வருடத்தில் விவசாயத்தில் மிக மோசமான சூழ்நிலை அப்பாவிற்கு. பருத்தி வெங்காயம் நிலக்கடலை என மாற்றி மாற்றி பயிரிட்டார். கடைசியில் ஐந்தாறு லட்சம் நட்டமும் கடனும்...சரியான உணவும் ஓய்வும் இல்லாமல் இருவருக்கும் உ