2022 ஆதியகை மரபு விதை பட்டியல்
மரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு..
ஐப்பசி வரை விதைப்பதற்கு தேவையான மரபு விதைகள் / பாரம்பரிய விதைகள் / நாட்டு விதைகள் பகிர்கிறோம்.
https://t.me/aadhiyagai/887
விதைகளின் பெயர்களோடு வளரியல்பு growth type - பட்டம் sowing month - விதைப்பு ஆழம் depth - இடைவெளி plant distance - முளைப்பு நாள் - avg germination period - காய்ப்பு yield starts - ஆயுள் life - விதைநேர்த்தி seed treatment - விதைப்பு முறை - sowing type - pot size (L*B*H)feet ஆகிய தகவல்களையும் பகிர்ந்துள்ளோம்.
விதைகள் பெறுவதற்கு தாங்கள் +918526366796 எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்ப வேண்டிய தகவல்
1)தங்களின்பெயர்,
2) முழு முகவரி,
3) இரண்டு தொடர்பு எண்,
4) தேவைப்படும் விதைகளின் பட்டியல்
5) ST கொரியர் மூலம் அனுப்ப வேண்டுமா அல்லது தபால் மூலம் அனுப்ப வேண்டுமா
ஆகியவற்றை +918526366796 எண்ணிற்கு அனுப்பவும்.
நன்றி
ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் aadhiyagai seedsavers.
நம் தமிழகத்தின் மரபு விதைகளை 2014 ஆம் ஆண்டு முதல் சேகரித்து வருகிறோம். அந்த விதைகளை விவசாயிகளுக்கும், வீடுகளில் தோட்டம் அமைப்பதற்கும் கொடுத்து வருகிறோம் . உங்கள் பகுதிகளில் ஏதேனும் காய்கறி, கீரை, மூலிகை, நெல், சிறுதானியம், என நம் மரபு விதைகள் எதுவாக இருந்தாலும் எங்களுடைய விதை சேகரிப்பிற்கு கொடுக்கலாம். எங்களிடமும் சில விதைகள் உள்ளது அவ்விதைகள் தேவையென்றாலும் எங்களிடம் வாங்கி பயிர் செய்து விதைகளை பாதுகாக்கலாம்.
விவசாயம் செய்யும் அளவிற்கு விதைகள் கொடுப்பதில்லை. வருங்காலத்தில் தங்களுக்கு தேவையான விதைகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும், பாரம்பரிய விதைகள் புழக்கத்திலேயே இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே குறைந்த அளவில் விதைகள் கொடுக்கப்படுகிறது.
அந்த பருவத்தில் விவசாயம் செய்ய கடைகளைத் தேடி ஓடாமல் முந்தைய பருவத்திலேயே அதற்கான விதைகளை பக்குவமாக எடுத்து வைப்பது சிறந்தது..
மரபு விதைகளை சேகரிப்பதும் பரவலாக்குவதும் தான் நோக்கம்.. தங்களிடம் மரபு விதைகள் ஏதேனுமிருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்..
விதை பட்டியல் Pdf File: https://drive.google.com/drive/folders/1_sKYdnB5x2xLvnnllaz9RKyH7xjm1pjj
#செடிவகை_காய்கறிகள்
தக்காளி Tomato
•நாட்டு தக்காளி-செடி
•காசி தக்காளி-கொடி
•நீட்டு தக்காளி-கொடி
•மெல்லிய தோல் தக்காளி-கொடி
•ஸ்பூன் தக்காளி-கொடி
•உருட்டு தக்காளி-கொடி
•உருட்டு தக்காளி-செடி
•பலவகை தக்காளி ரகங்கள்
#கத்தரி_Brinjal
![]() |
Aadhiyagai Farm brinjal collection |
•பச்சை கத்திரி
•வெள்ளை கத்தரி
•மணப்பாறை கத்தரி
•வரி கத்தரி
•கண்ணாடி கத்தரி
•புளியம்பூ கத்தரி
•வேலூர் முள் கத்தரி
•செவந்தம்பட்டி கத்தரி
•ஒடவை பச்சை கத்தரி
•திண்டுக்கல் பச்சை நீள கத்தரி
•வெள்ளை உருட்டு கத்தரி
•ஊதா கத்தரி
•பலவகை கத்தரி ரகங்கள்
•சம்பா மிளகாய்
•காந்தாரி மிளகாய் 1inchநீளம்
•காந்தாரி மிளகாய் ½inchநீளம்
•குண்டு மிளகாய்
![]() |
Ghee chilli |
![]() |
Ghee chilli & bird eye chilli |
•நெய் மிளகாய்
•பச்சை வெண்டை
•சிவப்பு வெண்டை
•வெள்ளை வெண்டை
•பருமன் வெண்டை
•2 வண்ண பருமன் வெண்டை
•மர வெண்டை
•சுனை வெண்டை
•ஊசி வெண்டை
•மாட்டுகொம்பு வெண்டை
•பொம்மிடி நீள வெண்டை
•மலை வெண்டை
•யானைதந்த வெண்டை
•சிவப்பு உருட்டு வெண்டை
•பச்சை உருட்டு வெண்டை
•கொத்து வெண்டை (cluster)
•செடி காராமணி
•வரி காராமணி
•பலகிளை கொத்தவரை
•செடி தம்பட்ட அவரை
•செடி அவரை
•சின்ன வெங்காயம்
•பெரிய வெங்காயம்
#மலை_காய்கறிகள்
•வெள்ளை முள்ளங்கி
•கேரட்
•கேரட் pink
•பீட்ரூட்
•செடி பீன்ஸ்
•பட்டர் பீன்ஸ் செடி
•பட்டர் பீன்ஸ் கொடி
•பட்டர் பீன்ஸ் படர்கொடி
•கொடி பீன்ஸ் கொடி
•கொடி பீன்ஸ் படர்கொடி
•Purple பீன்ஸ் கொடி
•குடை மிளகாய்
•லெட்யூஸ் -பச்சை (lettuce)
#கொடிகாய்கறிகள்:
•குடுவை சுரை
•நீள சுரை
•கும்ப சுரை
•சிட்டு சுரை
•கிண்ணார சுரை
•வாத்து சுரை
•குண்டு சுரை
•பானை சுரை
•நீளகழுத்து சுரை
•பாகல்
•மிதிபாகல்
•நீள புடலை
•குட்டை புடலை
•பட்டை அவரை
•கோழி அவரை
•ஆட்டுகொம்பு அவரை
•மூக்குத்தி அவரை
•சிறகு அவரை
•நீள பீர்க்கன்
•குட்டை பீர்க்கன்
•உருட்டு பீர்க்கன்
•பழ வெள்ளரி
•உருட்டு வெள்ளரி
•முள் வெள்ளரி
•வெள்ளை பூசணி
•பரங்கி / அரசாணி
•பரங்கி பெரியது
•தர்பூசணி
•கருப்பு மொச்சை
•மெழுகு பீர்க்கன் வெளிர்பச்சை
•மெழுகு பீர்க்கன் அடர்பச்சை
ஓராண்டு & பல்லாண்டு பயிர்கள்
• மஞ்சள்
•மர பருத்தி
•முருங்கை
•பப்பாளி
•நாட்டு ஆமணக்கு
•தாட்பூட் பழம் கொடி வகை
•மர துவரை
•கிளைரீசீடியா -உயிர்வேலிக்கு
#கீரைகள்
•அரைக்கீரை
•முளைக்கீரை
•சிறுகீரை
•பச்சை தண்டங்கீரை
•சிவப்பு தண்டங்கீரை
•பச்சை புளிச்சகீரை
•சிவப்பு புளிச்சகீரை
•மணதக்காளி கீரை
•கொத்தமல்லி
•சுக்காங்கீரை
•சக்கரவர்த்தி கீரை
•பருப்பு கீரை
•பாலக்கீரை
•அகத்திக்கீரை
•வெந்தயக்கீரை
•காசினி கீரை
•குப்பை கீரை
#மூலிகைகள் & #பூக்கள்
•பூனைக்காலி கருப்பு
.பூனைக்காலி வெள்ளை
•சங்கு பூ வெள்ளை
•சங்கு பூ -ஊதா
•சங்கு பூ mixed
•தாமரை
•திருநீற்றுப்பச்சிலை
•கரு ஊமத்தை
•செண்டுமல்லி பூ
•காஸ்மோஸ் பூ -மஞ்சள்
•தூதுவளை
•துளசி
•கண்டங்கத்தரி
•சுண்டைக்காய்
•சதகுப்பை
•வேலக்கீரை
•நில ஆவாரை
#சோளம் & #சூரியகாந்தி
•மக்காசோளம் சிவப்பு
•மக்காசோளம் மஞ்சள்
•சிவப்பு பொரிசோளம்
•சூரியகாந்தி சிறியது
•சூரியகாந்தி பெரியது
#உரப்பயிர்
சணப்பை
தக்கபூண்டு
#மரங்கள்
•சீத்தாபழம்
•பெருநெல்லி
•நாட்டு கொய்யா
•நாட்டு மாதுளை
•இலந்தை
•விளாம்பழம்
•வில்வம்
•கொடுக்காப்புளி
•மகிழம்பூ
•ஆத்தி
•மஞ்சள்றொன்றை
•சரக்கொன்றை
•மயில்கொன்றை
•வேங்கை
•செம்மரம்
•பூந்திக்கொட்டை
•தேத்தான்கொட்டை
•நீர்மருது
•பூமருது
•கருமருது
•தேக்கு
•குமிழ்
•மகோகனி
•மலைவேம்பு
•ஆச்சா
•சிசு
•இலைபுரசு
•வாகை
•வாதாங்கொட்டை
•கருவேல்
•பென்சில்
•ஆணைகுண்டுமணி
•அயல்வாகை
•பெருமூங்கில்
•கல்மூங்கில்
•சொர்க்கம்
•குதிரைகுழம்பு
•தூங்குமூஞ்சி
•சீயக்காய்
•தண்ணீர்காய்-கோழிகொண்டைமரம்
•தணக்கு மரம்
•மருதாணி
•தோதகத்தி
•சுபாபுல்
•பூவரசு
•புங்கம்
•புளி
•ஆவிமரம்
•வெள்வேல்
#சிறுதானியம் #பயிறுவகைகள்
தினை
சாமை
வரகு
சடை வரகு
குதிரைவாலி
காட்டுகம்பு
நாட்டுகம்பு
கேழ்வரகு
பனிவரகு
வெண்சோளம்
மஞ்சள் மக்கட்டை சோளம்
கருப்பு இருங்கு சோளம்
கருந்தினை
வெண்தினை
செந்தினை
சடைதினை
Brown top millet
நாட்டு உளுந்து
பாசிபயிறு
நரிபயிறு
வரிமொச்சை
சுண்டல்
தட்டைபயிறு
போன்றவற்றின் விதைகள் கிடைக்கும். விதைபெருக்கம் செய்துகொள்வதற்காக மட்டும் வழங்குகின்றோம்.
#ComboPackage #விதைதொகுப்பு
•15 ரக கத்தரி தொகுப்பு
•15 ரக வெண்டை தொகுப்பு
•15 ரக சுரை தொகுப்பு
•15 ரக கீரை தொகுப்பு
•15 ரக மூலிகை-பூக்கள் தொகுப்பு
•40 கொடி காய்கள் தொகுப்பு
•55 செடிகாய்கள் & மலைகாய்கறிகள் தொகுப்பு
•50 மர விதைகள் தொகுப்பு
•22 வகை சிறுதானியங்கள் பயிறு வகை தொகுப்பு
•200 ரக மொத்த விதை தொகுப்பு
#பாரம்பரியவிதைகள்
#மரபுவிதைகள்
#நாட்டுவிதைகள்
#heirloomseeds
#traditionalseeds
#nativeseeds
#aadhiyagaifarms
சில முக்கிய குறிப்புகள்:
•தக்காளி, கத்தரி, மிளகாய் போன்ற நாற்று விட்டு நடவு செய்யும் விதைகளை 4-6 மணி நேரம் தண்ணீர் அ சாணிப்பாலில் ஊறவைத்து விதைக்கலாம்.
•வெண்டை, கொத்தவரை, அவரை, பீன்ஸ் போன்ற விதைகளை ஓர் இரவு ஊறவைத்து விதைக்கலாம்.
•பாகல், சுரை, புடலை என கொடி காய்கறி விதைகள் அனைத்தையும் 2-3 நாட்கள் ஊற வைத்து விதைக்கலாம்.
•மரவிதைகளை 2-3 நாட்கள் ஊறவைத்து விதைக்கலாம்.
•"மழைநீர்" விதை நேர்த்தி செய்ய உகந்தது.
•காய்கறிகளில் முதல் 2,3 அறுவடைகளையும், கடைசி 2,3 அறுவடைகளையும் விதைக்காக பயன்படுத்த வேண்டாம். இடைப்பட்ட காலங்களில் விதைக்காக பயன்படுத்தலாம்.
•சேகரிக்கும் விதைகளை உச்சி வெயிலில் காய வைக்க வேண்டாம். •காலை மாலை இளம் வெயிலில் காய வைத்து எடுத்து சேமிக்கலாம். •அமாவாசை நாட்களில் விதைகளை காய வைக்கலாம். இரவிலும் விதைகளை காய வைக்கலாம்.
•விதைகளை சேமிக்கும்போது, துணிகளில் கட்டி தொங்கவிடலாம். காற்றோட்டமாக இருக்கலாம். சாதாரண அறை வெப்பநிலையில் பாதுகாக்கலாம். அவ்வபோது வேப்பிலைகளில் புகை போடலாம்(சாம்பிராணி புகை போல).
•காய்கறிகளை வருடா வருடம் எடுத்து விதைத்து அவற்றிலிருந்து விதைகளை எடுத்து சேமிப்பதன் மூலம் விதைகளில் முளைப்புத்திறனை பாதுக்கலாம்.
•சுரை,பீர்க்கு,வெண்டை போன்ற விதைகளை குடுவைகளிலேயே சேமிக்கலாம். பழமாக மாறிய பின் விதை எடுக்கும் தக்காளி கத்தரி பாகல் புடலை போன்ற காய்களிலிருந்து விதை எடுத்து உடன் சாம்பல் கலந்து விதைகளை சேமிக்கலாம்.
•மர விதைகள் அனைத்தையும் 1-3 நாட்கள் ஊற வைத்து விதைக்கலாம்.
Whatsapp: +918526366796
Facebook: www.fb.com/AadhiyagaiBiodiversityAndEcologicalFarm
Telegram: https://t.me/joinchat/AAAAAEz6GQ_4fYejG7T8fQ "
நன்றி!!!
ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் Aadhiyagai Traditional Aadhiyagai Seedsavers Farm
![]() |
Aadhiyagai Farm harvests |
Comments
Post a Comment