Posts

Showing posts from September, 2016

மரபு விதைகளின் தாம்பூல விதைகள்

Image
#Return_gift #தாம்பூல_விதைகள் நண்பர்களுக்கு வணக்கம் ..                                                  திருமணத்திற்கு வந்து வாழ்த்திச் செல்லும் உறவுகளுக்கு தாம்பூலப்பை கொடுப்பது நம் மரபு. .. அதில் தேங்காய் கொடுப்பது சிறப்பாக இருந்தது .. பயண கலைப்பு நீங்க போகும் வழியில் தாகம் தீர்க்க அந்த அற்புத நீர் பயன்படும் நோக்கில் தேங்காயை தாம்பூலப்பைகளில் கொடுத்து அனுப்பினர் ..                                                                                           சமீப காலமாக மரக்கன்றுகள் வழங்கி வரும் நற்காரியங்களும் நடந்து வருகிறது .. அதேபோல நகரப்பகுதிகளில் நடக்கும் திருமண நிகழ்வுகளுக்கு வந்து செல்லும் உறவுகளுக்கு தாம்பூல பைகளில் நம் பாரம்பரிய விதைகளையும் கொடுக்கலாம் என நெறைய நண்பர்கள் கேட்டுக்கொண்டதன் படி கடந்த மாதங்களில் சில திருமணங்களுக்கு "ஆதியகை திருமண தாம்பூல விதைகள் " வழங்கி வருகிறது . நம் மரபு விதைகள் அனைவரிடமும் பகிரப்பட வேண்டுமென்பதன் நோக்கத்திலும், நகரங்களின் வீடுகளில் காய்கறி தோட்டங்கள் பெருக வேண்டுமெனவும் இந்த முயற்சி பரவலாக்கப்படுகிறது ..                        

Aadhiyagai Return gifts

Image
                            In our tradition, we offer return gift to our relatives and friend who attended the wedding.  It’s not only tradition, but there is a science behind it.  Our ancestors gave a bag of Beetle leaves, Nuts and Coconut as return gift.  The beetle leaves/Nuts help in digestion and Coconut helps to drive away the tiredness of travelling. Nowadays saplings are given as return gift for many of the functions like Marriages, Birthday parties, House warming ceremonies and many others.  As per requests from our friends “Aadhiyagai” started sharing the native seed bags as return gift for the past one year. Our aim is to initiate people to start kitchen garden and to keep our native seeds in rotation.  By this our native seeds reaches many hands.  Not only farmers, It’s all our duty to save our indigenous seeds. Nowadays many have started terrace gardening, this will help them to plant native seeds and those who haven’t started yet may get interest when they h
கல்லூரி காலத்தில் விமானவியலை கற்க விரும்பியதில்லை.. மொழி ஒரு பெரிய தடையாக கருதி விலகி வந்து எளிமையான விசயங்களை தேடி அலைந்து கிடைத்த பொக்கிசமாக விவசாயத்தை கருதி ஏற்றுக்கொண்டேன்.. முகநூல் தான் அதற்கு ஆதாரமாக விளங்கியது.. மண்ணும் விதையும் சமுதாயமும் கற்றுக்கொடுக்கின்றது.. விமானவியலில் பட்டம் பெறவில்லை.. வாழ்வில் பட்டம் போன்று பறக்க விரும்புகிறேன்..   The young generation needs to turn towards agriculture. We need to practice agriculture for our livelihoods regardless of the  educational qualification that we hold. We have to stop the agricultural debts that previous generations have accumulated.  Let us start the changes from our side for our forthcoming generations. We are no more going to be dependent on others for our food. The younger generation has already started loving natural way of living. It may not be easy to change one’s ways but one must try. Hearty thanks to Prabu Mj anna and thewire.in for this article. http://thewire.in/18333/farmers-notebook-aeronautical-engine
Image
மரபணு மாற்று கடுகு வேண்டாம் என்பதற்காகவும், பொதுமக்களுக்கு மரபணு மாற்று விதைகளை பற்றிய விழிப்புணர்வை தெரியப்படுத்தவும் விதை திருவிழா.. நான் செல்கின்றேன்.. சென்னை மக்கள் கண்டிப்பாக வாருங்கள்..  ""உண்ணும் உணவின் உண்மையை அறிந்திருப்போம்.. ஆனால் அதன் பின் உள்ள அரசியலை நாம் அறியோம்""

Return gift தாம்பூல விதைகள்

Image
#Return_gift #seed_gift #birthday_celebration #மரபு_விதைகள் #தாம்பூலம் #alternative_way_seeds_sharing மாற்று வழியில் மரபு விதைகளை பகிர்தல்: சென்னையில் நண்பரின் குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்.. 70குடும்பங்களுக்கான விதை பரிசு.. #விதைகளை ஏன் பாதுகாக்க வேண்டும்?? #விதைகளை ஏன் பகிர வேண்டும்?? இந்த இரண்டு விசயங்கள் அறிந்தவர்கள் விதைகளை பரிசளிக்க முன்வருகின்றனர். விதைகளை எப்படி அடையாளம் காண்பது..பெயர் ஏதும் எழுதப்படாத நிலையில்.. ?? தக்காளி கத்தரி மிளகாய் வெண்டை கொடி காய்கறிகளின் விதைகளை எளிதில் அடையாளம் காணலாம். தினசரி காய்கறி நறுக்கும்போது தாய்மார்கள் காய்கறிகளின் விதைகளை சற்று உற்று நோக்கினால் போதும். தக்காளியை பிழிந்து அதன் விதையை பார்த்து வைத்துக்கொள்ளுங்கள். கத்தரியை அரிந்து விதை எவ்வாறு இருக்கிறது என்பதை அடையாளம் காணுங்கள். மிளகாய் விதையின் காரம் அதன் விதையை எளிதில் அடையாளம் காட்டிவிடும். வெண்டைக்காயை பச்சையாக உண்ணக்கொடுத்து விதையை பார்த்து வைத்துக்கொள்ளுங்கள். கொடி காய்கறிகளின் விதைகளை அறிய காய்களை வாங்கி அதனுள் இருக்கும் விதைகளை அடையாளம் காணுங்கள். பச்சை காய