Posts

Showing posts from April, 2019

விதைகளை ஏன் பாதுகாக்கவும், பரவலாக்கவும் வேண்டும்

ஆற்காடு அரிசி திருவிழாவில் பாரம்பரிய விதைகளை ஏன் பாதுகாக்கவும், பரவலாக்கவும் செய்கிறோம் என்பதை பற்றி ஓரிரு நிமிடங்கள் பேசியதை மக்கள் தொலைக்காட்சி 12.3.19 மாலை 6.30 மணிக்கும் 13.3.19 மாலை 6.30க்கும் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது..

ராஜஸ்தானில் சமூக விதை வங்கிகள்

Image
கடந்த பல ஆண்டுகளாக உணவுப் பாதுகாப்பில் சமுதாய விதைப் பண்ணைகள் (community seed banks) பற்றிய விவாதங்கள் விவசாயத் துறையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. நமது பாரம்பரிய விதைகளை பாதுகாக்கவும், குறைந்த செலவில் விவசாய உற்பத்தியை தொடர்ந்து மேற்கொள்ளவும் ராஜஸ்தான் மாநிலத்தில் சமுதாய விதைப் பண்ணைகளை கிராமப் புறங்களில் அமைக்கும் பணியை பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கிராம அளவில் விவசாயிகளை, சுய உதவிக்குழுக்களை பண்ணை மகளிரை ஒன்றுபடுத்தி அதிகளவில் செய்து வருகின்றன. நமது தமிழக விவசாயிகளும் அதனைப் பின்பற்றி சமுதாய விதைப்பண்ணைகளை அமைத்து அதிக லாபம் பெறலாம். சமுதாய விதைப் பண்ணை செயல்பாடுகளும், சிறப்புகளும்: ராஜஸ்தான் மாநில கடுமையான இயற்கைச் சீற்றங்களால் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவது வாடிக்கை. இதனால் சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிகளவு பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வந்தனர். ÷கடுமையான வறட்சி காலங்களில் தங்களின் விதைகளை கூட உணவிற்காக பயன்படுத்தும் சூழல் காணப்பட்டது. பின்னர் அடுத்த பருவத்துக்கு தனியார் கடைகளில், இடைத்தரகர்களிடம் அதிக விலை கொடுத்து விதைகளை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டன. பல ப

நாட்டு விதைகளை பாதுகாக்க விருப்பமா

Image
ஐயா நாங்கள் நாட்டு விதைகளை பாதுகாக்க விரும்புகிறோம். அதற்கு என்ன செய்ய வேண்டும்?? நாட்டு விதைகளை உங்களுடைய தோட்டத்தில் பயிரிட்டு நீங்கள் உண்ணுங்கள். அதன் ருசியை நீங்கள் உணருங்கள். உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் அந்த காய்களை வழங்குங்கள். அவர்களுக்கும் அந்த ருசி பிடித்திருக்க கூடும். அடுத்த முறை அவர்களுக்கு காய்களை கொடுக்கும்போது சிறிது விதைகளையும் கொடுத்து விதைத்து உண்ண சொல்லுங்கள். அவர்கள் விதைக்காமல் மறந்திருக்க கூடும். அடுத்த முறை சந்திக்கும்போது விதைத்தார்களா என்பதை ஞாபகப்படுத்துங்கள். அல்லது விதை கொடுக்கும்போதே விதைப்பது குறித்த தகவல்களையும் பகிர்ந்நு விடுங்கள். அவர்கள் விதைத்து அறுவடை செய்துகொண்டுள்ளதை உறுதிபடுத்திவிட்டீர்கள் என்றால் விதை எப்படி சேகரிக்க வேண்டும் என்ற தகவல்களை பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களுக்கும் சில விதைகளை கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளுங்கள். விதைகளை அறுவடையான சமயத்தில் அவர்களிடமிருந்து கேட்டு வாங்கி கொண்டால் மகிழ்ச்சியே.. இல்லையென்றால் அவர்கள் எங்கேயேனும் மறந்து வைத்துவிட கூடும். இப்படியாக உங்களுக்கு தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கு விதைகளை கொடுத்து வி

பூமி தினம்

Image
பூமி தினம்.. பூமியை மண் என கூறலாம்.. இந்த மண்ணை உலகின் பெரும் உயிர் எனவும் கூறலாம்.. இவ்வுலகில் வாழும் உயிர்கள் அனைத்தும் மடிந்த பின் பஞ்சபூதங்களுடன் கலக்கும்போது இறுதியில் அனைத்தும் கலப்பது மண்ணோடு மண்ணாகவே.. நம்மாழ்வார் ஐயா சொன்னது போல அணுகுண்டு தயாரிக்கும் அறிவு தேவையில்லை.. அவரை செடி வளர்க்கும் அறிவு நமக்கு போதுமானது.. பூமி திருத்தி உண் என ஔவை கூறியதையும் நினைவில் கொள்வோம். மண்ணை முறையாக பயன்படுத்தாமல் வேளாண்மையில் வெற்றி பெற இயலாது. மண்ணை வளப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடாமல் அதிக மகசூல் எனும் ஒற்றை நோக்குடன் பயிர்களை வளர்க்க நிறைய செலவும் செய்து மண்ணை இராசாயனங்களால் நிரப்பி வருகிறோம். மண்ணை வளப்படுத்த மண்ணில் உள்ள நுண்ணுயிர்களுக்கு உணவிடுவது அவசியம். மண்ணிற்கான உணவென்பது மட்கு என உணர்ந்து கொள்வோம் மட்கு எனும் குப்பைகளே மண்ணிற்கு வழங்க வேண்டிய உணவு.. ஒரு பயிர் சாகுபடி முறை மண்ணின் உயிரை காவு வாங்குவதற்கு சமம்.. இயற்கை வழி விவசாயம் என்பது வெறுமனே இரசாயன உரங்களை தவிர்ப்பது மட்டுமல்ல.. மண்ணிற்கான விதைகள், பலபயிர் சாகுபடி முறைகள், பல்லுயிர் சூழல் மிகு

பரங்கிக்காய் அறுவடையின்போது கவனிக்க வேண்டியது

Image
பரங்கிக்காய் / அரசாணிக்காய் மஞ்சள்_பூசணி / சாம்பார்_பூசணி PUMPKIN பரங்கிகாய்களை உணவிற்காக அறுவடை செய்திட எந்த நிலையில் வேண்டுமானாலும் அறுவடை செய்யலாம். பிஞ்சாகவோ, முற்றிய நிலையிலோ, நன்கு முற்றிய நிலையிலோ கூட அறுவடை செய்து கொள்ள இயலும். ஆனால் விதைக்காக அறுவடை செய்திட விரும்பினால், முதலில் காய்க்கும் சில காய்களையும் கடைசியில் காய்க்கும் சில காய்களையும் உணவிற்கு பறித்து கொள்ளலாம். இடைப்பட்ட காலங்களில் காய்க்கும் காய்களில் நன்கு பெரிய காய்களை விதைக்காக விட்டு விடலாம். நன்கு முற்றிய காயானது, பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறமாக மாறும்; காம்பும் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் அ பழுப்பு நிறத்திற்கு மாறும். பிறகு அவற்றை அறுவடை செய்து சேமித்து கொள்ளலாம். தேவையான போது காய்களை வெட்டி விதையை எடுத்து கொள்ளலாம். காய்களிலேயே விதை சேமிக்க 6-12 மாதங்கள் கூட சேமிக்கலாம். சில சமயம் காய்களுக்கு உள்ளேயே விதைகள் முளைத்து வந்துவிடும். அதனால் விரைவில் விதைகளை நீக்கி காய வைத்து சேமிக்கலாம். விதைகளை சாம்பலில் கலந்து காய வைக்கலாம். 3 வருடம் வரையிலும் கூட விதைகள் முளைப்பு திறனோடு இருக்கும். இருப்பினும் வர

கிராம விதை வங்கியின் செயல்பாடு

Image
அருகிலுள்ள தோட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு அவர்களுடைய வீட்டுத்தேவைக்காக விதை பகிர்ந்து கொண்டோம். அவர்களுடைய தேவை போக மீதமுள்ளவற்றை விதைக்காக விட்டு எடுத்து வைத்துக்கொண்டு விதை கொடுத்தமைக்காக எங்களுக்கும் கொஞ்ச விதைகள் கொடுத்துள்ளார்கள். உள்ளூர்களில் விதை வங்கிகள் இவ்வாறாக செயல்பட்டால் போதும்.. இங்கே விதைக்காக பணமோ அல்லது பண்டமாற்றோ நடைபெறவில்லை.. நீங்கள் விளைவித்து உண்ணுங்கள் என்ற எண்ணமே விதைக்கப்பட்டது. இவர்கள் விளைவித்து இவர்கள் உண்ணது மட்டுமின்றி உறவினர்களுக்கும் வழங்கியதாக விவசாயிகளின் உறவினர்கள் கூறுவதும் உண்டு.. உள்ளூர்களில் விதை பகிர்தல் இப்படியாகவே உள்ளது. உள்ளூர் விவசாயிகள், நண்பர்கள், உறவினர்களுக்கு விதைகள் கொடுக்கின்றோம். அவர்களையும் விதை பகிர சொல்கின்றோம். உள்ளூர்களில் விதை பரவுகிறது. ஆனால் எங்கள் நிலைமை வேறு. நிரந்தர ஊர் கிடையாது. நாடோடிகளாக இருப்பதால் இங்கிருக்கும் வரை விதைகளை நிறைய பகிர்ந்திட வேண்டும். இங்கிருக்கும் மக்கள் இன்னும் விதை சேமித்து பழகிடவில்லை.. செடிகள் காய்ந்ததும் எங்களுக்கு தகவல் சொல்கிறார்கள். நாங்கள் தான் அறுவடை செய்து விதை சேமிக்கின்றோம். அடுத்த பரு

உயிராற்றல் வேளாண்மை காலண்டர்

Image
#உயிராற்றல்_விவசாய_பஞ்சாங்கம் கரிம வேளாண் கட்டமைப்பினர் வெளியிட்ட 2019 ஆம் ஆண்டிற்கான காலண்டர் இந்த நாட்க்குறிப்பு உயிராற்றல் வேளாண்மை (BIO DYNAMIC FARMING) வழி முறைகளில் ஒரு குறிப்பிட்டு கூறக் கூடிய அளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள விபரங்கள் ஒவ்வொன்றிலும் அதாவது அந்த குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் விவசாய வேலைகள் என்ன செய்தால் நமக்கு ஆரோக்கியமான தாவரங்கள் வளர்ந்து அதிக விளைச்சலையும், தரமான மற்றும் சுவை கூடிய விளைச்சலையும் பெறலாம் என அறிந்து கொள்ள உதவும். அவ்வாறு ஒவ்வொரு நாளும் நமது சூரிய மண்டலத்திலுள்ள கோள்கள் மற்றும் இராசிகள் அவற்றின் அடிப்படை சுற்றுப்பாதையில் குறிப்பாக சந்திரனின் சுற்றுப்பாதையில் ஏற்படும் நிகழ்வுகளை கணித்து அதனால் தாவரங்களிலும் மற்றும் மண்ணிலும் ஏற்படும் மாறுதல்களை கணக்கிட்டு அதற்க்கேற்றவாறு நாம் செய்ய வேண்டிய வேலைகளை பிரித்து கூறப்பட்டுள்ளது. இந்த நாட்குறிப்பால் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகள் -மேல் நோக்கு நாட்கள் -கீழ் நோக்கு நாட்கள் -தவிர்க்க வேண்டிய நாள் -அபோஜி (தொலைவு நிலா) -பெரிஜி (அண்மை நிலா) -அமாவாசை -பெளர்ணமி -சந்திர

கொம்பு சாண உரம்

Image
#BD_500 #கொம்பு_சாண_உரம் #BIODYNAMIC_FARMING #SUSTAINABLE_FARMING கொம்பு சாண உரம், மண்வளத்தை அதிகரிக்க பயன்படுகிறது. -இந்த உரத்தைத் தயாரிக்க செப்டம்பர்-பிப்ரவரி வரையிலான குளிரான மாதங்கள் ஏற்றவை. -இயற்கையாக இறந்த பசுமாட்டுக் கொம்பை எடுத்து, அதில் பசுஞ்சாணத்தை நிரப்ப வேண்டும். -தண்ணீர் தேங்காத மேடான இடத்தில் ஒரு அடி ஆழம் குழிதோண்டி, அதற்குள் இந்தக் கொம்பை புதைத்துவிட வேண்டும். -சுமார் 4-6 மாத காலம் கழித்து எடுத்துப் பார்த்தால், கொம்புக்குள் வைக்கப்பட்ட சாணமானது, காப்பித் தூள் போல இருக்கும்; மட்கிய வாசனையும் அடிக்கும். -இந்த அறிகுறிகள் இருந்தால் கொம்பு சாண உரம் நன்றாகத் தயாராகி விட்டது என்று பொருள். -இதை மண் பாத்திரத்தில் ஓர் ஆண்டு காலம் வரை சேமித்து வைத்து பயன்படுத்தலாம். -ஒரு கொம்பை 3-4 முறைகூட பயன்படுத்தலாம். -ஒரு ஏக்கர் நிலத்துக்கு 30 கிராம் கொம்பு சாண உரத்தை 13 லிட்டர் சுத்தமான நீரில் கலந்து, ஒரு மணி நேரம் இடது மற்றும் வலது புறமாக சுற்றவேண்டும். -கீழ்நோக்கு நாளில் மாலைவேளைகளில் பயிர் செய்வதற்கு முன்பாக நிலத்தில் இதைத் தெளிக்க வேண்டும். -பலதானிய விதைப்பு செய்த

பாலுடன் அரிசி கழுவிய நீர் கலந்து செய்யும் மண்வளத்திற்கான இடுபொருள்

Image
Please look into making #lacto_bacillus_serum as well. We are doing this in organic vegetable growing. Save the water used to rinse the rice before cooking. Leave it in a container loosely covered by a cloth. After 5 days this would be cloudy and full of lacto bacillus.Add equal amount of milk to this cover and leave for 5 days. Skim of the rennet on top and add it to your compost. Rest of the liquid #dilute_60ml to #1_litre_of_water and spray on your soil fruit trees or compost pile for soil improvement and plant health etc After adding milk the rennet has formed on top I will skim this off and add it to the compost The liquid underneath I will add molasses which is like Karumbu sarkarai. This makes the serum stay for up to 3 months For immediate use dilute the serum 50 ml to a litre of water and spray on plant, soil compost etc I wonder when they do palabishekam in temples they will give the run off for Indian farmers!! You can watch you tube videos on

விதை சட்டம்

Image
Plant_Varieties_Protection_and_Farmers_Right_Act(2001)  பிரிவு 39(1) ன் படி (iv) a farmer shall be deemed to be entitled to save, use, sow, resow, exchange, share or sell his farm produce including seed of a variety protected under this Act in the same manner as he was entitled before the coming into force of this Act: Provided that the farmer shall not be entitled to sell branded seed of a variety protected under this Act. Explanation.—For the purposes of clause (iv), “branded seed” means any seed put in a package or any other container and labelled in a manner indicating that such seed is of a variety protected under this Act. Plant_Varieties_Protection_and_Farmers_Right_Act (2001)  பிரிவு 39(1) ன் படி விவசாயி தனக்கு தேவையான விதைகளை சேமிக்கவும், உபயோகிக்கவும், விதைக்கவும், மறுமுறை விதைக்கவும், பரிமாறிக்கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும், விற்கவும் உரிமையளிக்கிறது. பாதுகாக்கப்பட்ட விதைகள் உட்பட எந்த விதையையும் விவசாயி தனது தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ள இந்த சட்டம் அனுமதியளிக்கி