நாட்டு விதைகளை பாதுகாக்க விருப்பமா

ஐயா நாங்கள் நாட்டு விதைகளை பாதுகாக்க விரும்புகிறோம். அதற்கு என்ன செய்ய வேண்டும்??

நாட்டு விதைகளை உங்களுடைய தோட்டத்தில் பயிரிட்டு நீங்கள் உண்ணுங்கள். அதன் ருசியை நீங்கள் உணருங்கள். உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் அந்த காய்களை வழங்குங்கள்.

அவர்களுக்கும் அந்த ருசி பிடித்திருக்க கூடும். அடுத்த முறை அவர்களுக்கு காய்களை கொடுக்கும்போது சிறிது விதைகளையும் கொடுத்து விதைத்து உண்ண சொல்லுங்கள்.

அவர்கள் விதைக்காமல் மறந்திருக்க கூடும். அடுத்த முறை சந்திக்கும்போது விதைத்தார்களா என்பதை ஞாபகப்படுத்துங்கள். அல்லது விதை கொடுக்கும்போதே விதைப்பது குறித்த தகவல்களையும் பகிர்ந்நு விடுங்கள்.

அவர்கள் விதைத்து அறுவடை செய்துகொண்டுள்ளதை உறுதிபடுத்திவிட்டீர்கள் என்றால் விதை எப்படி சேகரிக்க வேண்டும் என்ற தகவல்களை பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களுக்கும் சில விதைகளை கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளுங்கள்.

விதைகளை அறுவடையான சமயத்தில் அவர்களிடமிருந்து கேட்டு வாங்கி கொண்டால் மகிழ்ச்சியே.. இல்லையென்றால் அவர்கள் எங்கேயேனும் மறந்து வைத்துவிட கூடும்.

இப்படியாக உங்களுக்கு தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கு விதைகளை கொடுத்து விதைகளை பெற்று விதைகளை பற்றி அவ்வபோது பேசினால் உங்களை அறியாமலேயே விதைகளை பாதுகாத்தும் பரவலாக்கியும் வருவீர்கள்.

அதற்கு முதல் படி உங்கள் வீட்டில் விதைத்து அறுவடை செய்து உண்ணுங்கள். மற்றவை தானாக நடக்கும்.

#விதை_பரவலாக்குதல்
#விதை_பாதுகாப்பு
#விதை_சேமிப்பு
#விதை_வங்கி

https://m.facebook.com/story.php?story_fbid=2485543068157506&id=1658578304187324

#ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்
19.4.19

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY