கிராம விதை வங்கியின் செயல்பாடு

அருகிலுள்ள தோட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு அவர்களுடைய வீட்டுத்தேவைக்காக விதை பகிர்ந்து கொண்டோம். அவர்களுடைய தேவை போக மீதமுள்ளவற்றை விதைக்காக விட்டு எடுத்து வைத்துக்கொண்டு விதை கொடுத்தமைக்காக எங்களுக்கும் கொஞ்ச விதைகள் கொடுத்துள்ளார்கள். உள்ளூர்களில் விதை வங்கிகள் இவ்வாறாக செயல்பட்டால் போதும்.. இங்கே விதைக்காக பணமோ அல்லது பண்டமாற்றோ நடைபெறவில்லை.. நீங்கள் விளைவித்து உண்ணுங்கள் என்ற எண்ணமே விதைக்கப்பட்டது. இவர்கள் விளைவித்து இவர்கள் உண்ணது மட்டுமின்றி உறவினர்களுக்கும் வழங்கியதாக விவசாயிகளின் உறவினர்கள் கூறுவதும் உண்டு.. உள்ளூர்களில் விதை பகிர்தல் இப்படியாகவே உள்ளது. உள்ளூர் விவசாயிகள், நண்பர்கள், உறவினர்களுக்கு விதைகள் கொடுக்கின்றோம். அவர்களையும் விதை பகிர சொல்கின்றோம். உள்ளூர்களில் விதை பரவுகிறது. ஆனால் எங்கள் நிலைமை வேறு. நிரந்தர ஊர் கிடையாது. நாடோடிகளாக இருப்பதால் இங்கிருக்கும் வரை விதைகளை நிறைய பகிர்ந்திட வேண்டும். இங்கிருக்கும் மக்கள் இன்னும் விதை சேமித்து பழகிடவில்லை.. செடிகள் காய்ந்ததும் எங்களுக்கு தகவல் சொல்கிறார்கள். நாங்கள் தான் அறுவடை செய்து விதை சேமிக்கின்றோம். அடுத்த பருவம் தொடங்கும்போது விதை கேட்டு வருவார்கள். அவர்களுக்கு விதைகளை நாங்கள் கொடுக்கின்றோம். இதுவும் ஒருவகையில் திருப்தி அளிக்க தான் செய்கிறது. இதை விரிவாக செய்திட நினைக்கின்றோம். ஆனாலும் பொருளாதார நிலை/நிறைவு பெறவில்லை.. அதனால் இப்படியாக உள்ளூரில் மட்டும் பகிர்கிறோம்.

நீங்களும் பகிரலாம் இவ்வாறாக என்பதற்காக உங்களிடம் இந்த தகவலை பகிர்கிறோம்..

நன்றி..
பரமு..
15.2.19

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

செம்பருத்தி /மர பருத்தி/பல்லாண்டு பருத்தி/native cotton/pernial cotton