ராஜஸ்தானில் சமூக விதை வங்கிகள்
கடந்த பல ஆண்டுகளாக உணவுப் பாதுகாப்பில் சமுதாய விதைப் பண்ணைகள் (community seed banks) பற்றிய விவாதங்கள் விவசாயத் துறையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
நமது பாரம்பரிய விதைகளை பாதுகாக்கவும், குறைந்த செலவில் விவசாய உற்பத்தியை தொடர்ந்து மேற்கொள்ளவும் ராஜஸ்தான் மாநிலத்தில் சமுதாய விதைப் பண்ணைகளை கிராமப் புறங்களில் அமைக்கும் பணியை பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கிராம அளவில் விவசாயிகளை, சுய உதவிக்குழுக்களை பண்ணை மகளிரை ஒன்றுபடுத்தி அதிகளவில் செய்து வருகின்றன.
நமது தமிழக விவசாயிகளும் அதனைப் பின்பற்றி சமுதாய விதைப்பண்ணைகளை அமைத்து அதிக லாபம் பெறலாம்.
சமுதாய விதைப் பண்ணை செயல்பாடுகளும், சிறப்புகளும்: ராஜஸ்தான் மாநில கடுமையான இயற்கைச் சீற்றங்களால் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவது வாடிக்கை. இதனால் சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிகளவு பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வந்தனர். ÷கடுமையான வறட்சி காலங்களில் தங்களின் விதைகளை கூட உணவிற்காக பயன்படுத்தும் சூழல் காணப்பட்டது. பின்னர் அடுத்த பருவத்துக்கு தனியார் கடைகளில், இடைத்தரகர்களிடம் அதிக விலை கொடுத்து விதைகளை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டன.
பல பாரம்பரிய விதைகளை இழந்தனர். அத்தகைய நடைமுறை சூழலில் சமுதாய விதைப் பண்ணைகளை முன்னோடி விவசாயிகள் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் அமைத்தனர். ÷இந்த சமுதாய விதைப் பண்ணையில் விவசாயிகள் பாரம்பரிய முறையில் எளிய கிராமப் புற தொழில்நுட்பங்கள் கொண்டு பெரிய அளவில் சமுதாய விதை வங்கி கலன்களை அனைவரும் சேர்ந்து பொது இடத்தில் அமைத்தனர்.
ஒருஅடி உயரத்துக்கு மேடை போன்ற அமைப்பின் மேல் மூங்கில் கூடைகள் போன்று நெருக்கி பின்னப்பட்டு பெரிய அளவிலான சேமிப்பு கலன்கள் (storage bins) அமைக்கப்பட்டது.
இவ்வாறு அமைக்கப்பட்ட சமுதாய விதை சேமிப்பு மையங்களின் பணிகளை மேற்கொள்ள சில தேர்வு செய்யப்பட்ட விவசாயிகள், பண்ணை மகளிர், மற்றும் சுயஉதவிக் குழுக்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இப்புதிய சேமிப்பு முறையில் எதிர்கால விவசாய பணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள நல்ல தரமான விதைகளை விவசாயிகள் கொண்டு வந்ததை சமுதாய விதைப்பண்ணையின் முன்னோடி விவசாயிகள், அதிக விவசாய அனுபவம் கொண்ட பாரம்பரிய விவசாயிகளை கொண்ட வல்லுநர் குழு ஆய்வு செய்து, அவர்களின் பரிந்துரையை பெற்ற பின்பு மட்டுமே சேமிக்கப்படும்.
இவ்வாறு சேமிக்கப்படும் விதைகளில் அளவு, விவசாயிகளின் பெயர் அல்லது கூட்டுக் குடும்பப் பெயருக்கு வரவு வைக்கப்படும். சமுதாய விதைப் பண்ணையில் விவசாயிகளின் விதை சேகரிப்பு மற்றும் வழங்கல் பணியை மேற்கொள்ளவும் ஒரு தனியான தேர்வு செய்யப்பட்ட விவசாயக் குழு உண்டு.
அடுத்தப்படியாக இவ்வாறு சேகரிக்கப்பட்ட விதைகளை இயற்கை பாரம்பரிய பூச்சிக்கொல்லிகளான வேம்பு, நொச்சி இலைகளுடன் கலந்து தொடர்ச்சியாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
விலை நிர்ணயம்
பிற கிராம விவசாயிகளின் தேவை மற்றும் வேளாண் விதை இடுபொருள் சந்தையின் தேவையை கருத்தில் கொண்டு விதைகள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அடுத்த பருவத்துக்கு தேவையான விதைகளை விவசாயிகள் சமுதாய விதை பண்ணைகளில் குறைந்த விலையில் வாங்கிய பயன்படுத்தலாம், சமுதாய விதைப்பணைகள் அமைக்கப்பட்ட கிராமத்தில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளின் விதை பங்களிப்பு மற்றும் நிலத்தின் அளவை அடிப்படையாக கொண்டு சங்க உறுப்பினர்களுக்கு இலவசமாக விதைகளை பாதுகாத்து தருகின்றனர்.
(தினமணி நாளிதழ் -2012)
https://m.facebook.com/story.php?story_fbid=2445744768804003&id=1658578304187324
__________________________________________
#Aadhiyagai
3/4/19
ராஜஸ்தான் மாநிலத்தின் விதைகள்/தானியங்கள் பாதுகாக்க பயன்படும் மண் தொட்டிகள். இதை கோதாஸ் என்கிறார்கள். குளத்து மண்ணையும் வைக்கோலையும் பயன்படுத்தி செய்யும் இந்த தொட்டியில் பால்,தயிர் மற்றும் மற்ற உணவு பொருட்களையும் கூட சேமிக்க பயன்படுத்துகிறார்கள். வெளிபூச்சுக்காக வெள்ளை மண்ணை பயன்படுத்துகிறார்கள்.
In Rajasthan, grain stores are called Kothas. It is used to keep the grain but also milk and curd or any other food item that needs to be kept fresh. It is made using the Talab (pond)’s mud mixed with a bit of straw (no cow dung). The external white coating is done using a white mud diluted in water.
#seed_storage
#ancient_seeds_storing_methods
Source: iskcon
https://m.facebook.com/story.php?story_fbid=2459911264054020&id=1658578304187324
ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்

Comments
Post a Comment