பூமி தினம்
பூமி தினம்..
பூமியை மண் என கூறலாம்..
இந்த மண்ணை உலகின் பெரும் உயிர் எனவும் கூறலாம்..
இவ்வுலகில் வாழும் உயிர்கள் அனைத்தும் மடிந்த பின் பஞ்சபூதங்களுடன் கலக்கும்போது இறுதியில் அனைத்தும் கலப்பது மண்ணோடு மண்ணாகவே..
நம்மாழ்வார் ஐயா சொன்னது போல அணுகுண்டு தயாரிக்கும் அறிவு தேவையில்லை.. அவரை செடி வளர்க்கும் அறிவு நமக்கு போதுமானது..
பூமி திருத்தி உண் என ஔவை கூறியதையும் நினைவில் கொள்வோம்.
மண்ணை முறையாக பயன்படுத்தாமல் வேளாண்மையில் வெற்றி பெற இயலாது.
மண்ணை வளப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடாமல் அதிக மகசூல் எனும் ஒற்றை நோக்குடன் பயிர்களை வளர்க்க நிறைய செலவும் செய்து மண்ணை இராசாயனங்களால் நிரப்பி வருகிறோம்.
மண்ணை வளப்படுத்த மண்ணில் உள்ள நுண்ணுயிர்களுக்கு உணவிடுவது அவசியம்.
மண்ணிற்கான உணவென்பது மட்கு என உணர்ந்து கொள்வோம்
மட்கு எனும் குப்பைகளே மண்ணிற்கு வழங்க வேண்டிய உணவு..
ஒரு பயிர் சாகுபடி முறை மண்ணின் உயிரை காவு வாங்குவதற்கு சமம்..
இயற்கை வழி விவசாயம் என்பது வெறுமனே இரசாயன உரங்களை தவிர்ப்பது மட்டுமல்ல..
மண்ணிற்கான விதைகள்,
பலபயிர் சாகுபடி முறைகள்,
பல்லுயிர் சூழல் மிகுந்த பண்ணைகள்
என்பதை உணர்ந்து கொண்டு
விவசாயம் செய்வோம்..
நிலவளம் காப்போம்..
#earth_day
#பூமி_தினம்
#பூமி_திருத்தி_உண்போம்
#ஆதியகை_மரபு_விதை_சேகரிப்பு_மையம்
22.4.19

Comments
Post a Comment