கொம்பு சாண உரம்


#BD_500
#கொம்பு_சாண_உரம்
#BIODYNAMIC_FARMING
#SUSTAINABLE_FARMING

கொம்பு சாண உரம், மண்வளத்தை அதிகரிக்க பயன்படுகிறது.

-இந்த உரத்தைத் தயாரிக்க செப்டம்பர்-பிப்ரவரி வரையிலான குளிரான மாதங்கள் ஏற்றவை.

-இயற்கையாக இறந்த பசுமாட்டுக் கொம்பை எடுத்து, அதில் பசுஞ்சாணத்தை நிரப்ப வேண்டும்.

-தண்ணீர் தேங்காத மேடான இடத்தில் ஒரு அடி ஆழம் குழிதோண்டி, அதற்குள் இந்தக் கொம்பை புதைத்துவிட வேண்டும்.

-சுமார் 4-6 மாத காலம் கழித்து எடுத்துப் பார்த்தால், கொம்புக்குள் வைக்கப்பட்ட சாணமானது, காப்பித் தூள் போல இருக்கும்; மட்கிய வாசனையும் அடிக்கும். -இந்த அறிகுறிகள் இருந்தால் கொம்பு சாண உரம் நன்றாகத் தயாராகி விட்டது என்று பொருள்.

-இதை மண் பாத்திரத்தில் ஓர் ஆண்டு காலம் வரை சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.
-ஒரு கொம்பை 3-4 முறைகூட பயன்படுத்தலாம்.

-ஒரு ஏக்கர் நிலத்துக்கு 30 கிராம் கொம்பு சாண உரத்தை 13 லிட்டர் சுத்தமான நீரில் கலந்து, ஒரு மணி நேரம் இடது மற்றும் வலது புறமாக சுற்றவேண்டும்.
-கீழ்நோக்கு நாளில் மாலைவேளைகளில் பயிர் செய்வதற்கு முன்பாக நிலத்தில் இதைத் தெளிக்க வேண்டும்.

-பலதானிய விதைப்பு செய்து மடக்கி உழுத பின்பு பாத்தி பிடித்து பின்பு இதை தெளிக்கலாம்.
-இப்படித் தெளிக்கும்போது அந்த நிலத்தில் ஈரப்பதமும், மட்குகளும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

-இந்த உரத்தைப் பயன்படுத்துவதால் செடிகளின் வளர்ச்சி தூண்டப்படுகிறது.
-மண்புழுக்கள் மற்றும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது.
-மூடாக்கை மட்க வைப்பதோடு, கம்போஸ்டை வேகமாகச் செயல்பட வைக்கவும் இந்த உரம் உதவுகிறது.

#Preparation_of_BD500
Preparation 500 is made by filling a cow's horn with cow dung, and burying it in the soil during the cooler months - November through February.

During the cooler months life breathes into the soil and the soil has the tendency to be full of growth energies, which energies are absorbed into the dung through the receptive nature of the horn.

Only cow horns are used, not bull horns. The cow horn differs from a bull horn in that it has a series of calving rings at the base and has a solid tip.

The dung should be from a lactating cow which will bring in the earthly forces to the preparation. The cow should be fed with good quality fodder for two days before filling the horns to ensure the dung is full of vitality.

The horns should be buried in a pit about 16-18 inches deep and covered with soil that has been enriched with good quality compost. Be careful not to allow weeds to grow on the pit as the weed roots can grow into the preparation and also avoid trees roots.

The horns should be buried open end down so that they will not become water logged if the pit is over watered.

The pit should be kept cool by mulching with paddy straw or similar and shaded with a low thatching of coconut fronds.

The preparation when ready after 4 months should have turned into dark humus and should be sweet smelling. It should be stored in a cool place and in glazed pots or in glass jars surrounded by damp coir pith as an insulation.

#Application_of_BD500

Stirring and creating the vortex

It is sprayed up to four times a year. The best times are in October and November and then again in February and March. It is important to apply in the late afternoon.

It is used in small quantities at the rate of 30 grams in 13 litres of water per acre.
It is stirred for one hour making a vortex or crater in one direction and then reversing the direction and making a vortex in the other direction.

Preparation 500 is sprayed at the descending phase of the moon.
Stirring in water flow forms for large scale application

On larger areas a larger volume of liquid can be stirred in a 200 litre drum with a tripod supporting a stirring rod

A  flow form with an electric motor for cascade stirring mixing upto 500 litres per hour and applied with a spray nozzle.

The stirred preparation can then be sprinkled with a whisk brush over the land.

With regular application, preparation BD500 will give a soil all the characteristics needed to sustain a Living Soil.

#Benefits
-Strong humus formation
Increase in all soil bacteria, such as rhizobacteria activity (nodulation) on all legumes, e.g. dals, and an increase of the phosphate solubilising bacteria
-Increase in the mycorrhizal fungi and their hyphae
-Improved crumb structure and resultant improvement in soil tilth
-Earthworm activity is increased
Absorption and retention of water is greater. International research has found that BD soils require 25% to 50% less irrigation than conventional soils.
-Earthworm activity is increased
Absorption and retention of water is greater. International research has found that BD soils require 25% to 50% less irrigation than conventional soils.
-A deep rooting system is developed in all plants
-It will work equally well in any soil type, clays, volcanic, peat silt or weathered silica

Source: BDAI

நன்றி
Paramez Aadhiyagai
15.4.19

பசு மாட்டு சாணத்தில் உள்ள குப்பைகளை நீக்குகிறார்கள். ( இந்த சாணம் எடுப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பிருந்து தானியங்கள் கொடுப்பதை தவிர்த்து வெறும் புற்களை மட்டும் கொடுத்து பிறகு இந்த சாணத்தை சேகரிக்கிறார்கள். தூசு, குப்பைகளை நீக்கிய பின்பு சாணத்தை கொம்பில் நிரப்புகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நிரப்ப வேண்டும். சாணத்தை திணிக்க கூடாது. காற்றோட்டமாக இருக்க வேண்டும். சாணம் உள்ளே இறங்க,ஒரு கட்டையில் பக்கவாட்டில் கொம்பை தட்டுகிறார்கள்.

தண்ணீர் தேங்காத, மரங்கள் அருகில் இல்லாத, வளமான மண்ணில் ஒன்றரை அடி ஆழத்தில் பள்ளம் தோண்டிட வேண்டும்.

தோட்டிய பள்ளத்தில் கொம்பின் நுணி பகுதி மேல்நோக்கி இருக்குமாறு நட வேண்டும்.

இருக்கும் கொம்புகளை பொறுத்து பள்ளம் தோண்டிக்கொள்ள வேண்டும்.

கொம்புகளை அடுக்கிய பின்பு மண் கொண்டு நிரப்பிடலாம். வளமில்லாத நிலத்தில் புதைப்பதாக இருந்தால் மேல்மண்ணுடன் நன்கு மட்கிய கம்போஸ்ட் கலந்து அந்த மண்ணை கொண்டு நிரப்பிக்கொள்ளலாம்.

கொம்பு புதைத்த இடத்தை சுற்றிலும் குச்சிகள் ஊன்றி இடத்தை அடையாளம் செய்து கொள்ளலாம். அந்த இடத்தை வெயில் படாதவாறு மூடாக்கிடலாம்.

4 மாதம் கழித்து எடுக்கும் கொம்பு சாண எருவை 30கிராம் எடுத்து 13 லி தண்ணீரில் கலந்து ஒரு குச்சியை கொண்டு இடது பக்கமாகவும் வலது பக்கமாகவும் ஒரு மணி நேரம் மாற்றி மாற்றி சுற்றலாம்.இது ஒரு ஏக்கருக்கு போதுமானது

அதிக பரப்பில் நிலம் வைத்திருப்பவர்கள் இதுபோன்ற வடிவில் சுழலை உருவாக்கி ஒரு மணி நேரத்தில் இந்த தண்ணீரை நிலத்தில் தெளிக்கிறார்கள்.




Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY