பரங்கிக்காய் அறுவடையின்போது கவனிக்க வேண்டியது

பரங்கிக்காய் / அரசாணிக்காய்
மஞ்சள்_பூசணி / சாம்பார்_பூசணி
PUMPKIN

பரங்கிகாய்களை உணவிற்காக அறுவடை செய்திட எந்த நிலையில் வேண்டுமானாலும் அறுவடை செய்யலாம். பிஞ்சாகவோ, முற்றிய நிலையிலோ, நன்கு முற்றிய நிலையிலோ கூட அறுவடை செய்து கொள்ள இயலும். ஆனால் விதைக்காக அறுவடை செய்திட விரும்பினால், முதலில் காய்க்கும் சில காய்களையும் கடைசியில் காய்க்கும் சில காய்களையும் உணவிற்கு பறித்து கொள்ளலாம். இடைப்பட்ட காலங்களில் காய்க்கும் காய்களில் நன்கு பெரிய காய்களை விதைக்காக விட்டு விடலாம்.

நன்கு முற்றிய காயானது, பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறமாக மாறும்; காம்பும் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் அ பழுப்பு நிறத்திற்கு மாறும். பிறகு அவற்றை அறுவடை செய்து சேமித்து கொள்ளலாம். தேவையான போது காய்களை வெட்டி விதையை எடுத்து கொள்ளலாம். காய்களிலேயே விதை சேமிக்க 6-12 மாதங்கள் கூட சேமிக்கலாம். சில சமயம் காய்களுக்கு உள்ளேயே விதைகள் முளைத்து வந்துவிடும். அதனால் விரைவில் விதைகளை நீக்கி காய வைத்து சேமிக்கலாம். விதைகளை சாம்பலில் கலந்து காய வைக்கலாம்.

3 வருடம் வரையிலும் கூட விதைகள் முளைப்பு திறனோடு இருக்கும். இருப்பினும் வருடா வருடம் ஆடி முதல் புரட்டாசிக்குள் விதைத்து அதில் கிடைக்கும் காய்களில் இருந்து விதைகளை எடுத்து சேமிப்பது நல்லது.

காய்கள் அதிகமாக இருந்தால் வெட்டி காய வைத்து கால்நடை தீவனமாகவும், விதைகள் நிறைய இருந்தால் அவற்றை தோல் நீக்கி வறுத்து குழந்தைகளுக்கு தீனியாகவும் கொடுக்கலாம்.

14/2/19

நன்றி,
ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்.
fb.com/aadhiyagaiseedsavers

Source:
https://m.facebook.com/story.php?story_fbid=2385674291477718&id=1658578304187324

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY