செடி எப்படி வளர்த்தனும் எனவும், நாம எப்படி வாழனும் எனவும் நாம தான் முடிவு செய்யனும்

இலையில ஓட்டை விழுந்துட்டா பூச்சி தாக்குதல் நோய் தாக்குதல் நடந்துட்டா அந்த இலைகளை பிடுங்கி போட சொல்றாங்களே நீங்க ஏன் அப்படியே விட சொல்றீங்க..??

ஒடஞ்ச கையை வச்சிக்கிட்டு நம்ம வேலை செய்யறதில்லையா.. கை ஒடஞ்சிருந்தாலும் உடம்போடு இருக்குறத நம்ம விரும்புவோமா, இல்லை இந்த கை வேண்டான்னு வெட்டி எறிய நினைப்போமா!!
ஒடஞ்ச கையை ஒத்தாசைக்கு வச்சுக்கிட்டு நம்மனால பொழப்பு நடத்த முடியும்னா நோய்,பூச்சி தாக்குதலால பாதிக்கப்பட்ட இலையை வச்சுக்கிட்டு ஒளிச்சேர்க்கை செஞ்சு பொழச்சுக்க செடிகளுக்கு தெரியாதா என்ன!!?? நம்ம கையும் காலும் நல்லா இருக்குங்கறத வச்சு 100% ஆரோக்கியமா இருக்கோம்னு நம்மனால சொல்லீட முடியுமா என்ன!?? நமக்குள்ளயும் நோய் தாக்குதல் நடந்துக்கிட்டு தா இருக்கும்.. அதை எதிர்த்து நம்ம ஒடம்பும் சண்டை போட்டு நம்மளையும் வாழ வச்சிக்கிட்டு தா இருக்கும்.. அதுமாதிரி தா செடிகளும்.. பூச்சி நோய்ன்னு தாக்குதல் நடந்தாலும் அதை எதிர்த்து வாழ்ந்துட்டு காய்ச்சிக்குட்டே இருக்கும்..

நம்ம வளர்த்தற செடி பச்சை பசேரென மட்டுமே இருக்கனும்னு நம்ம நெனைக்க கூடாது.. அதுக்காக நம்ம செய்யற பராமரிப்பும் பாதுகாப்பும் அளவுக்கு அதிகமாச்சுனா செடிகளுக்கு கெடைக்க வேண்டிய அனுபவம் கெடைக்காமயே போயிடும்..

பசுமை குடில் போட்டு பாதுகாப்பா  செடிகளையெல்லாம் வளத்தறாங்களேன்னு கேக்கலாம்.. எங்க வளர்த்தாலும் செடிகள் வளர தான் செய்யும்..
ஏன் மனுசன் கிராமத்துலயும்,நகரத்துலயும், சந்திரன்,செவ்வாய்ன்னு போகாமலா இருக்கான். ஏசிக்கு உள்ளயே 24மணி நேரமும் மனுசன் வாழ்ந்துட்டு தான இருக்கான். எங்க வேணாலும் நம்மனால வாழ முடியும்னா.. செடிகளாலயும் எங்க வேணாலும் வாழ முடியும். ஆனா எங்க வாழனும்னு நாம தா முடிவு பண்ணனும்..🌱🌱🌱🌱🌱

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY