மரபு ரக பருத்தி விதை சேகரிப்பு

#நாட்டு_ரக_பருத்தி
#செம்பருத்தி
#கருங்கண்_பருத்தி
#பல்லாண்டு_பருத்தி

இப்படி பல பெயர் கொண்ட நம் மரபு ரக பருத்தி ஆங்காங்கே கோயில்களிலும், சில வீடுகளிலும் தெரிந்தோ தெரியாமலோ வாழ்ந்து வருகிறது.. கடந்த வருடம் சேகரித்த விதைகளை சில நூறு பேருக்கு கொடுத்திருந்தோம். இந்த வருடம் விதை தேடிக்கொண்டிருந்தபோது கண்ணில் தென்பட்டுள்ளது..
நாள்: அக்டோபர் 4 செவ்வாய்
இடம்: ஈரோடு நசியனூர் அருகே உள்ள கந்தாம்பாளையம்.
தோட்டம் அமைக்க வந்த போது கிடைத்துள்ளது..
முகநூல் நண்பர் Aravind Murugesan க்கு நன்றிகள் பல..
இந்த ரக பருத்தி பஞ்சில் திரி போட்டு விளக்கு ஒளிர்வது வீட்டிற்கு நல்லது, சிவனுக்கு உகந்தது என கூறுகிறார்கள், இப்பொழுது யாரும் பருத்திபால் குடித்திருக்க வாய்ப்பு மிக குறைவு.. பருத்திபால் செய்து  நாம் குடிக்கவும் மாடுகளுக்கு பருத்திக்கொட்டை தீவனமாகவும் கொடுத்ததும் இவ்வாறான பாரம்பரிய ரகங்களை தான். இன்றைய பொழுதில் ஒட்டு ரக பருத்திகளும் பீ.டி பருத்திகளும் தான் விவசாயிகள் பயிரிடுகறார்கள். நம்மால் இயன்றவரை தோட்டங்களிலும் வீடுகளிலும் மாடித்தோட்டங்களிலும் இந்த பருத்தியை பயிர் செய்து மரபை பாதுகாப்போம்.

நன்றி..
பரமு.





Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY