15417 சென்னை மேடவாக்கத்தில் ஒருநாள் வீட்டுத்தோட்ட பயிற்சி முகாம்

ஒரு ஏக்கரில் அல்ல..ஒரு செண்ட் இடத்தில் ஒரு குடும்பத்தின் காய்கறி தேவைகளை எப்படி பூர்த்தி செய்து கொள்வது என்ற ஒற்றை இலக்குடன் தான் எங்களின் பயணம் தொடர்கிறது..

 நிரூபித்துவிட்டீர்களா.. சாத்தியமா என கேட்காதீர்கள்.. உங்களால் அதை சாத்தியப்படுத்த இயலும்.. தயவுகூர்ந்து முயன்று பாருங்கள்.. வெறுமனே 1செண்ட் இடத்தை நிலத்திலோ மாடியிலோ ஒதுக்கி தோட்டம் அமைத்து உங்கள் குடும்பத்திற்கு தேவையான காய்கறி கீரைகளை மட்டும் அதில் உற்பத்தி செய்து பயன்படுத்துங்கள்.. தேவையை பூர்த்தி செய்ய முடிகிறது.. தேவைக்கு அதிகமாகவே கிடைக்கிறதே என்ற பதிலை தான் உங்களிடம் எதிர்பார்க்கின்றோம்..
அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி கீரைகளின் பெயர்களையெல்லாம் பட்டியலிடுங்கள்.. நல்ல தரமான விதைகளை கையில் வைத்துக்கொள்ளுங்கள். மண்ணை நன்கு வளமாக்கிக்கொண்டு விதைப்பு செய்திடுங்கள்.. மற்றதை பிறகு பார்ப்போம்.

நினைவில் கொள்ள வேண்டியது ஒன்று தான்.. அறுவடை தினசரி இருக்க வேண்டுமல்லவா..அப்படியானால் விதைப்பும் தினசரி இருக்க வேண்டும்.. புரியவில்லையா.. 5வகை கீரைகளை 2சதுர அடி பரப்பிற்கு ஒரு ரக கீரை என விதைக்க வேண்டும். ஆனால் ஒரே நாளில் விதைக்காமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கீரையை விதைக்க வேண்டும்.. இப்படி தான் ஒவ்வொரு பயிரையும் தேவைக்கு ஏற்றபடி விதைப்பது அவசியம்..

 இப்படியான சிறுசிறு விசயங்களுடன் கூடிய ஒரு நாள் வீட்டுத்தோட்ட பயிற்சி முகாம் சென்னை மேடவாக்கத்தில் கடந்த வாரம் 15.4.17 அன்று நடந்தது.. ஒரு குடும்பத்திற்கு தோட்டம் அமைத்து கொடுத்து நண்பர்களுக்கு பயிற்சியும் கொடுத்தாயிற்று.. 20பேர் குறைந்தபட்சம் இருந்தால் போதும் எங்கே இருந்தாலும் அழையுங்கள்..பயிற்சி கொடுக்கின்றோம்.. ஒரு செண்ட் நிலமோ மாடியோ இருந்தால் அவ்விடம் உங்களுக்கான காய்கறி தேவைகளை பூர்த்தி செய்யும்..என்பதை மறவாதீர்கள்..

இரண்டு செண்ட் அளவிற்கும் குறைவான பரப்பு ஒரு குடும்பம் வருடம் முழுவதும் பயன்படுத்தும் எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யுமாம்.. முயற்சி செய்து பாருங்கள்.. சித்திரை மாதம் எள்ளு விதைக்க சிறந்த பருவமாதலால் இந்த விசயத்தை உங்களுடன் பகிர்கின்றோம்..

நன்றி..
ஆதியகை
Whatsapp: 8526366796
www.aadhiyagai.com
www.aadhiyagai.blogspot.in
www.facebook.com/aadhiyagai
www.youtube.com/aadhiyagai







Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY