கோடம்பாக்கத்தில் பாம்பு புடலை விதை சேகரிப்பு
கோடம்பாக்கத்தில் பாம்பு புடலை விதை சேகரிப்பு:
(Long one is 139 inches,other one is 120inches)
சென்னை வீட்டுத்தோட்ட நண்பர்கள் வாட்ஸ்அப் குழுவில் மேற்கண்ட படமும், அதனுடன் அம்மாவின் கையிலிருக்கும் புடலையின் நிற அளவும் கொடுக்கப்பட்டு 8/4/17 அன்று செய்தி வந்தது. தகவல் கேட்டபொழுது அம்மாவின் பெயர் வசந்தி என்றும், சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார் என்றும் தகவல் கிடைத்தது. அன்றைய தினம் சென்னையிலிருந்ததால் உடனே வசந்தி அம்மாவை தொடர்பு கொண்டு பரமுவை அறிமுகம் செய்துகொண்டு படத்தில் உள்ள தகவலின் உண்மை நிலையை கேட்டபோது. தனது வீட்டு தோட்டத்தில் விளைந்தது தான் என கூறினார். இது போன்ற ரகங்கள் அரிதானதாக உள்ளதால் விதையை பாதுகாப்பதை பற்றி தகவல் தருகிறேன் அதன்படி செய்யுங்கள் என்றேன். அடுத்த நாள் வீட்டிற்கு வரும்படி கேட்டுக்கொண்டார். அடுத்த நாள் 9/4/17 சென்னை வீட்டுத்தோட்ட நண்பர் ராஜேஸ்வரி அம்மாவுடன் மதியத்திற்கு மேல் அவரது வீட்டை அடைந்தோம்.
விதையை நான் போட்டேனா, அல்லது தானாக வளர்ந்ததா என தெரியவில்லை, ஒரே ஒரு கொடி தான் உள்ளது, என்றார்.. அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு சிறிய இடத்தில் உள்ள தோட்டம் அது.கொடியானது எழுமிச்சை மரத்தில் ஏறி காய்த்திருந்தது.
சில காய்கள் மரத்தில் சிக்கி பாம்பு போல அங்கேயே சுருண்டு நெளிந்து கொண்டிருந்தது. காய்களை தாங்கள் மட்டுமே ருசி பார்க்காமல், வீட்டில் வேலை பார்ப்பவர், காவலாளி, பக்கத்து குடியருப்பில் உள்ளவர் என நிறைய பேர் பகிர்ந்து உண்ணதாக கூறினார். நிறைய நண்பர்கள் விதை கேட்டதால் இனி விதைக்காக முழுமையாக விட்டுவிட்டதாக கூறினார். பஞ்சகவ்யமும் அமிர்த கரைசலும் தானே செய்து இடுபொருளாக பயன்படுத்தி வருகிறார்.
புடலை விதை சேகரிக்கும்போது, விதைக்காக அறுவடை செய்யும்போது மட்டும் காயை பச்சையாக இருக்கும்போது பறிக்காமல் முழுமையாக பழுக்க விட்டு பறிக்க வேண்டும்..
விதையை உள்ளிருந்து எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து சில நாட்கள் நிழலிலேயே காய வைத்து பின்பு பத்திரப்படுத்தலாம்.
பச்சை சாணம் எடுத்து வந்து சிறு வறட்டிகளாக தட்டி அதனுள் விதைகளை திணித்து வைக்கலாம்.
அமாவாசை நாட்களில் விதைகளை வெளியில் எடுத்து வைக்கலாம்.
மீண்டும் ஆடி மாசம் விதைப்பு செய்யலாம்.
விதையை பாதுகாக்கும் வசந்தி அம்மா தம்பதியும் அவர்களை அறிமுகம் செய்த ராஜேஸ்வரி அம்மா தம்பதியும். விதைகள்-வீட்டுத்தோட்டம் என்பதையும் கடந்து பழமையான அன்பு நிறைந்த தாய்மையை உணர முடிகிறதெனவும், அங்கு சென்றதிலிருந்து வசந்தி அம்மாவிடம் அதை காண்பதாகவும் ராஜீ அம்மா கூறிக்கொண்டிருந்தார்.
ஆர்வத்தில் அனைவருக்கும் விதை கொடுத்துவிட்டு நாம் விதைகளை இழந்துவிடுவதுண்டு. அதற்காக சில யோசனைகள் கூறி வந்தேன்.
1) எத்தனை பேருக்கு விதை கொடுத்தாலும் உங்களிடம் 20விதைகள் கட்டாயம் இருக்க வேண்டும்.
2)யாருக்கு விதை கொடுத்தாலும் ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.
3) 3விதைகளுக்கு மேல் கொடுக்க வேண்டாம்.
4) 6-7மாத கெடு கொடுத்து 10-20விதைகள் திரும்ப கொடுக்கும்படி கேட்க வேண்டும்.
முற்றிய புடலையில் விதை எடுத்துவிட்டு, நாரை நீக்கிவிட்டு, சிறிய துண்டுகளாக்கி மோரில் போட்டு கொடுத்தார். 5விதைகள் விதை வங்கிக்கு கொடுத்துள்ளார்.
தாம்பரம்- அகத்தியிலிருந்து சேகரித்து வந்த விதர்பா கத்தரியில் சில விதைகளை அவர்களுக்கு கொடுத்து விட்டு புடலை விதைகளை பெற்று வந்தேன்.
அவ்வளவு நீளமாக காய் இருந்தாலும் காயிலிருந்த விதைகளின் அளவு மிக குறைவு தான்..
வீட்டுத்தோட்டங்கள் தான் இன்றைய மரபு விதை வங்கிகளாக இருந்து வருகின்றன.. விவசாயிகளிடம் மரபு விதைகள் தற்சமயம் இருக்குமானால் அவ்விதைகள் சந்தைக்கு ஏற்றதாக இருக்க வேண்டி உள்ளது. அல்லது அந்த விவசாயி தனது தேவைக்காக அவ்விதைகளை வைத்திருப்பார். இரண்டாவதாக கூறிய விசயம் தான் இங்கே கவனிக்க வேண்டியது. மரபு விதைகளை பாதுகாக்க இங்கு யாரும் தேவையில்லை, உழவன் அவன் தேவைக்காகவும் உணவு உற்பத்தி செய்யும்பொழுது..
பார்ப்போம்..நடக்குமா என்று..
10/4/17
பரமு
super anna thodarattum ungal paani
ReplyDeleteungal muyartchi menmelum valara valthukal
அருமை.எனக்கு இந்த ரக புடலை விதை வேண்டும். கிடைக்குமா?
ReplyDeleteஅற்புதம். அரிதான இவ்விதைகள் பரவ வேண்டும்
ReplyDeleteTinting the Stainless Steel Spinning Titanium Spinning
ReplyDeleteThese stainless titanium uses steel stainless steel spinning blades titanium bolt measure 10mm by 2.5mm, while the blades titanium network surf freely measure 10mm by 3.5mm and they weigh titanium rod in leg 40g. polished titanium This makes stainless steel