பாரம்பரிய விதைகள் பரவலாக்கும் எளிய முறை

தம்பி போன வருசம் பத்து விதை வாங்குனேன்.. வீட்டில் விதைச்சதுல நல்லா கொடி காய்ச்சுது.. காயும் நல்ல ருசி.. சுற்றி இருக்குறவங்களுக்கும் கொடுத்தோம்..நம்ம காய்க்கு நல்ல வரவேற்பு.. ஒரு காயை விதைக்கு விட்டு எடுத்து 20 செண்டுல விதைச்சு சுத்தி இருக்குற கடைகளுக்கெல்லாம் கொண்டு வந்து கொடுத்தட்றோம்.. பக்கத்து தோட்டத்துக்காரரும் விதை கேட்டிருக்காரு.. பத்து விதை கொடுத்துருக்கேன் யா.. ரொம்ப சந்தோசம்ங்க ஐயா.. இது தான் பாரம்பரிய விதைகளை பரவலாக்குற முறை.. பாரம்பரிய விதைகளை பரவலாக்கம் செய்ய நம்ம சிபாரிசு செய்யும் முறையும் இதுதான்.. நன்றி Paramez Aadhiyagai Aadhiyagai Seedsavers Farm ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்