ஆளுயர புடலை ரகங்கள்
பாம்பு புடலை மற்றும் வரிப்புடலை ரகங்கள்: 7 முதல் 10 அடி நீளம் வரை வளரக்கூடியவை. பெருவணிக சந்தைக்கு உகந்ததாக இல்லை என்றாலும், உள்ளூர் சந்தைகளுக்கும் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடுவதற்கும் ஏற்ற ரகமாக இருக்கும். காய் நன்கு முற்றி 7-9 அடி நீளம் வரையிலும் வளர்ந்த பின் தான் அறுவடை செய்ய வேண்டும் என்பதில்லை, ஒரு காய் நான்கைந்து அடி நீளம் வளர்ந்துவிட்டால் தங்கள் வீட்டு தேவைக்கு அந்த காய் போதும் என்றால் அந்த காயை அறுவடை செய்து வீட்டு தேவையை பூர்த்தி செய்யலாம். ஓரளவு முற்றும் முன்பே அறுவடை செய்து வந்தால், நிறைய காய்கள் காய்க்கும். ஒரு காயை நன்கு நீளமாக வளரும் வரை விட வேண்டும் என்றால், அடுத்தடுத்த காய்கள் காய்ப்பதற்கு தாமதமாகும், விளைச்சல் குறையும். விதைக்காக தேர்வு செய்யும் காயை மட்டும் பழமாகும் வரை கொடியிலேயே விட்டு பிறகு அறுவடை செய்து விதையை எடுக்கலாம். உணவுக்காக பிஞ்சாக அறுவடை செய்து நிறைய விளைச்சல் பெறலாம். நாட்டு ரக விதைகள் பெறுவதற்கு 085263 66796 என்ற எண்ணிற்கு whatsapp செய்யலாம் அல்லது www.aadhiyagai.co.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம் Paramez Aadhiyagai Aadhiyagai Seedsavers Farm