எந்தெந்த விதைகளை எல்லாம் சேமிக்கலாம்.்

 நாம் தற்போது அன்றாடம் பயன்படுத்தும் தாவர உணவுகளில் பெரும்பாலானவை நம் பகுதிக்கான உள்ளூர் ரகங்களாக இருப்பதில்லை. நிறைய உணவு பயிர்களின் பூர்வீகம் வெவ்வேறு நாடுகளாக இருக்கின்றன. இவை நம் உள்ளூர் ரகங்கள் இல்லை.. அதனால் இவற்றின் விதைகளை சேகரிக்க தேவையில்லை.. பயின்படுத்த தேவையில்லை என கூற இயலாது இல்லையா.. 


பழங்கால மனிதர்கள் காடுகளில் வாழ்ந்த போது காடுகளில் கிடைக்கும் உணவுகளை தங்களுக்கான உணவு என முதலில் அடையாளம் கண்டு கொண்டனர். பிறகு அவற்றை உணவாக எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு அந்த தாவரங்களின் பழங்களை, காய்களை, தானியங்களை உணவாக உட்கொண்டுவிட்டு மீதமிருந்த விதைகளை தாங்கள் வாழ்ந்த இடங்களுக்கு அருகிலேயே வீசி எறிந்தனர். அவை முளைத்து வந்து மீண்டும் தங்களின் உணவுகளை பூர்த்தி செய்தது. அதன் மூலமாக தாங்கள் சேகரித்து வந்த தாவரங்களின் பொருட்கள் தங்கள் உணவு தேவையை மட்டும் பூர்த்தி செய்யவில்லை. அவற்றிலிருந்து புதிதாக தாவரங்களையும் உருவாக்க முடியும், அவற்றை விதைப்பதன் மூலம் தங்களுக்கு அருகிலேயே அந்த உணவு கிடைக்கும் போன்ற அடிப்படைகளை உணர்ந்தனர். இவ்வாறாக உணர்ந்த பின்னரே, பின் நாட்களில் தங்களுக்கு என ஒரு இடத்தை தேர்வு செய்து விவசாயம் செய்ய துவங்கும் பொழுதே தங்கள் உணவு என அடையாளம் கண்டு தாவரங்களை தாங்கள் தேர்வு செய்த இடத்திலேயே பயிரிட்டு உணவாக உட்கொள்ள தொடங்கினர். 


நம் முன்னோர் முதலில் தேடியது விதைகளை அல்ல, உணவுகளை தான்.. தங்களுக்கான உணவுகளை அடையாளம் கண்டதிலிருந்தே அவற்றின் விதைகளையும் சேகரித்து பயிரிட்டு விவசாயம் செய்யவும் தொடங்கினர்.  இந்த பழங்கால மக்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாவரங்களை தங்கள் வாழ்வில் பயன்படுத்தி வந்தனர், காலப்போக்கில் தாங்கள் பயன்படுத்தி வந்த தாவரங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைய தொடங்கி தற்பொழுது மிகக் குறைந்த அளவிலான தாவரங்களை மட்டுமே மனிதன் பயன்படுத்தி வருகின்றான். இரண்டு இலக்கங்களுக்கும் குறைவான தாவரங்களை பயன்படுத்தி வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.


நிகழ்கால கதைக்க வருவோம்.. உலக அளவில் பயன்பாட்டில் இருந்த தாவர உணவுப் பொருள்கள் நம் பகுதியை வந்தடைந்து விட்டன. மற்ற நாடுகளைச் சேர்ந்த உணவுகள் காய்கறிகள், இதர பயன்பாட்டிற்கு உடைய தாவரங்கள் நம் பகுதிக்கு வந்து கொண்டிருக்கின்றன. இதில் காய்கறிகளை எடுத்துக் கொண்டோமேயானால் நம் பகுதிக்கு பூர்வீகம் இல்லாத எண்ணற்ற தாவரங்களை நாம் பயன்படுத்த தொடங்கி விட்டோம். உணவாக நாம் பயன்படுத்த தொடங்கினாலும் அவற்றின் விதைகள் நம் கையில் இல்லை. அவை பெரும் நிறுவனங்களின் கைகளில் இருக்கின்றன. அவற்றின் விதைகளை நாம் உற்பத்தி செய்வதில்லை, அதற்கான தொழில் நுட்பங்களும் நாம் அறிந்திருக்கவில்லை. அதனால் நிறுவனங்கள் அவற்றின் விதைகளை அவற்றின் ஆதாரங்களை தங்கள் கைகள் வசம் வைத்துள்ளனர். நாம் எதை உணவுகளாக உட்கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்வதாக உள்ளது. அதனால் அதற்குரிய பெருந்தொகையை நாம் ஒரு வருடமும் செலவு செய்து கொண்டே இருக்கின்றோம்.







பூர்வீகம் எதுவாக இருப்பினும் நம்முடைய உணவுத்தட்டுகளில் அவை உணவாக பங்கு வகிக்கின்றன. ஆனால் அவற்றின் விதைகள் நம் கைவசம் இல்லை. இறுதியாக கூறிக் கொள்வது என்னவென்றால் எவையெல்லாம் நம் அன்றாட பயன்பாடுகளில் இருக்கின்றனவோ அவற்றின் ஆதாரங்களான விதைகளும், நம் கைவசம் இருக்க வேண்டும். இவை வேற்று நாட்டின் பூர்வீகங்கள் அதனால் அவற்றின் விதைகளை நம் சேகரிக்க தேவையில்லை என்று இல்லாமல், நம் அன்றாட உணவில் பயன்படுத்தி வரும் அனைத்து விதைகளையும் நாம் சேகரித்து பாதுகாப்போம். பரவலாக்குவோம்.. 


அதற்காக நம் நாட்டின் பூர்வீக ரகங்களை கவனம் செலுத்த வேண்டாம் என்று கூறவில்லை அவற்றில் நாம் பெரும் கவனம் செலுத்துவோம். அதே சமயம் நம் அன்றாட பயன்பாட்டில் உள்ள தாவரங்களின் விதைகளை சேகரிப்பதிலும் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துவோம்.


படம்: உணவு பயிர்களின் பெயர்களும், அவற்றின் பூர்வீகமும். 


நன்றி

Paramez Aadhiyagai 

Aadhiyagai Seedsavers Farm 

ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY