நிரந்தர வேளாண்மை பண்ணை வடிவமைப்பு Permaculture zones in farm

நிரந்தர வேளாண்மை பண்ணை வடிவமைப்பு Permaculture zones in farm விவசாய நிலத்தில், நிரந்தர வேளாண்மை செய்ய துவங்கும் போது, நிலத்தை அதற்கேற்றவாறு பிரித்து வேலை செந்ந வேண்டும். இந்த நிரந்தர வேளாண்மை முறையை புதிதான முறையாக நாம் எடுத்துக்கொள்ள தேவையில்லை. தோட்டத்திற்குள் நாம் குடியிருந்து வேளாண்மை செய்யும் பொழுது, அன்றாட பணிகளை எளிமையாக செய்வதற்காகவும், தொடர்ந்து ஓய்வின்றி வேலை செய்துகொண்டே இல்லாமல் இருப்பதற்காகவும் நாம் நிலத்தை பிரித்து வேலை செய்வதற்காக நிரந்த வேளாண் மண்டலங்கள் (Permaculture Zones) என பெயர் வைத்துக்கொள்ளலாம். இந்த முறையில் நிலத்தை, அதன் பயன்பாடு மற்றும் பராமரிப்பின் அடிப்படையில் வகைப்படுத்திக்கொள்ள முடியும். வீட்டின் அருகாமையில் அதிக கவனம் தேவைப்படும் பயிர்களை வளர்ப்பதில் தொடங்கி, வீட்டிலிருந்து தூரச் செல்லச் செல்ல பராமரிப்புத் தேவை குறையும் பகுதிகளை அடையாளம் கண்டு, அதற்கேற்பப் பயிரிடுதல் இதன் அடிப்படை. இந்த மண்டல அமைப்பு, ஆற்றல், நேரம் மற்றும் உழைப்பை திறம்படப் பயன்படுத்த உதவுகிறது. விவசாய நிலத்தில் நிரந்த வேளாண் மண்டலங்கள் permaculture zones ஆறு வகைகளாகப் பிரிக்கப்படுகி...