Posts

Showing posts from November, 2017

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY

Image
பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY வரி பீர்க்கன்  (சாதாரண பீர்க்கன் தான், அன்றாட சமையலில் நாம் பயன்படுத்தும் ரகம்) வரி பீர்க்கன் -நீளம்  வரி பீர்க்கன் - குட்டை வரியில்லா பீர்க்கன்  (மெழுகு பீர்க்கன் போல இருக்கலாம், ஆனால் சாதாரண பீர்க்கன தான், சாதாரண பீர்க்கன் விதை போல தான் இருக்கும்) seed source: chatisgarh. வரியில்லா பீர்க்கன் மெழுகு பீர்க்கன் (சமைக்கலாம், விதை வெள்ளையாக இருக்கும், நார் உடல் தேய்த்து குளிக்கலாம், ஆனால் பேய் பீர்க்கன் நார் தான் பஞ்சு போல இருக்கும்) மெழுகு பீர்க்கன், நுரை பீர்க்கன் என பல பெயர். பேய் பீர்க்கன் அளவில் சிறியதாக இருக்கும். பேய் பீர்க்கன்  (காய் கசக்கும்., விதை கருப்பாக இருக்கும், உடம்பு தேய்க்கும் நாராக இதன் நாரை பயன்படுத்தலாம்) வெள்ளை விதைகள் மெழுகு பீர்க்கன் கருப்பு விதைகள் பேய் பீர்க்கன் வரியில்லா குட்டை பீர்க்கன்  (2-3 இஞ்ச்) நீளமுள்ள சிறிய அளவிலான பீர்க்கன். சாதாரண பீர்க்கன் போலவே சமைக்க பயன்படுத்தப்படுகிறது.  Seed source: chatisgarh சிட்டு பீர்க்கன் என பெயர் வை...

செம்பருத்தி /மர பருத்தி/பல்லாண்டு பருத்தி/native cotton/pernial cotton

Image
செம்பருத்தி /மர பருத்தி/பல்லாண்டு பருத்தி/native cotton/pernial cotton 2014 ஆம் ஆண்டு இந்த ரக பருத்தியை பற்றி அறிந்து கொண்டோம். விதை சேகரித்து 2015 ஆம் ஆண்டு தோட்டத்தில் பயிரிட்டோம். தற்போது அனைவருக்கும் இதன் விதைகளை  கொடுத்து வருகிறோம். அளவில் சிறிய பருத்தி, பஞ்சு குறைவாக கிடைக்கின்றது. பல்லாண்டு காலம் வாழும் நிரந்தர பயிராகவும், வறட்சி தாங்கி வளரும் தாவரமாகவும், ஆடுகளுக்கு தீவனமாகவும் பருத்திப்பாலுக்கான நல்ல பருத்தி கொட்டை தரும் ரகமாகவும் கோவை ஈரோடு பகுதிகளில் பரவலாகவும் உள்ளது. கோயில்களில் வளர்க்கப்படுகிறது. விளக்கு போடும் திரியாக இதன் பஞ்சு பயன்படுத்தலாம். வீட்டுக்கு ஒரு செடி வளர்க்க முயல்வோம்.  தோட்டத்திற்கு வரும் உறவினர்கள் என்னப்பா, பூச்செடிகளை வளர்க்கறீங்களா, ரோசா பூத்திருக்கு அழகா இருக்கேப்பா..என கூறுவதும், பெண்களோ  புளிச்சை கீரை எவ்வளவு உயரமா போயிருக்கு பாரேன் என கூறுவதும் நிகழ்கிறது.  பெயரை கேள்விபட்டதும் செம்பருத்தியா..நாங்க பார்த்த செம்பருத்தி இப்படி இருக்காதே என கேட்டபோது, இதன் பெயர் தான் செம்பருத்தி.. நாம் செம்பருத்தி என அழைக்கும் பூச்செடியை செம்...