செம்பருத்தி /மர பருத்தி/பல்லாண்டு பருத்தி/native cotton/pernial cotton

செம்பருத்தி /மர பருத்தி/பல்லாண்டு பருத்தி/native cotton/pernial cotton

2014 ஆம் ஆண்டு இந்த ரக பருத்தியை பற்றி அறிந்து கொண்டோம். விதை சேகரித்து 2015 ஆம் ஆண்டு தோட்டத்தில் பயிரிட்டோம். தற்போது அனைவருக்கும் இதன் விதைகளை  கொடுத்து வருகிறோம். அளவில் சிறிய பருத்தி, பஞ்சு குறைவாக கிடைக்கின்றது. பல்லாண்டு காலம் வாழும் நிரந்தர பயிராகவும், வறட்சி தாங்கி வளரும் தாவரமாகவும், ஆடுகளுக்கு தீவனமாகவும் பருத்திப்பாலுக்கான நல்ல பருத்தி கொட்டை தரும் ரகமாகவும் கோவை ஈரோடு பகுதிகளில் பரவலாகவும் உள்ளது. கோயில்களில் வளர்க்கப்படுகிறது. விளக்கு போடும் திரியாக இதன் பஞ்சு பயன்படுத்தலாம். வீட்டுக்கு ஒரு செடி வளர்க்க முயல்வோம். 

தோட்டத்திற்கு வரும் உறவினர்கள் என்னப்பா, பூச்செடிகளை வளர்க்கறீங்களா, ரோசா பூத்திருக்கு அழகா இருக்கேப்பா..என கூறுவதும், பெண்களோ  புளிச்சை கீரை எவ்வளவு உயரமா போயிருக்கு பாரேன் என கூறுவதும் நிகழ்கிறது. 

பெயரை கேள்விபட்டதும் செம்பருத்தியா..நாங்க பார்த்த செம்பருத்தி இப்படி இருக்காதே என கேட்டபோது, இதன் பெயர் தான் செம்பருத்தி.. நாம் செம்பருத்தி என அழைக்கும் பூச்செடியை செம்பரத்தை என அழைக்க வேண்டும் என கூறினார் விதை கொடுத்த விவசாய நண்பர்.

தகவல்: ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் 8526366796
பதிவு செய்த நாள்: நவம்பர் 20 2017



12அடி உயரமுள்ள செம்பருத்தி .. நேராக மேல்நோக்கி வளரும். அழகுக்காகவும், வேலிகளிலும் தாராளமாக வளர்க்கலாம். 

வறட்சியிலும் பசுமை மாறா தாவரம். வறட்சி காலத்தில் ஆடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தி கொண்டோம்

இந்த செஞ்சிவப்பு நிற பூவிற்காக தான் செம்பருத்தி எனும் பெயர் வந்ததோ என்னவோ..

கருஞ்சிவப்பு நிற தண்டுகள். வெட்டினால் இதிலிருந்து கிடைக்கும் சாயத்தை இயற்கை சாயத்திற்காக பயன்படுத்தலாம்.

பருத்தி காய்கள்.. பஞ்சு வெடிப்பதற்கு முன்பு


பருத்தி வெடித்த பின்பு

விரல்களை போல இலைகள்.. 

பருத்தி விதைகள்..இந்த ரக பருத்தியில் பஞ்சு அதிகம் கிடைப்பதில்லை. ஆனால் பருத்திக்கொன்டை நன்கு கிடைக்கின்றது. பருத்திப்பால் செய்து குடிக்கலாம். இரண்டு வருடமானாலும் 100% முளைப்புத்திறன் உள்ளது.

தண்டை வெட்டியபோது சாயம் கைகளில் ஒட்டிக்கொண்டது.


செம்பருத்தி எனும் பருத்தி ரகத்திலிருந்து கிடைக்கும் பருத்தி பஞ்சு.

Comments

  1. எனக்கு இதன் விதைகள் வேண்டும் நான் மேட்டூர் கிடைக்குமா நண்பா...

    ReplyDelete
  2. எனக்ககு இதன் பூக்கள் மருத்துவதிற்கு தேவை. யாரவது தருவிங்களா

    ReplyDelete
    Replies
    1. Evvalavu thevai padukiradhu my cl no 9994907462

      Delete
  3. எனக்கு இந்த விதை வேண்டும்.அண்ணா..

    ReplyDelete
  4. சகோ, எனக்கு இந்த சிவப்பு பருத்தி செடியின் விதைகள் வேண்டும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY