பீர்க்கன் விதை பன்மயம்
RIDGE GOURD SEED DIVERSITY
வரி பீர்க்கன் (சாதாரண பீர்க்கன் தான், அன்றாட சமையலில் நாம் பயன்படுத்தும் ரகம்)
|
வரி பீர்க்கன் -நீளம் |
|
வரி பீர்க்கன் - குட்டை |
வரியில்லா பீர்க்கன் (மெழுகு பீர்க்கன் போல இருக்கலாம், ஆனால் சாதாரண பீர்க்கன தான், சாதாரண பீர்க்கன் விதை போல தான் இருக்கும்) seed source: chatisgarh.
|
வரியில்லா பீர்க்கன் |
மெழுகு பீர்க்கன் (சமைக்கலாம், விதை வெள்ளையாக இருக்கும், நார் உடல் தேய்த்து குளிக்கலாம், ஆனால் பேய் பீர்க்கன் நார் தான் பஞ்சு போல இருக்கும்)
|
மெழுகு பீர்க்கன், நுரை பீர்க்கன் என பல பெயர். பேய் பீர்க்கன் அளவில் சிறியதாக இருக்கும். |
பேய் பீர்க்கன் (காய் கசக்கும்., விதை கருப்பாக இருக்கும், உடம்பு தேய்க்கும் நாராக இதன் நாரை பயன்படுத்தலாம்)
|
வெள்ளை விதைகள் மெழுகு பீர்க்கன்
கருப்பு விதைகள் பேய் பீர்க்கன் |
வரியில்லா குட்டை பீர்க்கன் (2-3 இஞ்ச்) நீளமுள்ள சிறிய அளவிலான பீர்க்கன். சாதாரண பீர்க்கன் போலவே சமைக்க பயன்படுத்தப்படுகிறது.
Seed source: chatisgarh
|
சிட்டு பீர்க்கன் என பெயர் வைக்கலாமோ |
|
விதை சாதாரண பீர்க்கன் போன்றே உள்ளது. |
கொத்து பீர்க்கன் (கொத்து கொத்தாக காய்க்கும் இந்த ரக பீர்க்கன் தமிழகத்தில் நான் கண்டதில்லை. மங்களூரில் ஒரு மாடித்தோட்டம் வைத்திருக்கும் ஒருவர் முகநூலில் பகிர்ந்துகொண்டே இருப்பார். இறுதியில் இவ்விதைகளையும் 2017 நவம்பர் மாதம் சேகரித்தோம்.
seed source: bangalore.
|
கொத்து பீர்க்கன் |
குண்டு பீர்க்கன் (கிரிக்கெட் பந்து அளவுள்ள இந்த விதைகளை சேகரிப்பதற்காகவே மார்ச் 2017 இல் ஐதராபாத் சென்றோம். அங்கே விதை சேகரிப்பாளர்களால் சேகரித்த பாதுகாத்து வரும் விதைகளை சிலவற்றை நாங்களும் பெற்று வந்தோம். seed source: Hydrabad
|
குண்டு பீர்க்கன் (கிரிக்கெட் பந்து அளவு) |
நமது பகுதிகளிலேயே
குட்டை பீர்க்கன் நீட்டு பீர்க்கன், சித்திரை பீர்க்கன் (கோடை காலத்தில் பயிரிடும் ரகம்),
பனையேறி பீர்க்கன் (கோபி பகுதியில் கேள்விபட்ட ரகம்) என பல்வேறு வித்துகள் நம்மை சுற்றிலும் உள்ளது.
பீர்க்கன் போன்ற கொடி காய்கறிகள் கசந்து போவதற்கு காரணம் மகரந்த சேர்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையாக இருக்கும். கிராமங்களில் இந்த கொடிகளில் பாம்பு ஏறிவிட்டதென அந்த கொடியை பிடுங்கி போட்டுவிடுவார்கள். ஆனால் அது உண்மையில் மகரந்த பிரச்சனையாக இருக்கும். வேறு வழியில்லை. அந்த வித்து முழுவதும் கசப்படிக்கும். அதனால் பிடுங்கி போட்டுவிடவேண்டியது தான். ஒசூரை சேர்ந்த நண்பரின் வீட்டருகே இருக்கும் விவசாயி ஒருவர் இந்த கசப்படிக்கும் காயையும் உணவாக எடுத்து கொள்கிறார் என நண்பர் கூறினார். கசப்பை நீங்கள் விரும்பி உண்பவராக இருந்தால் அந்த ருசி பிடித்திருந்தால் தாராளமாக உட்கொள்ளுங்கள் என நண்பரிடம் அந்த விவசாயி கூறினாராம்.
தகவல் பகிர்வு:
ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்
8526366796
நாள்: 23.11.17
Comments
Post a Comment