பூந்திக்கொட்டை / பூவந்தி மரம் / சோப்புக்காய் மரம் Soapnut tree / Indian soapberry tree / washnut tree

பூந்திக்கொட்டை / பூவந்தி மரம் / சோப்புக்காய் மரம் Soapnut tree / Indian soapberry tree / washnut tree இயற்கை மனிதருக்கு அளிக்கும் பல அரிய கொடைகளில் ஒன்று மரங்கள். இவை உடலுக்கும், மனதுக்கும் பலவித நன்மைகள் தருவதாக அமைந்திருக்கும். சில மரங்களின் பயன்கள், சாப்பிடும் மருந்தாகவும், சில வெளி உபயோகத்துக்கும் என்ற வகையில் இருக்கும். சில மரங்கள் உள்ளுக்கும் மேலுக்கும் பயன்கள் தரும் வகையில் இருக்கும். அப்படி ஒரு பயன்தரும் மூலிகை மரம்தான் பூந்திக்கொட்டை மரம் எனும் மணிப் பூவந்தி மரம். கிராமங்களில், பூந்திக்கொட்டை மரம், பூவந்தி மரம், சோப்புக்காய் மரம் என்று அழைக்கப்படும் மணிப்பூவந்தி மரம், அடர்ந்த மலைப் பகுதிகளில் பரவலாக வளரக் கூடியது. தமிழகத்தின் ஆனைமலை, பழனி மற்றும் கொல்லிமலைப் பகுதிகளின் உயரமான இடங்களில் காணப்படும் மணிப்பூவந்தி மரம், பல ஆயிரம் ஆண்டு கால தொன்மையான பாரம்பரியம் கொண்ட, பழம்பெரும் மரங்களில் ஒன்றாகும். இந்த மரத்தின் இலைகள் சற்றே நீண்ட வடிவம் கொண்டவை, வெண்மை வண்ண மலர்கள் கொத்தாகப் பூத்துக் குலுங்கும். கோடைக் காலத்தில் காய்க்கும் இந்த மரத்தின் காய்கள் மற்றும் பழங்கள், மிக்க ம...