மிருதுவான பற்பொடி

ஓர் சிறந்த #பல்பொடி

இன்னிக்கு காலையில பக்கத்து தோட்டத்து ஐயாவை பார்க்க போயிருந்தப்ப வரப்புல ஏதோ தேடீட்டு இருந்தாரு.. என்னங்க ஐயா தேடறீங்கன்னு கேட்டேன்.. பல்லு வெளக்குனா ஈறுல இரத்தமா வருது சாமி..அதான் எறும்பு குழியை தேடறேன்னு சொன்னாரு.. ஒரு எறும்பு குழியை தேடி பிடிச்சு அந்த குழியை சுத்தி இருந்த மண்ணை எடுத்து பல்லு வெளக்கீட்டு வந்தவரு சொன்னாரு, நானும் ஊரெல்லாம் தேடி எது எதுலயோ பல்லு வெளக்கி பார்த்தேன்..பல்லுல விரல் பட்டாவே இரத்தம் வந்துரும். இல்லை குச்சி வச்சு பல்லு வெளக்குனாலும் இரத்தம் வரும். கொஞ்ச நாளா #ஆலம்விழுதுல பல்லு வெளக்கிட்டு இருந்தேன். அதுக்கப்புறம் இந்த எறும்பு குழி மண்ணுல வெளக்குறேன்.. அருமையா இருக்குதுன்னு சொன்னாரு.. சாதாரணமா செங்கல்லை இடிச்சு வெளக்குவோம், இல்லைனா தோட்டத்துல மண்ணை எடுத்து பல்லு வெளக்குவோம். ஆனால் இந்த எறும்பு குழி மண்ணு அவ்ளோ அருமையா இருக்கு.. 

#softest_tooth_powder
#way_to_self_sustainable

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY