ஒரு மாத கால வீட்டுத்தோட்டம் சார்ந்த இணையதள பயிற்சி

#LEARN_FIRST

இணையதளம் மூலமாக ஒரு மாத கால வீட்டுத்தோட்ட வகுப்புகள்..
என் வீட்டிற்கு தேவையான உணவை நானே உற்பத்தி செய்துகொள்ள விரும்புகிறேன். ஆனால் அதற்கான அடிப்படையான விசயங்கள் ஏதும் தெரிவதில்லை..என நினைக்கும் நண்பர்களுக்காக.. 

இரண்டு வருடங்களாக தோட்டம் அமைப்பதில் நாங்கள் கற்ற விசயத்தை  ஒரு மாத பயிற்சியாக கற்றுத்தருகிறோம். இந்த பயிற்சி வீட்டுத்தோட்டம் அமைப்பவர்களை பயிற்றுனர்களாகவே மாற்றி விடுகிறது. நீங்கள் உங்களுக்காக தோட்டம் அமைத்திருந்தாலோ, மற்றவர்களுக்கு தோட்டம் அமைத்து தரும் வேலையை செய்து வருபவர்களாகவோ இருக்கலாம்.. அடிப்படையான விசயங்களை  கற்றுக்கொண்டு செயல்படுங்கள்.. செயல்படுத்துங்கள்.. வாட்ஸ்அப் மூலம் வகுப்புகளை பயிற்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். டிசம்பர் 20 அன்று பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது. கலந்துரையாடலும் சில வீட்டுப்பாடங்களுமாக கூட பயிற்சிகள் இருக்கும். நோக்கம் ஒன்று தான்.. 400சதுர அடி இடப்பரப்பு 4,5பேர் உறுப்பினர்களாக கொண்ட குடும்பத்தின் காய்கறி தேவையை பூர்த்தி செய்திடும் என்று அனைவரும் கற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டும்..

பயிற்சி காலத்திலேயே உங்களுக்கான தோட்டத்தை அமைக்க துவங்குங்கள். பயிற்சி முடிந்த பின்னும் உங்களுடைய வீட்டுத்தேவையை பூர்த்தி செய்யும் காலம் வரை உடன் இருப்போம். தேவையான ஆலோசனைகளை வழங்குகின்றோம்.

இந்த பயிற்சிக்கு பிறகு,
நாங்கள் நடத்தும்  ஒரு நாள் களப்பயிற்சியில் கலந்து கொள்வதன் மூலம் நேரடி அனுபவம் கிடைக்கும்.

மற்ற வீட்டுத்தோட்டங்களை பார்வையிடுவதன் மூலம் அனுபவங்கள் நிறைய கிடைக்கும்.

அவ்வபோது சந்திப்புகளை ஏற்பாடு செய்வதன் மூலம் அனுபவங்கள்,சந்தேகங்கள்,விதைகள் என அனைத்தும் பகிர்ந்துகொள்ள இயலும்.

ஒரு மாத பயிற்சிக்கு பிறகு குழுவாக செயல்பட உதவுகிறோம்.

பயிற்சிக்கு பிறகு தோட்டம் அமைக்க உதவுகிறோம். 

8526366796 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தங்களுடைய பெயரை பதிவு செய்து கொள்ளவும். 

பயிற்சி கட்டணம் - 1000ரூபாய்

பயிற்சியில் நாம் கற்றுக்கொள்ளவிருக்கும் தகவல்கள்: 
1)ஏன் வேண்டும் வீட்டுத்தோட்டம்
2)வீட்டுத்தோட்டம் மூலம் என்னென்ன தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்து கொள்ள இயலும்.
3)என்னென்ன செடிகள் உங்களுக்கு தேவை
4)எவ்வளவு இடம் உங்களுடைய விருப்பமான தோட்டத்திற்கு தேவை
5)400சதுர அடி இடத்தை எப்படி முழுமையாக பயன்படுத்துவது
6)பயிர்களின் சாகுபடி முறைகள்
7)உங்கள் வீட்டின் தோட்டத்தை எப்படி முழுமையாக பயன்படுத்துவது
8)பயிர் சுழற்சி முறைகள்
9)உங்கள் வீட்டின் கொடி காய்கறிகளுக்கு எப்படியெல்லாம் பந்தல் அமைத்து தேவையை பூர்த்தி செய்வது
10)தினந்தோறும் கீரையை அறுவடை செய்யும் சுழற்சி முறைகள்.
11)மூலிகைகளை, பூக்களை பற்றிய கலந்துரையாடல்
12)மரபு ரக விதைகள் பற்றிய விழிப்புணர்வு
13)விதைகளை எங்கெல்லாம் சேகரிப்பது
14)விதைகளை முறையாக வீட்டில் பராமரிப்பது, பாதுகாப்பது.
15)பூச்சிப்பராமரிப்பு
16)பூச்சிகள் பற்றிய விழிப்புணர்வு
17)பயிர்களை தாக்கும் நோய்களும் அதலிருந்து செடிகளை பாதுகாக்கும் முறைகளும்
18)வீட்டு கழிவுகளை தினந்தோறும் தோட்ட தேவைக்கு பயன்படுத்தும் முறைகள்..

பயிற்றுனர்கள்- ஆதியகை வீட்டுத்தோட்ட பயிற்றுனர் குழு

மொழி - தமிழ்

நன்றி..
ஆதியகை

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY