இயற்கை வழி விவசாயம்

பரமுவின் முதல் கட்டுரை: 2014 நவம்பரில் எழுதியது..
 தமிழில் எழுதி கொடுத்த முகநூல் நண்பர் Vasuki_vm அவர்களுக்கு நன்றி

இயற்கை வழி விவசாயம்


இது வானத்தை வில்லாக வளைக்கிற கற்பனை வேலையோ...
தலைய சுத்தி காத தொடற கடினமான விசயமோ..
வசதி படைதவர்கள் செய்யும் விவசாய முறையோ..
சரியாய் செய்ய வேண்டிய அறிவியல் கோட்பாடுகளோ கணித சூத்திரங்களோ...
படித்து கற்றுக்கொண்டோ, முழுவதுமாய் தெரிந்து கொண்டு செய்யும் விசயமோ...
புகாகோ, நம்மாழ்வார், பாலேக்கர் போன்றவர்களின் வழிமுறைபடி தான் செய்ய வேண்டுமோ என்ற கட்டாயமான விசயமோ..
இயற்கை இடுபொருட்கள் என்று சொல்லும் மண்புழு உரம் தொடங்கி, அமிர்தகரைசல், பஞ்சகாவ்யா என்று பெயர் தெரியாத பொருட்கள் இருந்தால் மட்டுமே சாத்தியமான விவசாய முறையோ
இல்லை....! இல்லை....! இல்லை...!
அன்பான விவசாய நண்பனே..!
நீ யாரையேனும் பின்பற்றி தான் இயற்கைவழி விவசாயம் செய்ய வேண்டுமென்று இல்லை..!
மேலே சொன்ன விஷயங்களை தாண்டியது தான் இயற்கை வழி விவசாயம்..
நம்புவது சிறிது கடினம் தான்..
உரம்,பூச்சிகொல்லி, களைக்கொல்லி இவை எல்லாம் இருந்தால் தான் விவசாயம் சாத்தியம் என்று நம் முன்னோர்களை நம்ப வைத்து கழுத்தருத்த கயவர்களின் கூட்டம்.. 2ஆம் உலக போருக்கு பின்பு தான் இந்த இழிவு நிலை..இன்று விழிபுணர்வு பெற்றுவிட்டோம்.. விவசாயி வளம்பெற போகிறான், பொதுமக்களுக்கு நன்மை நடக்க போகிறது என்று கருதினோமே.. இன்று நம்மை அறியாமலே மற்றொரு வலையில் சிக்கிக் கொள்கிறோமே.. 
ஆம்..! 
நீங்கள் இயற்கை வழி விவசாயம் செய்ய போகிறீர்கள்.. இதற்கு முன்பு படிக்காத பாமர விவசாய சமூகம் மருந்து கடைக்காரனின் வழிமுறைகளின் படி விவசாயம் செய்து கமிஷன் கடைகாரனிடம் தன் உடமைகளை இழந்து கொண்டு இருந்தது... இவர்கள் இருவரும் தான் விவசாயிகளிடம் கொள்ளையடிக்கும் நேரடி கொள்ளைகாரர்கள்.. ஆனால் இவர்களுக்கு அடுத்தடுத்த சங்கிலி நிலையில் மேல்மட்ட கொள்ளைகூட்டங்கள் அதிகம்.. தூண்டில் முட்கள் தான் இவர்கள்..என்பது அறிந்த செய்தியே..!

#பாமரன்_விழிபிதுங்கி_நிற்க.. 
#படித்தவனின்_விழிபிடுங்கப்படும் _சூழல் தான் அடுத்து உருவாகி கொண்டு உள்ளது படித்த விவசாய சமூகமே..!

மருந்துகடைகாரன் #ஆர்கானிக்_மருந்து_கடை ஆரம்பிக்க போகிறான்.. பூச்சிக்கொல்லி, களைக்கொள்ளிக்கு பதிலாக ஆர்கானிக் உரங்கள்,மண்புழு உரங்கள், இயற்கை வேளாண் இடுபொருட்கள் என்று பஞ்சகாவ்யா,மீன் அமிலம்.. என்று விற்க ஆரம்பிச்சுட்டான்..
கமிஷன் கடைகாரன் #ஆர்கனிக்_கமிஷன்_கடைக்காரனாகவும் #ஆர்கானிக்_விற்பனையகம் என்றும் தயராகிட்டான்.. அதிக உற்பத்தி செலவு செய்த சாதாரண காய்கறிகளுடைய விலை 50ருபாய் என்றால்.. செலவே இல்லாத இயற்கை விலைபொருட்கள் 500ருபாய்க்கு விற்க ஆரம்பிச்சுட்டான்..
பாமர விவசாயி இலவசங்களுக்காக ஏமாந்து போனான்.. படிச்ச விவசாயியே, படிச்ச சமுதாயம் ஆர்கானிக் என்ற பெயருக்கு ஏமார்ந்து போய்கொண்டிருக்கிறது.­.
படித்த சமுதாயம் விழிப்புணர்வு பெறவேண்டும்..
நம்மாழ்வார்,புகாகோ போன்ற பெரியவங்க சொன்னது இயற்கையை பின்பற்ற சொல்லி.. இயற்கைய விட்டுட்டு மனுசன பின்பற்றிகொண்டு போகவேண்டாம் நண்பர்களே.. இவங்க பெயர் சொல்லியும் இவங்க போட்டோ மாட்டிக்கிட்டும் காசு பாக்குற கூட்டம் இங்க நிறைய இருக்கு.. செம்மறி ஆடு மாதிரி ஒரு மனுசன் செய்றத அப்படியே பண்ணனும்னு இயற்கை வழி விவசாயத்துல அவசியம் இல்லைங்க. ஆர்கானிக் இடுபொருட்கள் என்று டப்பாக்களில் விற்கும் எதையுமே வாங்கி மண்ணுல போடாதீங்க...
ஒரு பயிர் வளர தேவையான இயற்கை சூழலை நாம் உருவாக்கிக் கொடுப்பது தான் இயற்கை வழி வேளாண்மை.. பூமி என்ற தாய்க்கு சோறு போடுங்க.. கருவில் இருக்கிற குழந்தை மாதிரி நாம போடுற பயிர்கள்.. தாயிக்கு சோரு போட்டா போதும் புள்ளை தானா வளரும்.. மட்க கூடிய இலை,தழைகளே போதும்.. உயிர் இல்லாத தாவரங்கள் தான் மண்ணுக்கு சாப்பாடு.. களைகள் தான் சாப்பாடு.. நம்ம பூமி என்ற தாய்க்கு ஊட்டி விட தேவை இல்லை.. தாய்க்கு பசித்தால் அவளே எடுத்துக்குவா.. நாம அவளுக்கு வேணும்கற உணவை இயற்கையா கொடுப்போமே.. மனிதர்கள் தான் இயற்கை வழியில் இருந்து மாறி சமைச்சு தின்ன ஆரம்பிச்சுட்டான்னா பூமிக்கும் சமைச்சு போடுராங்க.. எந்த கரைசலும் மண்ணுக்கு தேவை இல்லைங்க.. சமைக்கப்பட்ட உணவுகள் என்று சொல்ற ஆர்கனிக் இடுபொருட்களும் மண்ணு கேக்கறது இல்லைங்க..அதுக்கு மட்க கூடிய இயற்கையான சாப்பாட்டை கொடுங்க.. அதுவே எடுத்துக்கும்.. திரும்பவும் தப்பு பண்ணிடாதிங்க.. தாய்க்கு பசிக்கும் போது அவளே சாப்பிட்டுகுவா.. அவளோட குழந்தைகளுக்கு தேவையான எல்லா விசயங்களையும் அவ பாத்துக்குவா..நீங்க அவ சாப்பிட ஏற்ற சூழலை மட்டும் உருவாக்கி கொடுங்க.. அவ மூச்சு விடுறதுக்கு கொஞ்சம் காத்து, தாகத்துகு கொஞ்சம் தண்ணி, சாப்பிட மட்க கூடிய இலைதழைகள், களைகள்.. அவ சமைக்கவும் சாப்பிடவும் தேவையான சூரிய வெளிச்சம் போன்ற இயற்கயான சூழலை மட்டும் உருவாக்கி கொடுங்க.. உங்க குழந்தைகள் எல்லாம் எப்படி வளரும் பாருங்க நண்பர்களே.. பூமியையும் ப்ராய்லர் கோழி ஆக்கிடாதீங்க.. ரெடிமேட் உணவுகளை கொடுக்காதீங்க.. நம்ம மண்ணுல பல ஆயிரம் வருசம் வாழ்ந்து வரும் நமக்கு இங்க வாழ்வதற்கு தேவையான எல்லா சூழலும் இருக்கு.. ஆன வெளிநாட்டுகாரனுக்கு நிறைய பக்குவம் இருந்தா தான் இங்க அவனால நோய் நொடி இல்லாம வாழ முடியும்.. நம்ம பாரம்பரிய ரக விதைகளும் நம்மல மாதிரி வாழ பழகின ஜீவன்கள்.. அவங்களோட சந்ததிகளையும் காப்பாத்துங்க.. காப்பாத்த மறந்தோம்னா திரும்பவும் ஏமார்ந்து போய்டுவோம்...
கல்வி வேற படிப்பு வேற நண்பனே.. படிப்பறிவை விவசாயத்துல புகுத்தாதீங்க..... யாரையும் பின்பற்றி விவசாயம் செய்யனும்னு அவசியமில்ல.. இயற்கையை மட்டும் பின்பற்றி விவசாயம் செய்யுங்க..

#மனித அறிவை பின்பற்றி படிப்பு கற்க வேண்டாம்.. 
#இயற்கையை பின்பற்றி கல்வி கற்க முயற்சி செய் நண்பனே..

Paramez Aadhiyagai..
(November 2014)

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY