கல்வெட்டுகளில் பொறிக்க வேண்டிய மரபு காப்பாற்றப்பட்ட புரட்சியில் கற்றுக்கொண்டோம்
அரசியல் பிடிக்கலை.. அடுத்து வர்ற தேர்தலை புறக்கணிப்போம் என நினைப்பது எந்தவித அறிவார்ந்த விசயமும் இல்லையே.. ஓட்டு போடு.. யார் அதிகாரத்திற்கு வந்தாலும் உனக்கு என்ன வேணுமோ கேளு.. இனி புறக்கணிப்பது என்பதை கற்றுக்கொடுக்காத.. யாருகிட்ட எப்படி கேட்கனும் என்பதை கற்றுக்கொடு.. நமக்கு வேண்டும் என்பதை கேட்கின்ற விதத்தில் கேட்டதனால தான் கெடச்சுது.. இதுக்கு முன்னாடியும் கேட்டுக்கிட்டே தான் இருந்தோம்..ஆனா அதை ஒரு விசயமாவே எடுத்துக்கவே இல்லை.. இவங்க கேப்பாங்க விட்டுடுவாங்கன்னு நெனச்சாங்க.. இந்த முறை தெரிஞ்சுக்கிட்டோம்.. கிடைக்கறவரைக்கும் கேட்கனும்.. #10வருசமா_5_பேர்_10_பேரா_கேட்டாங்க.. காதுல வாங்குன பாடில்லை.. இப்போ #10நாட்களாக_5_லட்சம்_10லட்சம் பேரா கேட்டோம்.. கிடைக்கறவரைக்கும் கேட்டோம்.. கொடுத்துட்டாங்க.. நமக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாகவும் இருந்தோம். அதனால் கேட்டது கிடைத்துவிட்டது.. அப்போ ஒவ்வொரு விசயத்திற்கும் இவ்ளோ சிரமப்படனுமா என கேட்காதீங்க.. இது சிரமம் இல்லை.. சந்தோசம். முன்னயெல்லாம் ஊருல திருவிழாவா நடக்கும்.. எல்லோரும் ஒன்னு கூடி ஒரு விசயத்தை செஞ்சோம். இப்ப...