கல்வெட்டுகளில் பொறிக்க வேண்டிய மரபு காப்பாற்றப்பட்ட புரட்சியில் கற்றுக்கொண்டோம்
அரசியல் பிடிக்கலை..
அடுத்து வர்ற தேர்தலை புறக்கணிப்போம்
என நினைப்பது எந்தவித அறிவார்ந்த விசயமும் இல்லையே..
ஓட்டு போடு..
யார் அதிகாரத்திற்கு வந்தாலும் உனக்கு என்ன வேணுமோ கேளு..
இனி புறக்கணிப்பது என்பதை கற்றுக்கொடுக்காத..
யாருகிட்ட எப்படி கேட்கனும் என்பதை கற்றுக்கொடு..
நமக்கு வேண்டும் என்பதை
கேட்கின்ற விதத்தில் கேட்டதனால தான் கெடச்சுது..
இதுக்கு முன்னாடியும் கேட்டுக்கிட்டே தான் இருந்தோம்..ஆனா அதை ஒரு விசயமாவே எடுத்துக்கவே இல்லை..
இவங்க கேப்பாங்க விட்டுடுவாங்கன்னு நெனச்சாங்க..
இந்த முறை தெரிஞ்சுக்கிட்டோம்..
கிடைக்கறவரைக்கும் கேட்கனும்..
#10வருசமா_5_பேர்_10_பேரா_கேட்டாங்க..
காதுல வாங்குன பாடில்லை..
இப்போ #10நாட்களாக_5_லட்சம்_10லட்சம் பேரா கேட்டோம்..
கிடைக்கறவரைக்கும் கேட்டோம்..
கொடுத்துட்டாங்க..
நமக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாகவும் இருந்தோம்.
அதனால் கேட்டது கிடைத்துவிட்டது..
அப்போ ஒவ்வொரு விசயத்திற்கும் இவ்ளோ சிரமப்படனுமா என கேட்காதீங்க.. இது சிரமம் இல்லை.. சந்தோசம். முன்னயெல்லாம் ஊருல திருவிழாவா நடக்கும்.. எல்லோரும் ஒன்னு கூடி ஒரு விசயத்தை செஞ்சோம். இப்போ ஓடறதுக்கே நேரம் சரியா இருக்கு.. இந்த மாதிரியான முறையில் நமக்கு வேணுங்கறதை கேட்பது "ஊர் ஒன்னு கூடி தேர் இழுத்து, சாமி எங்களுக்கு இதையெல்லாம் கொடு, அதை கொடு இதை கொடு "" என கேட்டோம்.. அதில் ஒரு சந்தோசம் கெடச்சுது.. இந்த புரட்சி போராட்டத்தை விடுங்க.. பொங்கலுக்கு எத்தனை பேர் நிம்மதியா சந்தோசத்தை பகிர்ந்து வேற எதையும் நினைக்காம கொண்டாடுனீங்க.. ஆனா இந்த போராட்டத்துல பொங்கலுக்கு இல்லாத விடுமுறை #மனசுக்கு கெடச்சுதா இல்லையா.. சாப்பிட, தூங்க, வேலை என இருந்த நமக்கு இந்த 10நாள் #இளைப்பாறுதலுக்கான ஒரு கொண்டாட்டம் மிகுந்த தருணம் என தான் சொல்வேன்..
மனசு இறுக்கம் குறைஞ்சுடுச்சு.. இது பெரிய இளைப்பாறுதல். இப்படியான இளைப்பாறுதல் போராட்டம் நடத்துன ஒரு 2% -5% மக்களுக்கு மட்டமல்ல.. வீட்டில் டிவி முன்னாடி அமர்ந்து பாத்துக்கிட்டவங்களுக்கும் கூட கிடைச்சிருக்க வாய்ப்புண்டு.. வெளிய வந்து போராடலைனாலும்..வீட்டுக்குள்ளயே டிவி முன்னாடி உட்கார்ந்திருந்தவங்க அதிகம்.. அனைவருக்குமே ஒரு இளைப்பாறுதல் தான்.. ஒருவேளை இந்த மாதிரியான ஒரு போராட்டம் நடைபெறாம சாதரணமாக பொங்கல் மரபு விளையாட்டு என இருந்திருந்தா கூட இந்த அளவு இளைப்பாறுதல் கெடச்சுருக்குமா என தெரியவில்லை..
அப்படியானால் இனி ஒவ்வொரு விசயத்துக்காகவும் போராட வேண்டுமா என கேட்காதீங்க.. நமக்கு முதல்ல என்ன வேண்டும் என்றே தெரியமாட்டேங்குது.. கண்டிப்பா வேண்டும் என மனம் உச்சத்துக்கு வரும் போது தேவையானதை அடம்பிடித்து கேட்டு வாங்கிக்குது..
அரசியல் பற்றி இந்த போராட்டம் தான் கற்று கொடுக்குது.. 28வயசாகுது. ஒரு மண்ணும் தெரியாது எனக்கெல்லாம். போராட்டம் என்றால் எப்படி இருக்கும், நமக்கு வேணுங்கறதை எப்படி கேட்டு வாங்கிக்கனும், நாம எப்படி சந்தோசமா, கொண்டாட்டமா போராடனும், எப்படி ஒற்றுமையா ஒரு மனசோட போராடனும்.. எல்லாரும் சொல்லீட்டாங்கன்னு களைஞ்சு போயிடாம வெற்றி கெடச்சது உறுதியாகின்ற வரைக்கும் போராடறதயெல்லாம் வேடிக்கை பார்ப்பதற்காகவே கோயமுத்தூர் போராட்டம், சென்னை போராட்டம் என ஓடி போய் பார்த்துட்டு வந்தேன்..
இந்த நிகழ்காலத்துல உயிரோட இதையெல்லாம் பார்க்கறவங்க எல்லோருக்குமே இந்த போராட்டம் ஒரு வரம் தான்..
இனி யார் அரசியல் வந்தாலும் ஆட்சி செய்தாலும் நமக்கு வேண்டும் என்பதை நம்மனால கேட்டு வாங்க முடியும். வேண்டாம்ங்றதை துறத்திவிட முடியும்.
நாம ஒற்றுமையா கேட்டோமா,
கடைசி வரைக்கும் கேட்டோமா,
என நம்ம எப்படி கேட்கறோம் என்பதில் தான் நம்ம வெற்றி இருக்கு..
நன்றி
பரமு
24/1/17

Comments
Post a Comment