One day guest lecturer for college students
நாள்: 6/1/17 வெள்ளி
கல்லூரி: விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி,
பயிற்சி: விவசாயம் "ORGANIC FARMING"
பகிர்ந்து கொண்ட விசயங்கள்:
1)ஏன் நாம் விவசாயம் செய்ய வேண்டும்??
முன்னோர்களின் வாழ்க்கையை சுட்டிகாட்டி தற்போதைய சூழல் வியாபாரமாக ஆக்கப்பட்டு, விவசாயிகளும், நுகர்வோரும் பகடகாய்களாக இருக்கும் சூழலை பகிர்ந்துகொண்டோம்.
2)விவசாயத்திற்கான முதல் படி??
சுய உணவு தேவை பூர்த்தி செய்வதில் விவசாயத்தை துவங்குவோம்.
அவ்வாறு செய்வதன் மூலம் முதலில் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
தனக்கான உணவு என்பதால் நாட்டு விதைகளை தேடி தேடி சேகரித்து பாதுகாக்கும் விதை வங்கியாக முடியும். தற்போது தனக்கான உணவை கூட உற்பத்தி செய்யாத விவசாயியினால் விதைகளை பாதுகாக்க இயலவில்லை. தன் சுய தேவைக்கான கால்நடைகள் வளர்க்காததால் கலப்பின கால்நடைகள் அதிகமாக புழக்கத்திற்கு வந்தது. தீர்வு இதுதான் சுயதேவைக்கான விவசாயம் மிக எளிது.. அதை முதலில் துவங்குவோம்.
3)ஆர்கானிக் ??
மண்- தாய்
செடி- கருவிலுள்ள குழந்தை
தாயை ஆரோக்கியமாக பார்த்து கொள்வதே ஆர்கானிக்.
4)சுயதேவை என்றால் உலகிலுள்ள மக்களுக்கெல்லாம் சோறு??
இப்படி சொல்லி தான் இங்கே விவசாயிகளை கூறு போட்டு விற்றுக்கொண்டுள்ளார்கள். தனக்கான சோறு அவனுக்கு கிடைக்கவில்லையென்றால் அதற்காக அவனும் நம்மோடு இணைந்து கொள்வான். அதை பற்றி கவலை வேண்டாம். உனக்கென உற்பத்தியை தொடங்கு, மீதமானவற்றை உள்ளூரில் விற்று கொள்வதே பொருளாதார தேவையை பூர்த்தி செய்யும்.
5)நாங்கள் பெண்கள், எப்படி சாத்தியம்??
நீங்கள் பெண்கள் என்பதால் இது சாத்தியம். உங்களால் தான் இதை தொடங்க முடியும். உங்களுடைய குடும்ப ஆரோக்கியம், அடுத்த சந்ததி என பார்ப்பவர் நீங்கள் மட்டுமே..
6)மண்ணை வளப்படுத்துவது எப்படி??
சோறு, தண்ணி, காற்று, வீடு ஆகியவற்றை மண்ணுக்கு ஏற்படுத்தி தருவது..
7)பூச்சி??
மண்ணுக்குள்ளே நுண்ணுயிரும் வேர்களும்..
மண்ணுக்கு மேலே செடிகளும் பூச்சிகளும் தான் முழுமையான தோட்டம்.
இவை அனைத்திற்குமான நுட்பங்களை விளக்கிவிட்டு ஊர் திரும்புகிறோம்..
இனி பள்ளி கல்லூரிகளில் இதுபோன்ற பயிலரங்கங்களை தொடர வேண்டும். மாணவர்கள் இவ்வளவு ஆர்வமானவர்கள் என்பதை தெரியாமல் இருந்துவிட்டேன். கல்லூரி இதற்கான முன்னெடுப்பை துவங்க வேண்டும். இதற்கான ஏற்பாடு செய்த கல்லூரிக்கும், பரமுவாகிய என்னை சிபாரிசு செய்து அழைப்பு கொடுத்த முகநூல் நண்பர் "உழவன் சதீஷ் படித்தது பொறியியல்" அவர்களிக்கும் நன்றிகள் பல..
Aadhiyagai paramez
8526366796
Comments
Post a Comment