யோசி அல்லது யாசி

யோசி அல்லது யாசி

வறட்சியான இடங்களில் ஓரளவு தண்ணீர் இருக்கும் விவசாயிகள் தீவனத்திற்காக சோளம் விதைத்து உள்ளூர் விவசாயிகளுக்கு கால்நடைகளுக்காக தீவனம் கொடுக்கலாம்..

இந்த வறட்சி சூழலில் சுய உணவு, சொந்த கால்நடைகளுக்கு தீவன பயிர் என பயிர் செய்யாது பணப்பயிர் செய்திடுவதற்கு முதன்மையாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்..என்பது ஆழ்மனதின் எண்ணம்..

5ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்த செலவு-30,000₹

வறட்சியால் பருத்தியில் வருவாய் - 3000₹

வெளியூரிலிருந்து 2மாடுகளுக்கு தீவன செலவு- 35,000₹

சுய உணவுக்காக பயிர் செய்யாது கடைகளில் கம்பு சோளம் காய்கறி என வாங்கிய செலவு - 30,000₹

ஆக 6மாத காலத்தில் விவசாய குடும்பத்தாருக்கு
#வருவாய் ₹.3,000
#செலவு ₹.95,000

யோசிக்காமல் விவசாயம் செய்யும் விவசாயிகளில் என் தந்தையின் விவசாய கணக்கு இது..

யோசி அல்லது யாசி

26/2/17
பரமு

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY