கத்தரி விதை எடுத்து வைப்பதற்கான ஒரு நுட்பம்

கத்தரி விதை எடுத்து வைப்பதற்கான ஒரு நுட்பம்

கத்தரி காயிலிருந்து நன்கு பழுத்து பழமான பின்பு எந்த வண்ண கத்தரியாக இருந்தாலும் மஞ்சள் வண்ண பழமாகி விடும்.

நன்கு அடர்த்தியான மஞ்சள் நிறத்திற்கு மாறிய பின்பு, அந்த பழத்தின் மேல் காம்புடன் மேல்பகுதி பழத்தை அறுத்துவிட்டு இரண்டாக வெட்டி அதனுள் சாம்பலை தூவி, காயை வைத்துவிடலாம்.
உச்சி வெயிலில் மட்டும் விதையை காய வைக்க கூடாது. இரவில் கூட காய வைக்கலாம். ஒவ்வொரு அமாவாசை நாட்களிலும் கூட இவ்வாறு விதைகளை இரவு பகலாக காய வைக்கலாம். 

இன்னொரு முறையில், விதைகளை பழத்திலிருந்து எடுத்து சாம்பல் கலந்து காய வைக்கலாம். பழத்தை சமைப்பதற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

விதைகளை காயவைத்து பின் பாதுகாப்பாக எடுத்து வைக்கலாம். விதைகளை சேமிக்கும்போது ஒரு குறிப்பு எழுதி பாதுகாப்பது அவசியம். 
1.என்ன விதை
2.எந்த ரகம்
3.என்ன தேதியில் சேமிக்கப்பட்டது.
4.என்ன விதை நேர்த்தி செய்யப்பட்டது
வீட்டுத்தோட்ட விதைவங்கி 
ஜேம்ஸா-மானாமதுரை

மேற்கூறிய குறிப்புகளுடன் விதைகளை பாதுகாப்பாக வைக்கலாம். 

நன்றி..
பரமு 28/2/17

Comments

  1. பதிவுக்கு நன்றி..

    ReplyDelete
  2. விதைநேர்த்தி செய்வது எப்படி?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY