விதைகளை பூட்டி வைக்காது பகிர்ந்து திரும்ப பெற்று விதைப்பெருக்கம் செய்யும் முறை

வீடுகளில் தோட்டம் வைத்திருக்கும் நண்பர்கள் தங்களிடமுள்ள மரபு விதைகளை; தங்கள் தோட்டத்திலிருந்து அறுவடையான விதைகளை வெறுமனே தங்களது வீட்டில் வைத்திருப்பதன் மூலம் அவ்விதைகளை பல்கி பெருக்கம் செய்யவோ, பரவலாக்கவோ இயலாது. அதனால் அந்த வருடத்தில் அறுவடையான விதையில் சில விதைகளை சுய தேவைக்கு போக மீதமுள்ள விதைகளை சிறிது சிறிதாக பிரித்து பல பேருக்கு பகிர்ந்து அதை மீண்டும் அவற்றை வாங்கி அதை மீண்டும் பலருக்கு பகிர்தல் வேண்டும்..

இவ்வாறு செய்வதன் மூலம் விதைகள் பலபேருக்கு சென்றடையும். அதே சமயம் அந்த விதைகள் நம்மிடம் எப்போதும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

சென்னை மின்ட்டில் உமாமகேஸ்வரன் அண்ணா வீட்டில் ஒரு புடலை ரகம் கிடைத்தது..அந்த ரகத்தில் 21விதைகளை 3விதைகள் வீதம் 7பேருக்கு கொடுத்து குறிப்பிட்ட மாதங்களுக்கு பிறகு திரும்ப தர வேண்டுமென்று உறுதி வாங்கி கொண்டோம். இவ்வாறு செய்வதன் மூலம் நம்மால் ஒரு விதை வங்கியாக செயல்பட இயலும்..

நோக்கம் இதுவே..
விதைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
விதைகள் பரவலாக்கப்பட வேண்டும்.

நன்றி
பரமு


Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

நருவள்ளியம்பழ மரம் Cordia dichotoma Gürke