One cent garden for one family
*One_cent_garden_for_one_family*
ஒரு செண்ட் இடத்தில் ஒரு குடும்பத்திற்கான காய்கறி தோட்டம்:
-ஆதியகை
ஒரு குடும்பத்திற்கு தேவையான காய்கறி தோட்டம் மாடியிலோ அல்லது நிலத்திலோ அமைத்துக்கொள்ளலாம். இந்த ஒரு செண்ட் இடத்தில் அமைத்துக்கொள்ளும் தோட்டம் வீட்டுத்தேவையை பூர்த்தி செய்யும்.
செடி காய்கறிகள், கொடி காய்கறிகள், கீரைகள், கிழங்குகள், மூலிகைகள், பூக்கள் என அன்றாட தேவைக்கான பயிர்களை கொண்ட காய்கறி தோட்டம் அமைத்து கொள்ளலாம். 2014ஆம் ஆண்டு இறுதியிலிருந்து வீட்டுத்தோட்டம் அமைத்து கொடுக்கும் வேலையை செய்து வருகின்றோம். தமிழகத்தின் எந்த பகுதியானாலும் நாங்கள் தோட்டம் அமைத்து கொடுக்கின்றோம்.
வீட்டுத்தோட்டத்தில் காய்கறி தேவையை பூர்த்தி செய்வதற்கு,
1)பொருட்களை சேகரிக்க வேண்டும்
2)சேகரித்த பொருட்களை கொண்டு தோட்டம் அமைக்க வேண்டும்.
3)தோட்டம் அமைத்த பின் தினசரி பராமரிப்பு தேவை.
இந்த விசயங்களில்,
1)நம்மை சுற்றிலும் கிடைக்கும் பொருட்களை கொண்டு தோட்டம் அமைக்க உதவுகிறோம். பொருட்களை சேகரிக்க உங்களால் இயலவில்லை என்றால் நாங்களே வருகிறோம்.
2)தோட்டம் அமைத்து விதைத்து கொடுப்பதில் உங்களுடன் நாங்கள் இணைந்து கொள்கிறோம். தோட்டம் அமைக்கும் நாளில் ஒரு நாள் பயிற்சி கொடுக்கின்றோம். அந்த பயிற்சியில் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும் கூட அழைப்பு கொடுத்து பயிற்சி கொடுக்கலாம்.
3)தோட்டம் அமைத்த பின்பு எங்களுடைய குழுவுடன் பயணிக்கலாம். தினசரி ஏற்படும் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
4)அவ்வபோது வீட்டுத்தோட்ட நண்பர்களுடன் நடைபெறும் சந்திப்புகளில் கலந்து கொள்ளலாம்.
5)அனுபவமுள்ள வீட்டுத்தோட்டங்களை பார்வையிடலாம்.
-இதன் மூலம் அனுபவங்கள் கிடைக்கும்.இந்த அனுபவத்தின் மூலம் வீட்டுத்தோட்டத்தில் தொடர்ந்து வேலை செய்வதன் மூலம் ஆறு மாத காலத்தில் தோட்டம் சார்ந்த புரிதல் கிடைத்துவிடும். மற்றவர்களுக்கும் கற்றுகொடுக்க துவங்கி விடலாம்..
நாம் காலம் காலமாக பயன்படுத்தி வந்த மரபு விதைகளை பாதுகாக்கும் விதைவங்கிகளாக வீட்டுத்தோட்டங்களை காண்கின்றோம். இதன்காரணமாக வீட்டுத்தோட்டங்களை நாங்கள் அமைத்துகொடுப்பதை மகிழ்வாக செய்துகொடுத்து பயிற்சிகளை வழங்கி வருகின்றோம்.
நிலமோ மாடியோ தோட்டம் அமைத்து தருகின்றோம். வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்புங்கள் தொடர்பு கொள்கிறோம்.
8526366796 என்ற எண்ணிற்கு
-பெயர், ஊர் குறிப்பிட்டு,
-நிலமா, மாடியா என்பதை குறிப்பிடுங்கள்.
-இடத்தின் பரப்பு & படத்தை அனுப்புங்கள்.
ஒரு தனிநபருக்கு, 100சதுர அடி இடம் அவருடைய காய்கறி கீரை தேவையை வருடம் முழுவதும் பூர்த்தி செய்யும்.
வெயில்காலம், அதிக எடை என்ற பயமெல்லாம் வேண்டாம். அதிக செலவும் செய்ய வேண்டாம்.
நன்றி
*ஆதியகை_மரபு_விதை_சேகரிப்பு_குழு*
*FOOD_FIRST*
*SEED_FIRST*
www.aadhiyagai.com
www.Aadhiyagai.blogspot.in
Comments
Post a Comment