15417 சென்னை மேடவாக்கத்தில் ஒருநாள் வீட்டுத்தோட்ட பயிற்சி முகாம்
ஒரு ஏக்கரில் அல்ல..ஒரு செண்ட் இடத்தில் ஒரு குடும்பத்தின் காய்கறி தேவைகளை எப்படி பூர்த்தி செய்து கொள்வது என்ற ஒற்றை இலக்குடன் தான் எங்களின் பயணம் தொடர்கிறது.. நிரூபித்துவிட்டீர்களா.. சாத்தியமா என கேட்காதீர்கள்.. உங்களால் அதை சாத்தியப்படுத்த இயலும்.. தயவுகூர்ந்து முயன்று பாருங்கள்.. வெறுமனே 1செண்ட் இடத்தை நிலத்திலோ மாடியிலோ ஒதுக்கி தோட்டம் அமைத்து உங்கள் குடும்பத்திற்கு தேவையான காய்கறி கீரைகளை மட்டும் அதில் உற்பத்தி செய்து பயன்படுத்துங்கள்.. தேவையை பூர்த்தி செய்ய முடிகிறது.. தேவைக்கு அதிகமாகவே கிடைக்கிறதே என்ற பதிலை தான் உங்களிடம் எதிர்பார்க்கின்றோம்.. அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி கீரைகளின் பெயர்களையெல்லாம் பட்டியலிடுங்கள்.. நல்ல தரமான விதைகளை கையில் வைத்துக்கொள்ளுங்கள். மண்ணை நன்கு வளமாக்கிக்கொண்டு விதைப்பு செய்திடுங்கள்.. மற்றதை பிறகு பார்ப்போம். நினைவில் கொள்ள வேண்டியது ஒன்று தான்.. அறுவடை தினசரி இருக்க வேண்டுமல்லவா..அப்படியானால் விதைப்பும் தினசரி இருக்க வேண்டும்.. புரியவில்லையா.. 5வகை கீரைகளை 2சதுர அடி பரப்பிற்கு ஒரு ரக கீரை என விதைக்க வேண்டும். ஆனால் ஒரே நாளில் விதைக்கா...