Posts

Showing posts from December, 2017

தேயிலை தோட்டங்கள் கற்றுக்கொடுப்பது என்ன??

Image
தேயிலை தோட்டங்களை காணும்போதெல்லாம் என் கண்ணுக்கு தெரிவதெல்லாம்.. "என்ன அழகாக நடப்பதற்கென பாதையும் பயிரிட இடமும் என பிரித்திருக்கின்றார்கள் என்று தான். ஒரு பயிர் சாகுபடி முறை என்றெல்லாம் என் கண்ணுக்கு தெரியவில்லை. நிரந்தரமான தோட்டமாக இருக்க வேண்டும் என்றால் விதைக்குமிடத்தில் மனிதனின் காலடி படக்கூடாது. அப்படியானால் நமது தோட்டத்திலும் இதுபோன்று செய்திட முடியும் என்று ஏன் யாருக்கும் தோன்றவில்லை. Location specific என கூறுவது உண்மைதான். ஆனாலும் யாரும் முயற்சி கூடவா செய்யவில்லை. ஐந்து ஏக்கர் நிலத்தை அரை ஏக்கர் அளவில் வரப்பு கட்டி பிரித்தது போல ஒவ்வொரு அரை ஏக்கர் நிலத்தையும் 4அடி விதைப்பிற்கான இடமும், 2 அடி நடைபாதைக்கான இடமும் என பிரித்தால் அவ்விடத்திற்கு உழவு செய்வதறகான வேலை இருக்காதல்லவா.. விதையை போடுவோம்..யாராவது அறுவடை செய்வார்கள். விதைப்பும் அறுவடையும் செய்வதை மட்டுமே வேலையாக கொள்ள வேண்டுமென்ற இந்த சோம்பேறிக்கேற்றதை தானே தேடுவான்.. நிலத்தை உழவு செய்து விவசாயம் செய்வது அவசியமில்லை எனும் நிலை வர வேண்டும். அந்த நிலைக்கு நிலம் குப்பை காடாக மாற வேண்டும். அந்த நிலைக்கு நிலம் மாற வ...

Do nothing farming என்றால் என்ன??

Image
Do nothing farming ஆ.. அப்படீனா என்னங்க.. உயிர்வே லிகள் இந்த முறைக்கு ஒரு உதாரணம்.. நாம் வளர்க்கும் பயிர்கள் ஓரிரு நாட்கள் தண்ணீர் இல்லையென்றாலே காய துவங்கிவிடும்.. ஆனால் தோட்டத்தை சுற்றிலும் இருக்கும் வேலியோ பசுமை மாறாமல் இருக்கும். வாரா வாரம் இந்த வேலிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பழக்கத்தை உருவாக்கி பாருங்கள்.. தோட்டத்திற்குள் இருக்கும் தென்னை மரங்களை போல வேலி பயிர்களும் தண்ணீர் பாய்ச்சவில்லையென்றால் காய்ந்து போக தான் செய்யும். ஆனால் நாம் அவ்வாறான பழக்கத்தை. வேலிகளுக்கு பழக்கவில்லை.. தானாக வளர்ந்து பசுமையாக இருக்கும் இந்த உயிர்வேலிகளில் வாழும் பறவைகள், சிறு மிருகங்கள் மற்றும் காற்று மழை போன்றவற்றின் உதவியால் புது புது விதைகள் முளைத்து வேலியை பசுமையாக்குகின்றன.. அப்படியானால் தோட்டம் முழுவதும் வேலியை போல முள் மரங்களை வளர்க்க சொல்கிறீர்களா என கேட்காதீர்கள்.. வேலிகளை பார்த்து கற்று கொள்ள தான் சொல்கிறோம். நாம் அங்கே ஒன்றும் விதைப்பதில்லை..ஆனால் நமக்கு தேவையான அரிய மூலிகைகள், தாவரங்கள் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றன.. Do nothing farming என்பது நாம் தோட்டத்தில் பெரிதாக மெனக்...

விதைக்கும் இடத்தில் நடக்காதே.. நடக்கும் இடத்தில் விதைக்காதே..

Image
விதைக்கும் இடத்தில் நடக்காதே.. நடக்கும் இடத்தில் விதைக்காதே.. மனிதன் சில நாட்கள் நடந்தாலே அவ்விடம் இறுகி போய் பாதையாகிவிடும். அப்படியிருக்க பயிர் செய்யும் இடத்தில் மிதித்தால் நிலம் இறுகிவிடாதா என்ன??.. மண் இறுகி போனால் நிலத்தை கொத்தி இலகுவாக்க வேண்டும். ஏக்கர் கணக்கில் இருக்கும் நிலமென்றால் உழவு தான் செய்ய வேண்டும்.. இதை தவிர்க்க என்ன செய்வது என யோசிப்போம்.. உழவிற்காக வருடா வருடம் எவ்வளவாயிரங்களை இழக்கின்றோம்.. உழவிற்காக காளைகளை வளர்க்கும் வரை நாம் செலவு ஏதும் செய்யாமல் தான் இருந்தோம். தற்போது இருக்கும் நிலை வேறு என்பது அனைவரும் அறிவோம். விதைப்பதற்கெனவும், நடப்பதற்கெனவும் நிலத்தை பிரிப்பது தான் நிரந்தர வேளாண்மையில் முதல் வேலையாக இருக்க வேண்டும் என கருதுகிறேன்.. #எப்படி_பிரிப்பது?? 1மீ முதல் 4 அடி அகலத்தில் விதைப்பதற்கான பரப்பு..அ பாத்தி என எடுத்து கொள்வோம். 1.5  முதல் 2 அடி வரை நடப்பதற்கான பாதை என பிரித்து கொள்வோம். பாத்தியில் எந்தவொரு சூழ்நிலையிலும் மிதிக்க கூடாது. நடைபாதையில் விதைக்க கூடாது. இவ்வாறு நிலத்தை பிரித்து கொள்ளலாம். மேட்டுப்பாத்தியா, பள்ளபாத்தியா என்றெ...

Farming in sand (chennai palavakkam)

Image
சென்னை பாலவாக்கத்தில் ஒரு இடத்தில் தோட்டம் அமைக்க நண்பர் பாலமுருகனோடு சென்றிருந்தோம். அங்கே அந்த இடத்தை காவல் காக்க நேபாளத்தை சேர்ந்த ஒரு ஐயா இருந்தார். அவருடைய தோட்டத்தின் படங்களை தான் பதிவிட்டுள்ளேன். கடற்கரையிலிருந்து 300-400 மீட்டர் தொலைவில் தான் இவருடைய தோட்டம். மணலாக உள்ள நிலத்தில் எப்படி விளைவிப்பது என்றெல்லாம் இவர் யோசிக்கவேயில்லை.. பயிரிட தேர்ந்தெடுத்த இடத்தை சுற்றிலும் கற்களை அடுக்கி மணல் சரியாமல் ஏற்பாடு செய்துவிட்டு மணலில் இலைதழைகளை புதைத்து தண்ணீர் ஊற்றிவருகிறார். பிறகு சில நாட்கள் கழித்து விதைப்பு செய்கிறார். நேபாளத்திலிருந்து ஒரு வகை கீரையை எடுத்து வந்து பயிரிட்டு உணவிற்கு பயன்படுத்துகிறார். ஒரு முறை பயிரிட்டால் பல மாதம் இலைகளை அறுவடை செய்யலாம் என்ற கீரை வகை அது. பாலக்கீரையை போல என நினைக்கின்றேன். கரும்பு, மக்காச்சோளம், பாகல், பசலைக்கீரை, தக்காளி,கத்தரி, மிளகாய், சக்கரைவள்ளி கிழங்கு என பல வகை பயிர்களை பயிரிட்டு உள்ளார். அவருடைய தக்காளி செடிகளை பாருங்களேன்..செடி மண்ணில் விழாதபடி அழகாக ஏற்பாடு செய்துள்ளார். மணல் என்பதால் தண்ணீர் நிற்பதில்லை.. அதனால் அவ்வபோது தண்ணீர் பிடித...