Do nothing farming என்றால் என்ன??

Do nothing farming ஆ..
அப்படீனா என்னங்க..

உயிர்வே
லிகள் இந்த முறைக்கு ஒரு உதாரணம்..

நாம் வளர்க்கும் பயிர்கள் ஓரிரு நாட்கள் தண்ணீர் இல்லையென்றாலே காய துவங்கிவிடும்.. ஆனால் தோட்டத்தை சுற்றிலும் இருக்கும் வேலியோ பசுமை மாறாமல் இருக்கும்.

வாரா வாரம் இந்த வேலிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பழக்கத்தை உருவாக்கி பாருங்கள்.. தோட்டத்திற்குள் இருக்கும் தென்னை மரங்களை போல வேலி பயிர்களும் தண்ணீர் பாய்ச்சவில்லையென்றால் காய்ந்து போக தான் செய்யும்.

ஆனால் நாம் அவ்வாறான பழக்கத்தை. வேலிகளுக்கு பழக்கவில்லை.. தானாக வளர்ந்து பசுமையாக இருக்கும் இந்த உயிர்வேலிகளில் வாழும் பறவைகள், சிறு மிருகங்கள் மற்றும் காற்று மழை போன்றவற்றின் உதவியால் புது புது விதைகள் முளைத்து வேலியை பசுமையாக்குகின்றன..

அப்படியானால் தோட்டம் முழுவதும் வேலியை போல முள் மரங்களை வளர்க்க சொல்கிறீர்களா என கேட்காதீர்கள்.. வேலிகளை பார்த்து கற்று கொள்ள தான் சொல்கிறோம். நாம் அங்கே ஒன்றும் விதைப்பதில்லை..ஆனால் நமக்கு தேவையான அரிய மூலிகைகள், தாவரங்கள் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றன..

Do nothing farming என்பது நாம் தோட்டத்தில் பெரிதாக மெனக்கெடாமல் செய்யும் வேளாண் முறை.. காடுகளை போல, வேலிகளை போல இந்த முறையில் தோட்டம் எப்போதும் பசுமையாக இருக்கும். காய்கறிகள், மூலிகைகள், பூக்கள், பழ மரங்கள், டிம்பர் மரங்கள் என நாம் என்னவெல்லாம் வளர்க்க விரும்புகின்றோமோ அவற்றையெல்லாம் கலந்து பயிரிட்டு கொள்ளும் ஒரு முறை..

உழவு செய்வது, பாத்தி அமைப்பது, களையெடுப்பது என வருடம் முழுவதும் தோட்டத்தை பண்படுத்துவதிலேயே நேரத்தை செலவிடுவதும் அதற்கு பெரிய அளவில் செலவு செய்வதும் என ஓடிக்கொண்டிருந்த விவசாயிகள் தற்போது அதற்கு ஆட்கள் பற்றாக்குறையும் சேர்ந்து கொண்டதால் வேறு என்ன செய்வது என தெரியாமல் கஷ்டப்படுகின்றனர். சிலர் நிலங்களை விற்கின்றனர். சிலர் தென்னந்தோப்பு, மாந்தோப்பு என ஒரு பயிர் தோப்பாக மாற்றி கொள்கின்றனர்.

பலபயிர்களை கொண்ட, பல நூறு பயிர்களை வளர்க்கும் ஒரு பண்ணையிலிருந்து ஒரு பயிர் சாகுபடி மூலம் ஓரிடத்திலிருந்து கிடைக்கும் உணவு பொருட்களை விட அதிகமான உணவு பொருட்களை பெற்றிட முடியும்.

ஒரு செண்ட் இடத்தில் அதிக உற்பத்தி தரும் தக்காளி பயிரிடுவதாக கொள்வோம். அந்த தக்காளி எவ்வளவு பேருடைய தேவையை பூர்த்தி செய்திடும் என்பதை கணக்கிட்டு கொள்வோம். அதே இடத்தில் ஒரு தென்னை, ஒரு மாதுளை, ஒரு வாழை, ஒரு முருங்கை, கொஞ்சம் தக்காளி ,கத்தரி, மிளகாய், போன்ற காய்கறிகள் இடையிடையே பாசிப்பயிறு உளுந்து, நிலக்கடலை என பயிரிடுவதாக எடுத்து கொள்வோம். இதில் ஒரு வருட காலத்தில் தக்காளி ஒட்டுமொத்தமாக எவ்வளவு கிடைத்திருக்கும்.. அதே சமயம் மற்ற உணவு பொருட்கள் பல பயிராக பயிரிடும்போது எவ்வளவு கிடைக்கும் என கணக்கிட்டு பாருங்களேன்..

வேலை குறைவு,
அதிக உணவு உற்பத்தி,
சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொண்டால் நல்ல வருவாயும் ஏற்படுத்தி கொள்ள இயலும்.

Do #nothing..farming..
Paramez 8526366796 Whatsapp.
படம் இணையத்திலிருந்து..

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY