உணவு பன்மயம் / விதை பன்மயம் காக்க உதவுவோம்.

உலகில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட உண்ணக்கூடிய தாவர உணவுகள் இருந்தாலும், சில நூறு வகை தாவரங்களை மட்டுமே புழக்கத்தில் உள்ளன என்பது வருத்தம் தரும் விசயமாக உள்ளது.. சந்தைக்கு உகந்தவை மட்டுமே மக்களுக்கு தற்போது உணவாக உள்ளது.. அதாவது  90% மக்களின் உணவு தேவையை வெறும் நூற்றுக்கும் குறைவான வகை உணவு தாவரங்கள் பூர்த்தி செய்கின்றன.

நம்முடைய விவசாய நிலத்தில் நாம் உண்ணக்கூடிய உணவு பயிர்களின் எண்ணிக்கை எவ்வளவு நாம் பயிரிடுகிறோம்.  அவற்றின் விதைகள் எவை எல்லாம் நம் கைவசம் வைத்துள்ளோம்..

நாம் பயிரிடாத அதே சமயம் உண்ணக்கூடிய பயிர்களை நம்முடைய நிலத்தில் எத்தனை உள்ளது என்பதை அடையாளம் கண்டு வைத்துள்ளோம்..

பயிரிடுபவராக இல்லாமல் உண்ணக்கூடியவராக பார்த்தோமானால் தினசரி நம்முடைய உண்ணும் தட்டில் எத்தனை உணவு பயிர்களின் வகைகளை காண்கிறோம்.

இப்படியான கேள்விகள் ஆயிரம்!!!

சந்தைக்கு உகந்தவை மட்டுமே பெரும்பாலான மக்களின் வயிற்றை நிறைக்கின்றன..

Biodiversity என சொல்லக்கூடிய உயிர்களின் பன்மயங்களை நாம் பாதுகாக்க வேண்டும். பாதுகாக்க வேண்டுமானால் அவற்றை புழக்கத்தில் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக உணவுகளில் பன்மயம் காக்க வேண்டும்.. உணவுகளில் பல பயிர்களின் உணவுகள் நம் தட்டுகளில் நிறைந்து நம் வயிற்றை நிறைக்க வேண்டும்.

உணவு நம் தட்டுகளுக்கு வர வேண்டுமானால் நம் விவசாய நிலங்களில் "உணவு பயிர்களின் பன்மயம் பெறுக வேண்டும்".

பயிர்களின் பன்மயம் பெறுகிட விதைகளின் பன்மயங்களை காக்க வேண்டும்.

விதைகள்-பயிர்கள்-உணவுகள் என பன்மயங்கள் பெறுகிட நாம் விரும்புவோம்..

நன்றி!!!
Aadhiyagai Paramez
ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் Aadhiyagai Seedsavers Farm

2.1.2023

#save_seed_diversity
#save_crop_diversity
#save_food_diversity
#save_biodiversity
#save_ecology



Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY