சவால் என்ன என்பதை அறிவோம்..

• தமிழ்நாட்டில் 2021-22 ஆம் ஆண்டில் தக்காளி உற்பத்தி செய்த பரப்பு 54,000 ஹெக்டேர் (133437 ஏக்கர்). அதில் உற்பத்தியான தக்காளி அளவு 16 லட்சம் டன்.

(According to the Third Advance Estimate of Ministry of Agriculture and Farmer Welfare (2021-22), the area under tomato cultivation is 0.54 lakh hectares with production of 16.17 lakh tons in Tamilnadu.19-Dec-2022)

• ஒரு ஹெக்டேர் பரப்பில் தக்காளி நடவு செய்ய தேவைப்படும்  விதையின் அளவு 300கிராம்.

• 54,000 ஹெக்டேருக்கு நடவு செய்ய தேவைப்படும் தக்காளி விதையின் அளவு: 16,000கிலோ (16டன்)

• ஒரு ஹெக்டேரில் உற்பத்தி செய்ய இயலும் விதையின் அளவு - 150கிலோகிராம் (150kg)

• 16,000கிலோ விதையை உற்பத்தி செய்திட தேவைப்படும் நிலத்தின் அளவு: 108 ஹெக்டேர். அதாவது 270 ஏக்கர்.

•10கிராம் தக்காளி விதை-900₹, அதாவது 100கிராம்-9000₹, 1 கிலோ தக்காளி விதையின் விலை -90,000₹

•16,000 கிலோ தக்காளி விதைக்கான தொகை : 1,44,00,00,000₹ (144 கோடி ரூபாய்)

இது கடந்த 2021-22 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டில் தக்காளி சாகுபடிக்கான சந்தை நிலவரம்.

எங்களுடைய ஆதியகை பண்ணையில் உற்பத்தி செய்த பகிர்ந்த நாட்டு தக்காளி விதையின் அளவு 9-12 கிலோ இருக்கும். இவை சந்தைக்காக உற்பத்தி செய்யவில்லை. வீட்டுத்தோட்டத்திற்காக மட்டும் உற்பத்தி செய்து கொடுத்த அதிகபட்ச விதையின் அளவாக இருக்கும். 

தமிழ்நாட்டில் பாரம்பரிய விதைகளுக்காக வேலை செய்வோர் உற்பத்தி செய்து பகிர்ந்த மொத்த விதையின் அளவு 500கிலோ அளவு கூட இருக்க வாய்ப்பில்லை..

இந்த "விதை சந்தைக்குள்" நாம் எந்த இடத்தில் வேலை செய்திட வேண்டும். பாரம்பரிய விதையில் உற்பத்தி செய்யும் காய்கறிகளை சந்தைப்படுத்திட எந்த இடத்தில் வேலை செய்திட வேண்டும் என்ற அடிப்படை அறிவோடு நாம் வேலை செய்ய வேண்டும்.

ஆயிரம் பாரம்பரிய ரகங்களை கூட ஆசையாக நாம் சேமித்து அழகு பார்த்துக்கொள்ள இயலும். ஆனால் அதை சந்தைக்குள் எடுத்து செல்ல நிறைய ஆராய்ச்சிகள் அவசியம். விவசாய நிலத்தில், பல்வேறு கால நிலை, மண்ணின் தன்மை என அந்தந்த பகுதிக்கேற்ற விதைகளை தேர்வு செய்து விவசாயிகளை சந்தைக்கு உற்பத்தி செய்யவும், விதைகளை பாதுகாக்கவும், விவசாயிகளுக்கு பயிற்சிகள் வழங்கிட வேண்டும்.

விவசாயிகள் விதை சேமிக்கும் பழக்கத்தையும், விதை பாதுகாக்கும் முறைகளையும் மறந்து அடுத்த நிலைக்கு சென்று ஒரு தலைமுறையே ஆகிவிட்டது. அதனால் முறையான பயிற்சிகளும் அவர்களுக்கான விதைகளும், உற்பத்திக்கான உள்ளூர் சந்தை வாய்ப்புகளும் கூட மிக அவசியம்.

#தக்காளி #சந்தை #தமிழ்நாடு #விவசாயம் #tomato #market #farmer #agriculture

24.03.2023

வேளாண்குடிமக்களின் பாரம்பரிய அறிவை அனைவரிடமும் கொண்டு செல்வதும், பாரம்பரிய விதைகள் பற்றிய தகவல் சேகரிப்பதும், நம்மை சுற்றிலுமுள்ள பாரம்பரிய விதைகளை சேகரிப்பதும், பாரம்பரிய விதைபெருக்கம் செய்வதும், பாரம்பரிய விதைகளை பரவலாக்கம் செய்வதும், பாரம்பரிய விதைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்ப்பதும், விதைகள் போன்றே நம்முடைய எளிய பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பங்களை பாதுகாப்பதும் எம்முடைய பணி..

இவை அனைத்தும் நம் அனைவருடைய பணியும் கூட..

•www.aadhiyagai.co.in
•WhatsApp: +918526366796
•Telegram: https://t.me/aadhiyagai
•Instagram @aadhiyagai_seedsavers, @aadhiyagai_paramez
•Facebook: www.fb.com/AadhiyagaiBiodiversityAndEcologicalFarm
💛💛💛

2023 ஆம் ஆண்டிற்கான விதைப்பு காலண்டர் (biodynamic calendar) : https://t.me/aadhiyagai/995?single

நன்றி
Aadhiyagai Paramez
Aadhiyagai Seedsavers Farm
ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY