30 நாட்கள் இணையவழி வீட்டுத்தோட்ட மாடித்தோட்ட பயிற்சி
புதிதாக வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம் துவங்கும் நண்பர்களுக்காக ஒரு மாதகால இணையவழி வீட்டுத்தோட்ட மாடித்தோட்ட பயிற்சி வாட்ஸ்அப் மூலமாக எளிய முறையில் இருபது தலைப்பின்கீழ் 30 நாட்கள் நடைபெறும்.
பயிற்சி 2024 ஏப்ரல் -1 முதல் துவங்கும். பயிற்சிக்கான பங்களிப்பு தொகை 1000₹.
பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமிருப்போர் 085263 66796 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்தி மூலம் உறுதி செய்யவும்.
பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்கு தோட்டம் துவங்க தேவையான அடிப்படையான 20 மரபு ரக காய்கறி ரகங்களின் விதைகள் வழங்கப்படும். இந்த 20 ரக விதைகளில் இருந்து மீண்டும் நாமே விதைகளை எடுத்து கொள்ள இயலும். அதற்காக விதை சேமிப்பிற்கான பயிற்சியும் வழங்கப்படும்.
100சதுர அடி இடம் ஒரு நபருக்கு தேவையான காய்கறி கீரை போன்ற அத்தியாவசிய உணவு தேவையை பூர்த்தி செய்யும் .. அந்த இடம் மாடியாகவோ , நிலமாகவோ , எதற்கமே ஆகாது என நீங்கள் நினைக்கும் பாறை நிலமாகவோ , கட்டாந்தரையாகவோ இருக்கலாம் ..
நம்மை சுற்றிலும் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி தோட்டம் அமைத்து ஒரு குடும்பத்திற்கான காய்கறி தேவையை ஒரு செண்ட் இடத்தில் பூர்த்தி செய்துகொள்ள இயலும்..என்ற கருவை கொண்டு பயிற்சி நடத்தப்படுகிறது.
*பயிற்சி வாட்ஸ்அப் குழுவில் நடைபெறும். Live session/ live videoவாக பயிற்சி நடைபெறாது. தினசரி ஒரு தலைப்பின் கீழ் பயிற்சி கொடுப்போம். வாட்ஸ்அப்பில் உள்ள வசதிகளை பயன்படுத்தி தான் பயிற்சி எடுக்க உள்ளோம். அதாவது தகவல்களை ஆடியோவாக பேசியும் அதற்கான விளக்கங்களை எழுத்து வடிவிலும், அதற்கு தேவையான படங்களை பதிவிட்டும் தேவையான இடங்களில் வீடியோக்களாக பதிவிட்டும் பயிற்சி நடைபெறும். பயிற்சியின் இறுதியில் ஒருநாள் live session இருக்கும்*
பயிற்சி தினசரி காலை 7 மணிக்குள்ளாகவும் அல்லது மாலை 5 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளாகவும் பயிற்சியை நடத்துவோம். தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வாட்ஸ்அப்பில் கற்றுக்கொள்ளலாம்.
நீங்கள் அந்த நேரத்தில் பயிற்சியை கவனிக்கலாம். அடுத்த நாள் பயிற்சி துவங்குவதற்கு முன்பு வரை முந்தைய நாள் பயிற்சி தகவல்களை பார்த்துக்கொள்வது அவசியம். தினமும் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது நேரம் ஒதுக்கி பயிற்சியை காண்பது அவசியம்.
பயிற்சி:
1)ஏன் வேண்டும் வீட்டுத்தோட்டம்
2)வீட்டுத்தோட்டம் மூலம் என்னென்ன தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்து கொள்ள இயலும்.
3)என்னென்ன செடிகள் உங்களுக்கு தேவை
4)எவ்வளவு இடம் உங்களுடைய விருப்பமான தோட்டத்திற்கு தேவை
5)400-500 சதுர அடி இடத்தை எப்படி முழுமையாக பயன்படுத்துவது
6)பயிர்களின் சாகுபடி முறைகள்
7)உங்கள் வீட்டின் தோட்டத்தை எப்படி முழுமையாக பயன்படுத்துவது
8)பயிர் சுழற்சி முறைகள்
9)உங்கள் வீட்டின் கொடி காய்கறிகளுக்கு எப்படியெல்லாம் பந்தல் அமைத்து தேவையை பூர்த்தி செய்வது
10)தினந்தோறும் கீரையை அறுவடை செய்யும் சுழற்சி முறைகள்.
11)மூலிகைகளை, பூக்களை பற்றிய கலந்துரையாடல்
12)மரபு ரக விதைகள் பற்றிய விழிப்புணர்வு
13)விதைகளை எங்கெல்லாம் சேகரிப்பது
14)விதைகளை முறையாக வீட்டில் பராமரிப்பது, பாதுகாப்பது.
15)பூச்சிப்பராமரிப்பு
16)பூச்சிகள் பற்றிய விழிப்புணர்வு
17)பயிர்களை தாக்கும் நோய்களும் அதலிருந்து செடிகளை பாதுகாக்கும் முறைகளும்
18)வீட்டு கழிவுகளை தினந்தோறும் தோட்ட தேவைக்கு பயன்படுத்தும் முறைகள்..
_________________________
Regards,
Paramez Aadhiyagai
+918526366796
Aadhiyagai's Self sustainable one cent garden- one family
https://www.facebook.com/share/p/FzzpTSUXTNew9wjq/?mibextid=oFDknk
படிப்பதற்கு அருமையாக உள்ளது. செயல் படுத்தும் போது மிகவும் பயனுள்ளதாக அமையும்.இடத்தை சரி செய்து விட்டு தொடர்பு கொள்வேன். நன்றி..
ReplyDelete