2024 ஆடிப்பட்ட விதைப்பிற்கான பாரம்பரிய விதைகள்

ஆடிப்பட்ட விதைப்பிற்காக மரபு ரக விதைகள் தேவைப்படும் நண்பர்களுக்கு ... 




06.06.2024


ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்  மூலமாக 180 ரகமான கீழ்க்காணும் மரபு விதைகள் / பாரம்பரிய விதைகள் / நாட்டு விதைகள் வழங்குகிறோம். காய்கறிகள், கீரைகள், மூலிகைகள், தானியங்கள், பயிறு வகைகள், மரவிதைகள் இதில் அடங்கும்.


விதைகள் ஒரு பாத்தியில் விதைக்கும் அளவு சிறிதளவு இருக்கும்.. அவற்றில் இருந்து நாம் விதைபெருக்கம் செய்து விதைகள் சேமித்துக்கொள்ளலாம்.. பட்டியலில் உள்ள விதைகள் பெற  085263 66796  எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்து பெறலாம். அல்லது www.aadhiyagai.co.in வெப்சைட்டிலும் பெறலாம். 


மேலும் ஆடி விதைப்பிற்காக 25 ரக விதைகள் அடங்கிய விதை தொகுப்பு ஒன்றும் வழங்கி வருகிறோம். 


தக்காளி வகைகள்:

•நாட்டு தக்காளி-செடி

•காசி தக்காளி-கொடி

•மதனபள்ளி தக்காளி

•டோகோ தக்காளி

•உருட்டு தக்காளி-கொடி

•உருட்டு தக்காளி-செடி

•பலவகை தக்காளி ரகங்கள்

•குங்கும தக்காளி

•மஞ்சள் காட்டு தக்காளி

•கொத்து தக்காளி


கத்தரி வகைகள்:

•பச்சை கத்திரி

•ஒடவை பச்சை கத்தரி

•திண்டுக்கல் பச்சை கத்தரி

•மணப்பாறை கத்தரி

•வரி கத்தரி

•புளியம்பூ கத்தரி

•வேலூர் முள் கத்தரி

•வெள்ளை உருட்டு கத்தரி

•ஊதா கத்தரி

•பலவகை கத்தரி ரகங்கள்

•வெளிர்பச்சை உருட்டு கத்தரி 


மிளகாய் வகைகள்: 

•சம்பா மிளகாய்

•காந்தாரி மிளகாய் 

•குண்டு மிளகாய்

•நெய் மிளகாய்


வெண்டை வகைகள்:

•பச்சை வெண்டை

•சிவப்பு வெண்டை

•வெள்ளை வெண்டை

•பருமன் வெண்டை

•2 வண்ண பருமன் வெண்டை

•மர வெண்டை

•யானைத்தந்த வெண்டை

•ஊசி வெண்டை

•மலை வெண்டை

•பொம்மிடி வெண்டை

•மாட்டுகொம்பு வெண்டை

•பச்சை உருட்டு வெண்டை

•கொத்து வெண்டை (cluster)

•பலவகை வெண்டை (mixed)


இதர செடி & மலை காய்கறிகள்:

•செடி காராமணி

•கொத்தவரை

•செடி அவரை

•வெள்ளை முள்ளங்கி

•கேரட்

•செடி பீன்ஸ்

•லெட்யூஸ் -பச்சை (lettuce)

•ஊதா பீன்ஸ்

•பட்டை பீன்ஸ் double beans

•Lima Beans


சுரை ரகங்கள்:

•குடுவை சுரை

•நீள சுரை

•கும்ப சுரை

•சிட்டு சுரை

•கிண்ணார சுரை

•வாத்து சுரை

•குண்டு சுரை

கும்ப சுரை1

தேங்காய் வடிவ சுரை

நீள கழுத்து சுரை1 

சட்டி சுரை 

8 வடிவ சுரை

கும்ப சுரை2

•பானை சுரை

•நீளகழுத்து சுரை


கொடி காய் வகைகள்: 

•பாகல்

•மிதிபாகல்

•நீள புடலை

•குட்டை புடலை

•பாம்பு புடலை

•வரி புடலை

•மூக்குத்தி அவரை

•சிறகு அவரை

•நீள பீர்க்கன்

•உருட்டு பீர்க்கன்

•பழ வெள்ளரி

•உருட்டு வெள்ளரி

சாம்பார் வெள்ளரி

•வெள்ளை பூசணி

•பரங்கி / அரசாணி

கருப்பு மொச்சை

•மெழுகு பீர்க்கன் வெளிர்பச்சை

•மெழுகு பீர்க்கன் அடர்பச்சை


ஓராண்டு & பல்லாண்டு பயிர்கள்

•முருங்கை

•பப்பாளி

•நாட்டு ஆமணக்கு

•தாட்பூட் பழம்

•மர துவரை

•கிளைரிசீடியா


கீரைகள்

•அரைக்கீரை

•முளைக்கீரை

•சிறுகீரை பச்சை

•சிறுகீரை சிவப்பு

•பச்சை தண்டங்கீரை

•சிவப்பு தண்டங்கீரை

•செங்கீரை

•பச்சை புளிச்சகீரை

•சிவப்பு புளிச்சகீரை

•மணதக்காளி கீரை

•கொத்தமல்லி

•சுக்காங்கீரை

•சக்கரவர்த்தி கீரை

•பருப்பு கீரை

•பாலக்கீரை

•அகத்திக்கீரை

•வெந்தயக்கீரை

சிவப்பு கொடி பசலை

பச்சை கொடி பசலை

சிவப்பு பூ அகத்தி 

வெள்ளை பூ அகத்தி

குப்பை கீரை


மூலிகைகள் & பூக்கள்

•பூனைக்காலி கருப்பு

.பூனைக்காலி வெள்ளை

•சங்கு பூ வெள்ளை

•சங்கு பூ ஊதா

•தாமரை

•திருநீற்றுப்பச்சிலை

•செண்டுமல்லி பூ

•துளசி

•கண்டங்கத்தரி

•சுண்டைக்காய்

•சதகுப்பை

•நில ஆவாரை

•அஸ்வகந்தா

•தூதுவளை

•முசுமுசுக்கை

•முடக்கற்றான்

•நில ஆவாரை


•மக்காசோளம் சிவப்பு

•சூரியகாந்தி

•சணப்பை

•தக்கபூண்டு


மரங்கள்

-வில்வம்

-தீக்குச்சி மரம்

-நாட்டுகருவேல்

-ஆணைகுண்டுமணி

-முள்பரம்பை

-அலிஞ்சில்

-சீயக்காய்

-நாட்டு சீத்தாமரம்

-கொட்டை முந்திரி

-பெருமூங்கில்

-ஆத்திமரம்

-மந்தாரை

-இலைபுரசு 

-சவுக்கு மரம்

-சரக்கொன்றை

-கருங்கொன்றை

-மஞ்சள்கொன்றை

-தோதகத்தி

-மயில்கொன்றை

-கல்மூங்கில்

-பெருநெல்லி

-குமுள்

-தகரை

-நீர்கடம்பு

-ஆச்சாமரம்

-மகிழமரம்

-மலைவேம்பு

-சுபாபுல்

-பூமருது

-நீர்மருது

-கருமருது

-அயல்வாகை

-கொடுக்காப்புளி

-நாட்டு வெள்ளை கொய்யா

-வேங்கை

-செம்மரம்

-நாட்டு மாதுளை

-சந்தனம்

-தூங்குமூஞ்சி

-எட்டிமரம்

-தேற்றான்கொட்டை

-மகோகனி

-தேக்கு

-தான்றிக்காய்

-வாதாங்கொட்டை

-பூவரசு

-இலந்தை


சிறுதானியம் | பயிறுவகைகள்

சாமை

வரகு

சடை வரகு

கேழ்வரகு

பனிவரகு

வெண்சோளம்

Brown top millet

நாட்டு உளுந்து

பாசிபயிறு

நரிபயிறு

வரிமொச்சை

சுண்டல்

தட்டைபயிறு


மண்ணை வளப்படுத்த தேவையான பலதானிய விதை தொகுப்பு கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு 25கிலோ வீதம் தேவைப்படும்.


ComboPackage விதைதொகுப்பு

•10 ரக தக்காளி தொகுப்பு

•12 ரக கத்தரி தொகுப்பு

•14 ரக வெண்டை தொகுப்பு

•15 ரக சுரை தொகுப்பு

•15 ரக கீரை தொகுப்பு

•12 ரக மூலிகை-பூக்கள் தொகுப்பு

•35 கொடி காய்கள் தொகுப்பு

•50 செடிகாய்கள் & மலைகாய்கறிகள் தொகுப்பு

•45 மர விதைகள் தொகுப்பு

•15 வகை சிறுதானியங்கள் பயிறு வகை தொகுப்பு

•180 ரக மொத்த விதை தொகுப்பு


விதைகள் தங்களுக்கு அனுப்ப 5-7 நாட்கள் ஆகலாம். விதைப்பு பட்டம் என்பதாலும் , இப்போதுள்ள சூழலில் நிறைய மக்கள் தோட்டம் அமைப்பதில் ஆர்வம் கொண்டு விதைகள் கேட்டிருப்பதாலும் உடனடியாக அனுப்புவதற்கு நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். இருந்தாலும் கூட 5-7 நாட்கள் ஆகின்றது. 


"சில முக்கிய குறிப்புகள்:

•தக்காளி, கத்தரி, மிளகாய் போன்ற நாற்று விட்டு நடவு செய்யும் விதைகளை 4-6 மணி நேரம் தண்ணீர் அ சாணிப்பாலில் ஊறவைத்து விதைக்கலாம். •வெண்டை, கொத்தவரை, அவரை, பீன்ஸ் போன்ற விதைகளை ஓர் இரவு ஊறவைத்து விதைக்கலாம். •பாகல், சுரை, புடலை என கொடி காய்கறி விதைகள் அனைத்தையும் 2-3 நாட்கள் ஊற வைத்து விதைக்கலாம்.    

•மழைநீர் விதைக்கும் முன்பு விதை நேர்த்தி செய்ய உகந்தது.   

•முதல் 2,3 அறுவடைகளையும், கடைசி 2,3 அறுவடைகளையும் விதைக்காக பயன்படுத்த வேண்டாம். •இடைப்பட்ட காலங்களில் விதைக்காக பயன்படுத்தலாம்.   

•சேகரிக்கும் விதைகளை உச்சி வெயிலில் காய வைக்க வேண்டாம். •காலை மாலை இளம் வெயிலில் காய வைத்து எடுத்து சேமிக்கலாம். •அமாவாசை நாட்களில் விதைகளை காய வைக்கலாம். இரவிலும் விதைகளை காய வைக்கலாம்.   

•விதைகளை சேமிக்கும்போது, துணிகளில் கட்டி தொங்கவிடலாம். காற்றோட்டமாக இருக்கலாம். சாதாரண அறை வெப்பநிலையில் பாதுகாக்கலாம். அவ்வபோது வேப்பிலைகளில் புகை போடலாம்(சாம்பிராணி புகை போல).   

•காய்கறிகளை வருடா வருடம் எடுத்து விதைத்து அவற்றிலிருந்து விதைகளை எடுத்து சேமிப்பதன் மூலம் விதைகளில் முளைப்புத்திறனை பாதுக்கலாம்.   

•சுரை,பீர்க்கு,வெண்டை போன்ற விதைகளை குடுவைகளிலேயே சேமிக்கலாம். பழமாக மாறிய பின் விதை எடுக்கும் தக்காளி கத்தரி பாகல் புடலை போன்ற காய்களிலிருந்து விதை எடுத்து உடன் சாம்பல் கலந்து விதைகளை சேமிக்கலாம்.•மர விதைகள் அனைத்தையும் 1-3 நாட்கள் ஊற வைத்து விதைக்கலாம். 


நன்றி..

•Whatsapp: +918526366796   

•website: www.aadhiyagai.co.in

•Facebook: www.fb.com/AadhiyagaiBiodiversityAndEcologicalFarm   

•Telegram:  https://t.me/aadhiyagai 


Paramez Aadhiyagai 

Aadhiyagai Seedsavers Farm 

ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்


#நாட்டுவிதைகள் #மரபுவிதைகள் #பாரம்பரியவிதைகள் #உள்ளூர்விதைகள் #காய்கறிவிதைகள் #வீட்டுத்தோட்டத்திற்கானவிதைகள் #desiseeds #nativeseeds #heritageseeds #heirloomseeds #traditionalseeds #ஆடிப்பட்டவிதை #seedsforaadi 

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY