50 ரகமான மர விதைகள்

 ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் வழங்கும் மரங்களின் விதைகள்..



விவசாய நிலத்தில் 30% மரங்களும், உயிர்வேலிகளும் இருந்தால் அந்த கிராமத்தில் தனியாக மரங்களை வளர்க்க முயற்சிக்க தேவையிருக்காது. குளக்கரை, உயிர்வேலிகளில் இருந்த பனை மரங்களை அணில் தங்குவதாகவெல்லாம் கூறி வெட்டி வீழ்த்தும் விவசாயிகளை காண முடிகிறது. பணப்பயிருக்கு மாறிய பின் தோட்டத்திற்குள் நிழல் வருவதாக உயிர்வேலிகளில் இருந்த மரங்களை வெட்டிவிட்டு கம்பிவேலிக்கு மாறியவர்கள் தான் நம் மக்கள். பக்கத்து வீட்டில் வளர்க்கும் மரத்தின் இலைகள் நம் வீட்டில் விழுந்தால் சண்டைக்கு செல்வதும் மரத்தை வெட்டும்படி குரல் உயர்த்துவதும் ஒரு வகையில் நம் வழக்கம். இப்படியான சூழலில் பசுமை இழந்து கொண்டிருக்கின்றோம் என உணரும் அனைவரும் மரங்களின் மீது கவனம் செலுத்த துவங்கியுள்ளோம். அந்தந்த பகுதிக்கான மரங்களை கண்டு அவற்றின் மரக்கன்றுகளையோ விதைகளையோ சேகரித்து வளர்ப்போம். 


ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் சார்பில்  சேகரித்த 40க்கும் மேற்பட்ட மரங்களின் விதைகளை பகிர்ந்து கொள்கிறோம். விதைகள் தேவைப்படும் நண்பர்கள் 085263 66796 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யவும். 


Tree seeds


Flowering trees/ பூக்கும் மரங்கள்

1.Golden shower / Indian Laburnum/ சரக்கொன்றை

2. Red cassia/ Rose tree/கருங்கொன்றை

3. Gulmohar/ May flower/ செம்மயிற்கொன்றை

4. Rain tree/ தூங்குமூஞ்சி மரம்

5. Siris tree/ வாகை

7. Bullet wood/ மகிழம்

8. Bidi Leaf Tree/ ஆத்தி

9.Purple Orchid Tree/ Butterfly tree /நீலத்திருவத்தி/மந்தாரை/ மந்தாரி

10.Indian tulip/ பூவரசு

11. Flame of the Forest/ பலாசம்/ இலை புரசு


Shade trees / நிழல் மரங்கள்

1. Indian-almond/ பாதாம்

2. Arjun tree/ நீர்மருது

3. Indian Laurel/ கருமருது

4. Bastard myrobalan/ தான்றி 


other uses/ பிற பயன்பாடுகள்

1. Babool/ கருவேலம்

2. Rusty Acacia/ white bark acacis/ பரம்பை

3. poison nut/ எட்டி மரம்

4. Barbados pride/ மஞ்சாடி/ ஆனைகுண்டுமணி

5. Sage Leaved Alangium / அழிஞ்சில்

6. Subabul/ சவுண்டால்


•Medicinal uses/ மருத்துவ பயன்பாடு

1. Sweet Indrajao/ வெட்பாலை

2. Myrobalan/ கடுக்காய்

3. Soapnut/ பூந்திக்கொட்டை

4. clearing-nut tree/ தேற்றான்மரம்

5. Shikakai, Soap-pod/ சீயக்காய் மரம்


•Timber uses/ மரம் பயன்பாடு

1. Indian Black Wood/ ஆச்சா

2. Teak/ தேக்கு

3.  Gamhar/ குமிழ்

4. Mahogany/ மகோகனி

5. Beach oak/ சவுக்கு

6. Malabar Neem/ மலை வேம்பு

7. Indian Rosewood/ ஈட்டி


•Kovil / கோவில் மரங்கள்

1. Khejri Tree/ வன்னி

2. Sandalwood/ சந்தனம் 

3. Red sandalwood/ செம்மரம்

4. Indian Kino Tree/ வேங்கை

5. Bael/ வில்வம்


•Fruits trees/ பழ மரங்கள்

1. Custard Apple/ சீதாப்பழம்

2. Guava/ கொய்யா

3. Pomegranate/ மாதுளை

4. Wood Apple/ விளாம்பழம்

5. Amla/ பெரு நெல்லி

6. Manila Tamarind/கொடுக்காய்ப்புளி


விதைகளை www.aadhiyagai.co.in இணையதளம் மூலமாகவும் பெறலாம்.. 


நன்றி..

Paramez Aadhiyagai 

ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY