Friday, 22 December 2017

தேயிலை தோட்டங்கள் கற்றுக்கொடுப்பது என்ன??

தேயிலை தோட்டங்களை காணும்போதெல்லாம் என் கண்ணுக்கு தெரிவதெல்லாம்.. "என்ன அழகாக நடப்பதற்கென பாதையும் பயிரிட இடமும் என பிரித்திருக்கின்றார்கள் என்று தான்.

ஒரு பயிர் சாகுபடி முறை என்றெல்லாம் என் கண்ணுக்கு தெரியவில்லை. நிரந்தரமான தோட்டமாக இருக்க வேண்டும் என்றால் விதைக்குமிடத்தில் மனிதனின் காலடி படக்கூடாது. அப்படியானால் நமது தோட்டத்திலும் இதுபோன்று செய்திட முடியும் என்று ஏன் யாருக்கும் தோன்றவில்லை.

Location specific என கூறுவது உண்மைதான். ஆனாலும் யாரும் முயற்சி கூடவா செய்யவில்லை. ஐந்து ஏக்கர் நிலத்தை அரை ஏக்கர் அளவில் வரப்பு கட்டி பிரித்தது போல ஒவ்வொரு அரை ஏக்கர் நிலத்தையும் 4அடி விதைப்பிற்கான இடமும், 2 அடி நடைபாதைக்கான இடமும் என பிரித்தால் அவ்விடத்திற்கு உழவு செய்வதறகான வேலை இருக்காதல்லவா.. விதையை போடுவோம்..யாராவது அறுவடை செய்வார்கள்.

விதைப்பும் அறுவடையும் செய்வதை மட்டுமே வேலையாக கொள்ள வேண்டுமென்ற இந்த சோம்பேறிக்கேற்றதை தானே தேடுவான்.. நிலத்தை உழவு செய்து விவசாயம் செய்வது அவசியமில்லை எனும் நிலை வர வேண்டும். அந்த நிலைக்கு நிலம் குப்பை காடாக மாற வேண்டும். அந்த நிலைக்கு நிலம் மாற வேண்டும் என்றால் அதை தொடங்கிட மனிதனின் மனம் மாறிட வேண்டும்.

வேலிகளில் சென்று கோவைப்பழம் பிடுங்கி ருசிப்பதை தான் ஒன்றும் செய்யாத வேளாண்மை என்கிறோம்..வேறென்ன சொல்ல..

#do_nothing_farming

Do nothing farming என்றால் என்ன??

Do nothing farming ஆ..
அப்படீனா என்னங்க..

உயிர்வே
லிகள் இந்த முறைக்கு ஒரு உதாரணம்..

நாம் வளர்க்கும் பயிர்கள் ஓரிரு நாட்கள் தண்ணீர் இல்லையென்றாலே காய துவங்கிவிடும்.. ஆனால் தோட்டத்தை சுற்றிலும் இருக்கும் வேலியோ பசுமை மாறாமல் இருக்கும்.

வாரா வாரம் இந்த வேலிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பழக்கத்தை உருவாக்கி பாருங்கள்.. தோட்டத்திற்குள் இருக்கும் தென்னை மரங்களை போல வேலி பயிர்களும் தண்ணீர் பாய்ச்சவில்லையென்றால் காய்ந்து போக தான் செய்யும்.

ஆனால் நாம் அவ்வாறான பழக்கத்தை. வேலிகளுக்கு பழக்கவில்லை.. தானாக வளர்ந்து பசுமையாக இருக்கும் இந்த உயிர்வேலிகளில் வாழும் பறவைகள், சிறு மிருகங்கள் மற்றும் காற்று மழை போன்றவற்றின் உதவியால் புது புது விதைகள் முளைத்து வேலியை பசுமையாக்குகின்றன..

அப்படியானால் தோட்டம் முழுவதும் வேலியை போல முள் மரங்களை வளர்க்க சொல்கிறீர்களா என கேட்காதீர்கள்.. வேலிகளை பார்த்து கற்று கொள்ள தான் சொல்கிறோம். நாம் அங்கே ஒன்றும் விதைப்பதில்லை..ஆனால் நமக்கு தேவையான அரிய மூலிகைகள், தாவரங்கள் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றன..

Do nothing farming என்பது நாம் தோட்டத்தில் பெரிதாக மெனக்கெடாமல் செய்யும் வேளாண் முறை.. காடுகளை போல, வேலிகளை போல இந்த முறையில் தோட்டம் எப்போதும் பசுமையாக இருக்கும். காய்கறிகள், மூலிகைகள், பூக்கள், பழ மரங்கள், டிம்பர் மரங்கள் என நாம் என்னவெல்லாம் வளர்க்க விரும்புகின்றோமோ அவற்றையெல்லாம் கலந்து பயிரிட்டு கொள்ளும் ஒரு முறை..

உழவு செய்வது, பாத்தி அமைப்பது, களையெடுப்பது என வருடம் முழுவதும் தோட்டத்தை பண்படுத்துவதிலேயே நேரத்தை செலவிடுவதும் அதற்கு பெரிய அளவில் செலவு செய்வதும் என ஓடிக்கொண்டிருந்த விவசாயிகள் தற்போது அதற்கு ஆட்கள் பற்றாக்குறையும் சேர்ந்து கொண்டதால் வேறு என்ன செய்வது என தெரியாமல் கஷ்டப்படுகின்றனர். சிலர் நிலங்களை விற்கின்றனர். சிலர் தென்னந்தோப்பு, மாந்தோப்பு என ஒரு பயிர் தோப்பாக மாற்றி கொள்கின்றனர்.

பலபயிர்களை கொண்ட, பல நூறு பயிர்களை வளர்க்கும் ஒரு பண்ணையிலிருந்து ஒரு பயிர் சாகுபடி மூலம் ஓரிடத்திலிருந்து கிடைக்கும் உணவு பொருட்களை விட அதிகமான உணவு பொருட்களை பெற்றிட முடியும்.

ஒரு செண்ட் இடத்தில் அதிக உற்பத்தி தரும் தக்காளி பயிரிடுவதாக கொள்வோம். அந்த தக்காளி எவ்வளவு பேருடைய தேவையை பூர்த்தி செய்திடும் என்பதை கணக்கிட்டு கொள்வோம். அதே இடத்தில் ஒரு தென்னை, ஒரு மாதுளை, ஒரு வாழை, ஒரு முருங்கை, கொஞ்சம் தக்காளி ,கத்தரி, மிளகாய், போன்ற காய்கறிகள் இடையிடையே பாசிப்பயிறு உளுந்து, நிலக்கடலை என பயிரிடுவதாக எடுத்து கொள்வோம். இதில் ஒரு வருட காலத்தில் தக்காளி ஒட்டுமொத்தமாக எவ்வளவு கிடைத்திருக்கும்.. அதே சமயம் மற்ற உணவு பொருட்கள் பல பயிராக பயிரிடும்போது எவ்வளவு கிடைக்கும் என கணக்கிட்டு பாருங்களேன்..

வேலை குறைவு,
அதிக உணவு உற்பத்தி,
சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொண்டால் நல்ல வருவாயும் ஏற்படுத்தி கொள்ள இயலும்.

Do #nothing..farming..
Paramez 8526366796 Whatsapp.
படம் இணையத்திலிருந்து..

விதைக்கும் இடத்தில் நடக்காதே.. நடக்கும் இடத்தில் விதைக்காதே..

விதைக்கும் இடத்தில் நடக்காதே..
நடக்கும் இடத்தில் விதைக்காதே..

மனிதன் சில நாட்கள் நடந்தாலே அவ்விடம் இறுகி போய் பாதையாகிவிடும். அப்படியிருக்க பயிர் செய்யும் இடத்தில் மிதித்தால் நிலம் இறுகிவிடாதா என்ன??..

மண் இறுகி போனால் நிலத்தை கொத்தி இலகுவாக்க வேண்டும். ஏக்கர் கணக்கில் இருக்கும் நிலமென்றால் உழவு தான் செய்ய வேண்டும்..

இதை தவிர்க்க என்ன செய்வது என யோசிப்போம்.. உழவிற்காக வருடா வருடம் எவ்வளவாயிரங்களை இழக்கின்றோம்.. உழவிற்காக காளைகளை வளர்க்கும் வரை நாம் செலவு ஏதும் செய்யாமல் தான் இருந்தோம். தற்போது இருக்கும் நிலை வேறு என்பது அனைவரும் அறிவோம்.

விதைப்பதற்கெனவும், நடப்பதற்கெனவும் நிலத்தை பிரிப்பது தான் நிரந்தர வேளாண்மையில் முதல் வேலையாக இருக்க வேண்டும் என கருதுகிறேன்..

#எப்படி_பிரிப்பது??
1மீ முதல் 4 அடி அகலத்தில் விதைப்பதற்கான பரப்பு..அ பாத்தி என எடுத்து கொள்வோம்.
1.5  முதல் 2 அடி வரை நடப்பதற்கான பாதை என பிரித்து கொள்வோம். பாத்தியில் எந்தவொரு சூழ்நிலையிலும் மிதிக்க கூடாது.
நடைபாதையில் விதைக்க கூடாது. இவ்வாறு நிலத்தை பிரித்து கொள்ளலாம். மேட்டுப்பாத்தியா, பள்ளபாத்தியா என்றெல்லாம் குழப்பம் வேண்டாம். நிலத்தை முதலில் பிரித்து கொள்ளலாம். இதன் மூலம் நிலம் இறுக விடாமல் தடுக்க இயலும்.

#பாசன_முறை கொண்டு பாத்திகளை அமைப்போம்..
இவ்வளவு நாட்கள் கிணற்றிலிருந்து வாய்க்கால் மூலம் பாசனம் செய்திருப்போம். அதன் மூலமே இனி வரும் காலங்களிலும் பாசனம் செய்வதாக இருந்தால் நடைபாதை தான் வாய்க்கால்.. பாத்தியின் அகலம் 4 அடி அகலம் இருக்கும் படி இருக்க வேண்டும்.

தெளிப்பு நீர் பாசனமோ, சொட்டு நீர் பாசனமோ அமைத்து கொள்வதாக இருந்தால் மேட்டு பாத்தி அமைத்து கொள்ளலாம். அதிக உயரம் தேவையில்லை.. அதிகபட்சமாக 1/2 அடி உயரம் போதும். அதனுள் இலைதழைகளையும் எருவையும் போட்டு புதைத்து கூட மேட்டுபாத்தி அமைக்கலாம்.

#மூடாக்கு
மண்ணை மூடி வைத்து விவசாயம் செய்வது தான் நிரந்தர வேளாண்மையில் எளிய முறை.. உழவிற்காக செலவு செய்யும் விவசாயிகள் அதற்கடுத்தபடியாக களையெடுப்பதற்காக செலவு செய்வார்கள்.. இந்த களைகளை கட்டுப்படுத்தும் ஒரு எளிய முறை தான் மூடாக்கு முறை.. சூரிய வெளிச்சம் மண்ணில் படாதவாறு பல்வேறு பயிர்களை கலந்து பயிரிடுவதன் மூலம் களைகளை கட்டுப்படுத்தலாம். மண்ணிற்கும் நிழல் கிடைக்கும். இதனால் மண்ணிலுள்ள நுண்ணுயிர் பெருகும். தண்ணீர் ஆவியாவது தடுக்கப்படும். அல்லது மண்ணில் மட்க கூடிய இலைதழை குப்பைகளை நிரப்பவதன் மூலம் மேற்கூறிய பயன்களை பெற இயலும். ஏக்கர் கணக்கில் மூடாக்கிற்கு எங்கே போவதென சந்தேகம் ஏற்படக்கூடும். முதல் முறை விதைப்பு செய்வதற்கு முன் பலதானிய விதைப்பு செய்து அதை பிடுங்கி மூடாக்கிட்ட பின் விதைப்பு செய்யலாம். களைகள் முளைத்தால் பிடுங்கி மூடாக்கிடலாம். ஒவ்வொரு முறை அறுவடை முடிந்த பின் அந்த பயிரை அந்த இடத்திலேயே மூடாக்கிடலாம்.

#ஆரம்பத்தில்_எப்படி_தொடங்லாம்??

10-30 செண்ட் இடத்தில் மாதிரிக்காக செய்து பார்த்து இதில் வேலை செய்து பழகி பிறகு சிறிது சிறிதாக ஒவ்வொரு சாகுபடிக்கும் பரப்பை அதிகரிக்கலாம்.

______

நிரந்தர வேளாண்மை என்பது மேட்டுப்பாத்தி அமைத்து அதில் பயிரிடுவது அல்ல..என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேற்கூறிய முறைகளின் மூலம் உழவர்களின் செலவுகள் குறைய வேண்டும். சந்தையில் வருவாய் கிடைக்கிறதோ இல்லையோ, விவசாயி செய்யும் செலவுகள் இங்கே அதிகம். இம்மாதிரியான முறைகளின் மூலம் செலவுகளை குறைத்து விவசாயம் செய்து பழகிடுவோம்.

மேலும் சந்தேகங்களுக்கு 8526366796 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யலாம்..

நன்றி..

Farming in sand (chennai palavakkam)

சென்னை பாலவாக்கத்தில் ஒரு இடத்தில் தோட்டம் அமைக்க நண்பர் பாலமுருகனோடு சென்றிருந்தோம். அங்கே அந்த இடத்தை காவல் காக்க நேபாளத்தை சேர்ந்த ஒரு ஐயா இருந்தார். அவருடைய தோட்டத்தின் படங்களை தான் பதிவிட்டுள்ளேன். கடற்கரையிலிருந்து 300-400 மீட்டர் தொலைவில் தான் இவருடைய தோட்டம். மணலாக உள்ள நிலத்தில் எப்படி விளைவிப்பது என்றெல்லாம் இவர் யோசிக்கவேயில்லை.. பயிரிட தேர்ந்தெடுத்த இடத்தை சுற்றிலும் கற்களை அடுக்கி மணல் சரியாமல் ஏற்பாடு செய்துவிட்டு மணலில் இலைதழைகளை புதைத்து தண்ணீர் ஊற்றிவருகிறார். பிறகு சில நாட்கள் கழித்து விதைப்பு செய்கிறார். நேபாளத்திலிருந்து ஒரு வகை கீரையை எடுத்து வந்து பயிரிட்டு உணவிற்கு பயன்படுத்துகிறார். ஒரு முறை பயிரிட்டால் பல மாதம் இலைகளை அறுவடை செய்யலாம் என்ற கீரை வகை அது. பாலக்கீரையை போல என நினைக்கின்றேன். கரும்பு, மக்காச்சோளம், பாகல், பசலைக்கீரை, தக்காளி,கத்தரி, மிளகாய், சக்கரைவள்ளி கிழங்கு என பல வகை பயிர்களை பயிரிட்டு உள்ளார். அவருடைய தக்காளி செடிகளை பாருங்களேன்..செடி மண்ணில் விழாதபடி அழகாக ஏற்பாடு செய்துள்ளார். மணல் என்பதால் தண்ணீர் நிற்பதில்லை.. அதனால் அவ்வபோது தண்ணீர் பிடித்து விடுகிறார். இவர் தோட்டம் அமைத்திருப்பதை பார்த்த அந்த இடத்தின் சொந்தக்காரர் மொத்த இடத்திலும் பயிரிடலாமே என ஒரு ஏக்கர் நிலத்தையும் சுத்தம் செய்து வருகிறார்.. மணலாக இருப்பதால் 4 அடி அகலத்தில் அரை அடி ஆழத்தில் பள்ளம் எடுத்து உள்ளே இலைதழைகளையும் எருவையும் புதைத்து அதில் பயிரிடலாமென எனக்கு தெரிந்ததை கூறி வந்துள்ளேன். அந்த இடத்திற்கு மூடாக்கிடுதல் தான் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தழைசத்துகளை அதிகமாக கொடுக்க வேண்டும். அதனால் என்ன கழிவுகள் கிடைத்தாலும் கொண்டு வந்து புதைத்தும் மூடாக்கிட்டும் பயிரிடலாம் என்பது எனது எண்ணமாக இருந்தது. மணற்பாங்கான பூமியோ, பாறை நிலமோ பயிரிடலாமென முடிவெடுத்துவிட்டால் தாராளமாக செய்யலாம் என்பதற்கு இந்த நேபாள ஆசிரியரின் தோட்டம் போதுமே..
Thursday, 23 November 2017

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY

பீர்க்கன் விதை பன்மயம்
RIDGE GOURD SEED DIVERSITY


வரி பீர்க்கன் (சாதாரண பீர்க்கன் தான், அன்றாட சமையலில் நாம் பயன்படுத்தும் ரகம்)

வரி பீர்க்கன் -நீளம் 

வரி பீர்க்கன் - குட்டை


வரியில்லா பீர்க்கன் (மெழுகு பீர்க்கன் போல இருக்கலாம், ஆனால் சாதாரண பீர்க்கன தான், சாதாரண பீர்க்கன் விதை போல தான் இருக்கும்) seed source: chatisgarh.
வரியில்லா பீர்க்கன்


மெழுகு பீர்க்கன் (சமைக்கலாம், விதை வெள்ளையாக இருக்கும், நார் உடல் தேய்த்து குளிக்கலாம், ஆனால் பேய் பீர்க்கன் நார் தான் பஞ்சு போல இருக்கும்)
மெழுகு பீர்க்கன், நுரை பீர்க்கன் என பல பெயர். பேய் பீர்க்கன் அளவில் சிறியதாக இருக்கும்.


பேய் பீர்க்கன் (காய் கசக்கும்., விதை கருப்பாக இருக்கும், உடம்பு தேய்க்கும் நாராக இதன் நாரை பயன்படுத்தலாம்)

வெள்ளை விதைகள் மெழுகு பீர்க்கன்
கருப்பு விதைகள் பேய் பீர்க்கன்வரியில்லா குட்டை பீர்க்கன் (2-3 இஞ்ச்) நீளமுள்ள சிறிய அளவிலான பீர்க்கன். சாதாரண பீர்க்கன் போலவே சமைக்க பயன்படுத்தப்படுகிறது.
 Seed source: chatisgarh

சிட்டு பீர்க்கன் என பெயர் வைக்கலாமோ

விதை சாதாரண பீர்க்கன் போன்றே உள்ளது.கொத்து பீர்க்கன் (கொத்து கொத்தாக காய்க்கும் இந்த ரக பீர்க்கன் தமிழகத்தில் நான் கண்டதில்லை. மங்களூரில் ஒரு மாடித்தோட்டம் வைத்திருக்கும் ஒருவர் முகநூலில் பகிர்ந்துகொண்டே இருப்பார். இறுதியில் இவ்விதைகளையும் 2017 நவம்பர் மாதம் சேகரித்தோம்.
seed source: bangalore.

கொத்து பீர்க்கன்


குண்டு பீர்க்கன் (கிரிக்கெட் பந்து அளவுள்ள இந்த விதைகளை சேகரிப்பதற்காகவே மார்ச் 2017 இல் ஐதராபாத் சென்றோம். அங்கே விதை சேகரிப்பாளர்களால் சேகரித்த பாதுகாத்து வரும் விதைகளை சிலவற்றை நாங்களும் பெற்று வந்தோம். seed source: Hydrabad

குண்டு பீர்க்கன் (கிரிக்கெட் பந்து அளவு)

நமது பகுதிகளிலேயே குட்டை பீர்க்கன் நீட்டு பீர்க்கன், சித்திரை பீர்க்கன் (கோடை காலத்தில் பயிரிடும் ரகம்), பனையேறி பீர்க்கன் (கோபி பகுதியில் கேள்விபட்ட ரகம்) என பல்வேறு  வித்துகள் நம்மை சுற்றிலும் உள்ளது.

பீர்க்கன் போன்ற கொடி காய்கறிகள் கசந்து போவதற்கு காரணம் மகரந்த சேர்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையாக இருக்கும். கிராமங்களில் இந்த கொடிகளில் பாம்பு ஏறிவிட்டதென அந்த கொடியை பிடுங்கி போட்டுவிடுவார்கள். ஆனால் அது உண்மையில் மகரந்த பிரச்சனையாக இருக்கும். வேறு வழியில்லை. அந்த வித்து முழுவதும் கசப்படிக்கும். அதனால் பிடுங்கி போட்டுவிடவேண்டியது தான். ஒசூரை சேர்ந்த நண்பரின் வீட்டருகே இருக்கும் விவசாயி ஒருவர் இந்த கசப்படிக்கும் காயையும் உணவாக எடுத்து கொள்கிறார் என நண்பர் கூறினார். கசப்பை நீங்கள் விரும்பி உண்பவராக இருந்தால் அந்த ருசி பிடித்திருந்தால் தாராளமாக உட்கொள்ளுங்கள் என நண்பரிடம் அந்த விவசாயி கூறினாராம்.

தகவல் பகிர்வு:
ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்
8526366796
நாள்: 23.11.17

Monday, 20 November 2017

செம்பருத்தி /மர பருத்தி/பல்லாண்டு பருத்தி/native cotton/pernial cotton

செம்பருத்தி /மர பருத்தி/பல்லாண்டு பருத்தி/native cotton/pernial cotton

2014 ஆம் ஆண்டு இந்த ரக பருத்தியை பற்றி அறிந்து கொண்டோம். விதை சேகரித்து 2015 ஆம் ஆண்டு தோட்டத்தில் பயிரிட்டோம். தற்போது அனைவருக்கும் இதன் விதைகளை  கொடுத்து வருகிறோம். அளவில் சிறிய பருத்தி, பஞ்சு குறைவாக கிடைக்கின்றது. பல்லாண்டு காலம் வாழும் நிரந்தர பயிராகவும், வறட்சி தாங்கி வளரும் தாவரமாகவும், ஆடுகளுக்கு தீவனமாகவும் பருத்திப்பாலுக்கான நல்ல பருத்தி கொட்டை தரும் ரகமாகவும் கோவை ஈரோடு பகுதிகளில் பரவலாகவும் உள்ளது. கோயில்களில் வளர்க்கப்படுகிறது. விளக்கு போடும் திரியாக இதன் பஞ்சு பயன்படுத்தலாம். வீட்டுக்கு ஒரு செடி வளர்க்க முயல்வோம். 

தோட்டத்திற்கு வரும் உறவினர்கள் என்னப்பா, பூச்செடிகளை வளர்க்கறீங்களா, ரோசா பூத்திருக்கு அழகா இருக்கேப்பா..என கூறுவதும், பெண்களோ  புளிச்சை கீரை எவ்வளவு உயரமா போயிருக்கு பாரேன் என கூறுவதும் நிகழ்கிறது. 

பெயரை கேள்விபட்டதும் செம்பருத்தியா..நாங்க பார்த்த செம்பருத்தி இப்படி இருக்காதே என கேட்டபோது, இதன் பெயர் தான் செம்பருத்தி.. நாம் செம்பருத்தி என அழைக்கும் பூச்செடியை செம்பரத்தை என அழைக்க வேண்டும் என கூறினார் விதை கொடுத்த விவசாய நண்பர்.

தகவல்: ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் 8526366796
பதிவு செய்த நாள்: நவம்பர் 20 201712அடி உயரமுள்ள செம்பருத்தி .. நேராக மேல்நோக்கி வளரும். அழகுக்காகவும், வேலிகளிலும் தாராளமாக வளர்க்கலாம். 

வறட்சியிலும் பசுமை மாறா தாவரம். வறட்சி காலத்தில் ஆடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தி கொண்டோம்

இந்த செஞ்சிவப்பு நிற பூவிற்காக தான் செம்பருத்தி எனும் பெயர் வந்ததோ என்னவோ..

கருஞ்சிவப்பு நிற தண்டுகள். வெட்டினால் இதிலிருந்து கிடைக்கும் சாயத்தை இயற்கை சாயத்திற்காக பயன்படுத்தலாம்.

பருத்தி காய்கள்.. பஞ்சு வெடிப்பதற்கு முன்பு


பருத்தி வெடித்த பின்பு

விரல்களை போல இலைகள்.. 

பருத்தி விதைகள்..இந்த ரக பருத்தியில் பஞ்சு அதிகம் கிடைப்பதில்லை. ஆனால் பருத்திக்கொன்டை நன்கு கிடைக்கின்றது. பருத்திப்பால் செய்து குடிக்கலாம். இரண்டு வருடமானாலும் 100% முளைப்புத்திறன் உள்ளது.

தண்டை வெட்டியபோது சாயம் கைகளில் ஒட்டிக்கொண்டது.


செம்பருத்தி எனும் பருத்தி ரகத்திலிருந்து கிடைக்கும் பருத்தி பஞ்சு.

Tuesday, 5 September 2017

விதை முளைக்க வேண்டும்.

விதைகள் கேட்கும் நண்பர்களுக்கு ஒவ்வொரு வாரமும் புதன்கிழைமை அன்று விதைகள் அனுப்புகிறோம். சில வாரங்கள் வியாழன் அன்று அனுப்ப இயலுகிறது. புதன்கிழமை விதை அனுப்ப செவ்வாய்கிழமைக்குள் நண்பர்கள் விலாசம் அனுப்பினால் புதன் அன்று அனுப்ப இயலுகிறது. போன் எடுக்காத சூழலில் வாட்ஸ்அப் மூலம் தகவல் கொடுத்திடவும். பெயர் விலாசம் தேவைப்படும் விதைகள் தொடர்பு எண்ணை அனுப்பினால் எங்களிடமுள்ள காய்கறி விதைகளில் விதைப்பெருக்கம் செய்திட மட்டும் 10,20 விதைகள் தந்து வருகிறோம்.
நீங்கள் விதைகளை எங்கே சேகரித்தாலும் விதைப்பதற்கு முன் சில விசயங்களை செய்திடுவது நலம்.
விதைகளை முந்தைய நாள் எடுத்து வெளியில் காய வைத்து விடுங்கள். (வீட்டிற்குள்ளே கூட) மாலை முதல் காலை 10மணி வரை காய விடுங்கள்.
தக்காளி, கத்தரி,மிளகாய் போன்ற நா்று விடும் விதைகளை அரை மணி நேரம் வரையிலும்,
வெண்டை,கொத்தவரை,காராமணி போன்று சிறிய அளவு விதைகளை ஒரு மணி நேரம் வரையிலும்,
பாகல்,புடலை,சுரை,பூசணி போன்ற விதைகளை ஆறு மணி நேரம் வரையிலும் தண்ணீரில் ஊற வைத்து பிறகு விதைக்கவும். கொடி காய்கறி விதைகளை ஆறு மணி நேரம் ஊற வைத்து பிறகு முளைகட்டி வைத்து விதைக்கலாம். அல்லது ஈரமணலில் ஊறவைத்து முளைப்பு வந்ததும் விதைக்கலாம்.  பஞ்சகவ்யம்,கோமயம் போன்றவற்றில் விதை நேர்த்தி செய்வதாக இருந்தால் 100மிலி தண்ணீருக்கு 3மிலி என்ற அளவில் பஞ்சகவ்யம் அ கோமயத்தை கலந்து அவற்றில் விதைகளை ஊற வைத்து விதைக்கலாம். அகத்தி,பாகல் போன்ற விதைகளை பாலில் ஊறவைத்து விதைக்கலாம். முருங்கை விதைகளை 48மணி நேரம் வரையில் ஊறவைத்து விதைக்கலாம். சரியான முறையில் விதைகளை முளைக்க வைக்க நிறைய யுக்திகள் உள்ளன.. விதைகள் முளைக்கவில்லை என்றாலே அது மரபணு மாற்றப்பட்ட விதையாகவோ ஹைப்ரிட் விதைகளாகவோ இருக்கலாமென நிறைய பேர் பேசிக்கொள்வதை கேட்டிருக்கின்றோம். விதை உறக்கநிலையில் இருக்கலாம். வெப்பமான இடத்தில் விதைகள் இருந்திருக்கலாம். விதைகளை எடுத்து காயவைக்கும் போது அதிக நாள் காயவைக்கப்பட்டிருக்கலாம். உச்சி வெயிலில் காய வைக்கப்பட்டிருக்கலாம். சித்திரை மாத அக்னி நட்சத்திர காலங்களில் விதைகள் காயவைக்கப்படிருக்கலாம். விதைகளை காலை 9-10 மணி வரையிலும் மாலை 3-4மணிக்கு மேலேயும் காய வைப்பது நலம். விதைகளில் ஏறக்குறைய 8% ஈரப்பதம் இருக்கவேண்டும் என்பார்கள். அது எவ்வாறு கணக்கிடுவது என நமக்கு தெரியாது.ஆனால் மேற்கூறிய விசயங்களை தெரிந்துகொள்வதன் மூலம் விதைகளை சரியான ஈரப்பதத்துடன் பாதுகாக்க முடியும். நாற்று நடவு செய்யும் விதைகளை விதைத்த பின் மூடி வைப்பதன் மூலமும் விதைகள் முளைத்து வர ஏதுவான சூழலை உருவாக்கிட முடியும். வீடுகளில் தோட்டம் போடுவோர் விதைத்த பின் விதைத்த இடத்தை தென்னை மட்டைகளையோ அல்லது அட்டைகளையோ கொண்டு மூடிவிடலாம். ஒருவேலை நாம் விதைகளை காய்களிலிருந்து எடுக்க நினைக்கிறோம் என்றால் விதைகளை எடுத்து தண்ணீரில் போட்டால் தண்ணீரில் மூழ்கும் விதைகள் தரமான விதைகள் என்றும் மிதக்கும் விதைகள் உள்ளே சோறு இல்லாத தரமற்ற விதைகளாகவும் கருதப்படும். அதனால் மிதக்கும் விதைகளை நீக்கிவிட்டு ஏனைய விதைகளை சேமிப்பது  நலம். காராமணி விதைகளில் வண்டு அதிகம் தாக்கப்பட்டு இருக்கும். அதனால் அவ்விதைகள் முளைக்காது என அர்த்தமில்லை.. வண்டு விழுந்த விதைகள் முளைக்காது என தோட்டத்தில் தூக்கிவீசி அதில் மழை பெய்து அவ்விதைகளில் பெரும்பாலானவை முளைத்துவந்ததை நேரடியாக கண்டோம். விவசாயம் செய்திட வளமான மண்ணும் தரமான மரபு விதைகளும் அவசியம். அவ்விதைகள் சில சமயம் முளைக்காது போகுமானால் அதற்கு உரிய தீர்வுகளை காண்பது மிக அவசியம். விதைகளை பாதுகாப்பதன் அவசியத்தை அறிந்து கொள்வதுடன் பாதுகாப்பு முறைகளையும் கற்றுக்கொள்வது அவசியம்.

நன்றி பரமு

Wednesday, 9 August 2017

சுத்தம் செய்யும் ஒரு சிறந்த பொருள்

புளித்த மாவை தவிர உலகில் வேறேதும் சிறந்ததொரு சுத்தம் செய்யும் பொருள் இருக்க முடியாது...

இட்லி தோசை மாவை பாத்திரம் கழுவ பயன்படுத்தினால் எவ்வளவு எண்ணெய் பிசுக்கு இருந்தாலும் பாத்திரம் பளிச்சென ஆகிவிடும்..

அதே சமயம் இந்த பாத்திரம் முறையில் பாத்திரம் கழுவிய தண்ணீரை வீட்டில் தோட்டம் வைத்திருப்போர் செடிகளுக்கு ஊற்றலாம்..மண் நன்கு வளமாகும்..

(அரிசி பருப்பு அலசிய தண்ணீரில் ஒரு முறை அலசிவிட்டு மறுமுறை சாதரண தண்ணீரில் அலசி கொள்ளலாம். இந்த தண்ணீரை செடிகளுக்கு ஊற்றலாம்.)

கிராமத்தில் பாத்திரம் கழுவ சாம்பலை பயன்படுத்துவோம்.. நகரத்தில் வசிப்போருக்கு சாம்பல் கிடைக்கவில்லையென்றால் இட்லி தோசை மாவை பயன்படுத்தி கொள்ளலாம்..

இந்த மாவை உடலில் பூசிக்கொண்டு சிறிது நேரத்திற்கு பிறகு தேய்த்து குளிக்கலாம்..உடலும் பளிச்சென்று இருக்கும்..

எல்லாமே சுய அனுபவம் தான்..

Wednesday, 5 July 2017

Greetings from Aadhiyagai

Friends,

Greetings from Aadhiyagai!!!

We are collecting heirloom seeds and sharing them to kitchen gardeners and farmers.
You can avail below services from us
#Heirloom_Seeds
#Home_Gardening
#School_Gardening
#Complete_Training_for_setting_up_a_Home_Garden
#Heirloom_Return_gift_Seeds_for_functions(THAAMBOOLA GIFTS in tamil)

Now more than 110 variety Heirloom seeds(local variety seeds) -
________*_________*______*_______*______*_________*___@
4Type of tomatoes:
• tomato(bush variety)
• red Cherry tomato
• Yellow cherry tomato_sweetness variety
• blums tomato-vine variety

25variety brinjals include,
• பச்சை கத்திரி-green brinjal
• வரி கத்திரி-violet stripped brinjal
• Dindigal violet brinjal
• Manaparai brinjal
• vellore violet brinjal
• white brinjal
• kumbakonam brinjal
• Sevanthampatti brinjal
• madurai violet brinjal
* Nandhavan green long brinjal

• Bitter gourd
• small bitter gourd( momordica muricata)

#10variety_bottle_gourd include
• குடுவை சுரை bottle gourd
• நீளச் சுரை long bottle gourd

• நீள புடலை long snake gaurd
• குட்டை புடலை short snake gaurd

• பந்தல் பட்டை அவரை - broad beans( creeper variety)
• தம்பட்ட அவரை - sword beans
• கொத்தவரை - cluster beans
• செடி அவரை- broad beans( non- creeper)

• நீள பீர்க்கங்காய் - long ribbed  gourd
• மெழுகு பீர்க்கங்காய் அ நுரை பீர்க்கங்காய்- sponge gourd

• சம்பா மிளகாய ் - long chilli
• முட்டி மிளகாய ் - bullet chilli
• காந்தாரி மிளகாய - kandhari chilli
குண்டு மிளகாய் - andra round chilli

• வெண்டைக்காய - ladies finger
மலை வெண்டை - long ladies finge
சிவப்பு வெண்டை- red okra

• வெள்ளை பூசணி- ash gourd
• லாடம் பூசணி - ladam pumpkin
• சக்கரைப் பூசணி - sweet pumpkin
• பரங்கிக்காய - pumpkin

• செடி பொரியல் தட்டை - bush beans
• கொடி பொரியல் தட்டை - bush beans (creeper variety)

• வெள்ளை முள்ளங்கி - white radish
• பீன்ஸ்- beans
வரி பீன்ஸ் - lined French beans
கருப்பு பீன்ஸ் - black beans
சிவப்பு பீன்ஸ் - red beans
ரெட்டை பீன்ஸ் - double beans

• முருங்கை- drumstick
• வெள்ளரி- cucumber
• பப்பாளி- papaya
• -------
• அரைக்கீரை- amaranthus tricolos
• முளைக்கீரை- amaranthus
• பச்சை சிறுகீரை- green tropical amaranthus
• சிவப்பு சிறுகீரை - red tropical amaranthus
• பச்சை தண்டங்கீரை - green amaranthus tender
• சிவப்பு தண்டங்கீரை - red amaranthus tender
• பச்சை புளிச்சகீரை - green sorrel leaves
• சிவப்பு புளிச்சகீரை - red sorrel greens
• மணதக்காளி கீரை- black night shade
• கொத்தமல்லி  - coriander leaves
• பருப்பு கீரை- amaranthus aritis
• பாலக்கீரை - spinach
• அகத்திக்கீரை - Agathi
• சிவப்பு அகத்திக்கீரை - red Agathi
• காசினிக்கீரை- kaasini chicory leaves
• சக்கரவர்த்தி கீர - chakravarthi
• ---------
• தூதுவளை- Solanum trilobatum
• கண்டங்கத்தரி- Solanum virginianum
• முடக்கற்றான்- baloon vine
• துளசி- basil
• திருநீற்றுப்பச்சிலை - sweet basil
• செண்டுமல்லி பூ- yellow flower for garden
• நாட்டு பருத்தி. (செம்பருத்தி )- cotton tree
• நாட்டு ஆமணக்கு-  Ricinus communis

Seeds are available only for home gardening purpose and not farming in large area being done commercially. Also seeds for future usage should be collected by themselves. Seeds are shared with the intention of preserving our heirloom seed varieties. It is always better to collect and save seeds for the upcoming seasons instead of being bought everytime in shops. Each variety of seed costs rs.10 and as a set of 110varieties costs rs.1100
Seeds will be sent through courier only on every Wednesday. Within Tamilnadu , courier charge is rs.50.

We are setting up home gardening, terrace gardening and providing training as well. Wherever be the space, let us try to produce our own non- poisonous crops ourselves. 400 sqr.ft area is enough for a family of 4 members to harvest vegetables and greens throughout the year. 33 cents of area will be enough for complete crop requirement for a family which includes paddy, small grains, pulses and oil seeds.

 Also we are extending our service in schools as well and would like to educate the organic farming to children. We are guiding for organic farming and Permaculture.

A pack of 110 Set of seeds including vegetables, greens,herbals, few tree varieties, flowers costs rs. 1100. kindly share heirloom seeds, if you have any.

Account details for transferring amount .
Acc no:912010045000240
name:A.Parameshwaran
BANK: axis bank
branch:KETHAIURAMBU,­ ODDANCHATRAM
ifsc:UTIB0001745
micr:625211005

Kindly send the address,contact.No and receipt of amount transferred to the email id paramez.zurich@gmail.com or WhatsApp number 8526366796 for further details.

Thank you,
Paramez Aadhiyagai

_________""""_____________""""___________""""""_________
 Return_gift:

In our tradition, we offer return gift to our relatives and friend who attended the wedding.  It’s not only tradition, but there is a science behind it.  Our ancestors gave a bag of Beetle leaves, Nuts and Coconut as return gift.  The beetle leaves/Nuts help in digestion and Coconut helps to drive away the tiredness of travelling.

Nowadays saplings are given as return gift for many of the functions like Marriages, Birthday parties, House warming ceremonies and many others.  As per requests from our friends “Aadhiyagai” started sharing the native seed bags as return gift for the past one year.

Our aim is to initiate people to start kitchen garden and to keep our native seeds in rotation.  By this our native seeds reaches many hands.  Not only farmers, It’s all our duty to save our indigenous seeds.

Nowadays many have started terrace gardening, this will help them to plant native seeds and those who haven’t started yet may get interest when they have seeds in hand.

Based on all these good cause, we have started to provide seed bags as return gift who asked for.  From the year 2014,  native seeds are collected, multiplied and shared to people who needs it.  You can avail sufficient seeds of Tomato, Brinjal, Ladies finger, Greens, Herbs, Flowers and Creepers varieties as a pack of 10 to 20 seeds in each bag.

Friends those who would like to avail this, can give 10 days prior notice,  this will help Aadhiyagai to supply as per your need and wish.

For more details,
Parameshwaran 8526366796 (w.app)
Facebook @Paramez Aadhiyagai
http://aadhiyagai.blogspot.in
Paramez.zurich@gmail.com

___________________________

        As we are aware, nowadays crops are cultivated with hazardous pesticides and chemical fertilizers which leads us to consume poisonous food. Also our native seeds are genetically modified for high yield and treated with chemicals for preservation. Birth diseases are getting increased among children because of these chemically grown GM crops.
      Let us preserve our native seeds for our food needs and try to cultivate as much as vegetables for our family ourself in organic way. This will make our life self sustainable and  agriculture as our way of life. Let us use the available space in terrace or backyards for cultivating vegetables.

List of materials required for terrace gardening
___*___*___*___*___*___*___*___*___*___*___*___*___*___*___*______*___*__
1)soil :
         It is not must that we should use only red soil for gardening. Any soil around us either from farming land or soil under the trees can be used. It will be always good to use the soil taken 1 feet depth below the ground level.

2)Decomposable wastes
        All kind of biodegradable wastes from trees, plants, vegetables,fruits, tea dusts, coconut husks , sugarcane wastes can be used.

3) Gardening Area
       Let us try to use the unused space or backyards in home wherever sunlight is available. If not, we can use strong containers like cement pots, paint buckets , non- biodgradable plastic bags for gardening.

4) Base
     Instead of keeping the grow bags directly on the terrace floor, bags can be kept over a base made of wood or flat boards with a brick under these boards so that gap can be ensured between floor and bags.

5) Cattle wastes:
       We need either Cow dung or goat dung wastes in diluted form or dry form for preparing potting mix.
 
6)) Seeds

Vegetables , greens, herbals, flowers are required to set up a complete home garden in Permaculture way.

___*_____*____*____*____*_____*_____*____*________*_____*___*_____*__**_******__________

How can I guide you
-------------*---------------*----------

  I have all kind of heirloom seeds required for home gardening and  knowledge in organic farning . With this , I can guide you in setting up home gardening in your premise. I can come to your place wherever be if you arrange all these required raw materials. Person who is going to maintain the garden should work with me which will be the training as well.
______*_____*________*______________*________*_______*_______*________*_______*__________*


!___________!!_____________!____________!____________

Gardening for schools

      Along with home gardening, we are helping to do gardening in schools too. This will create and spread awareness of self sustainable life among the school chikdren  who will take the farming knowledge to their home. We provide training to school kids about organic farming and importance of producing crops required for our daily needs by ourselves.

         If you want to set up school gardening in your area , you may contact us. we invite the volunteers to work for school gardening.

Aadhiyagai__School_garden

Monday, 29 May 2017

நருவள்ளியம்பழ மரம் Cordia dichotoma Gürke

நருவள்ளியம்பழ மரம் Cordia dichotoma Gürke

முகநூல் பதிவிலிருந்து..
நருவள்ளியம்பழமரம்
விரிசு மரம்
நறுவல்லி மரம்:


கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே 10ஆம் எண் முத்தூரில் Swathika Vinothkumar அவர்களின் தோட்டத்தில் பார்த்த மரம்.
வீட்டில் ஆண்குழந்தை பிறந்தாலே இந்த மரக்கன்றை நடவு செய்வார்களாம். கொத்து கொத்தாக பூக்கும் வெண்நிற பூவானது பச்சை நிற காயாகி பிறகு மணல் நிறத்தில் மெல்லிய தோலுள்ள பழமாகிவிடுமாம். பழமானது கோலிகுண்டு வடிவத்தில் உருண்டை பழமாக இருக்குமாம். ஆண்மை பெருக்கத்திற்காக இந்த பழங்களை பயன்படுத்துவதாக கூறினார்கள். இதனை பற்றி மேலும் தகவல் தெரிந்தால் பகிரவும்..

Siva Prakash
yes this tree found in palghat pass area of kinathukadavu surroundings only...this is rare and this tree name is siru naruvalli  and also peru naruvalli tree is available..In Our farm nearly 100s of trees available...

இந்த மரத்தின் பழம் இருதய ஓட்டை பிரச்சனை இருப்பவர்களுக்கு மருந்தாக பயன்படும். பறவைகளுக்கு மிகவும் பிடித்த பழம் பறவைகளின் எச்சத்தில் இதன் விதை பாகுபட்டு எளிதாக வளரும்.

கிள்ளி வளவன்:
நருவள்ளி. தோல் நோய்களை போக்கவல்லது.

Vanavan Malathi:
வானவன் சென்னை: இதை மூக்குசளி பழம் என கிராமத்தில் அழைப்பர்.
சிறு வயதில் புத்தகம் ஒட்ட பயன்படுத்துவோம்.
சென்னையிலே பல இடங்களில் பார்த்திருக்கிறேன்.
 சீசனில் என்னால் விதை சேகரித்து தர முடியும்.

Thilagavathy Arunachalam:
Ithu naruvizhi maram.Viriyamaramnu peyar undu.penkalin vellaipokkirkku  Mika siranthathu ithan pazham

Vinod Chakravarthy:
indiabiodiversity.org/species/show/229288
மேலும் விபரங்களுக்கு மேலுள்ள link சொடுக்கவும் .

நன்றி
பரமு
29.5/17

Saturday, 22 April 2017

15417 சென்னை மேடவாக்கத்தில் ஒருநாள் வீட்டுத்தோட்ட பயிற்சி முகாம்

ஒரு ஏக்கரில் அல்ல..ஒரு செண்ட் இடத்தில் ஒரு குடும்பத்தின் காய்கறி தேவைகளை எப்படி பூர்த்தி செய்து கொள்வது என்ற ஒற்றை இலக்குடன் தான் எங்களின் பயணம் தொடர்கிறது..

 நிரூபித்துவிட்டீர்களா.. சாத்தியமா என கேட்காதீர்கள்.. உங்களால் அதை சாத்தியப்படுத்த இயலும்.. தயவுகூர்ந்து முயன்று பாருங்கள்.. வெறுமனே 1செண்ட் இடத்தை நிலத்திலோ மாடியிலோ ஒதுக்கி தோட்டம் அமைத்து உங்கள் குடும்பத்திற்கு தேவையான காய்கறி கீரைகளை மட்டும் அதில் உற்பத்தி செய்து பயன்படுத்துங்கள்.. தேவையை பூர்த்தி செய்ய முடிகிறது.. தேவைக்கு அதிகமாகவே கிடைக்கிறதே என்ற பதிலை தான் உங்களிடம் எதிர்பார்க்கின்றோம்..
அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி கீரைகளின் பெயர்களையெல்லாம் பட்டியலிடுங்கள்.. நல்ல தரமான விதைகளை கையில் வைத்துக்கொள்ளுங்கள். மண்ணை நன்கு வளமாக்கிக்கொண்டு விதைப்பு செய்திடுங்கள்.. மற்றதை பிறகு பார்ப்போம்.

நினைவில் கொள்ள வேண்டியது ஒன்று தான்.. அறுவடை தினசரி இருக்க வேண்டுமல்லவா..அப்படியானால் விதைப்பும் தினசரி இருக்க வேண்டும்.. புரியவில்லையா.. 5வகை கீரைகளை 2சதுர அடி பரப்பிற்கு ஒரு ரக கீரை என விதைக்க வேண்டும். ஆனால் ஒரே நாளில் விதைக்காமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கீரையை விதைக்க வேண்டும்.. இப்படி தான் ஒவ்வொரு பயிரையும் தேவைக்கு ஏற்றபடி விதைப்பது அவசியம்..

 இப்படியான சிறுசிறு விசயங்களுடன் கூடிய ஒரு நாள் வீட்டுத்தோட்ட பயிற்சி முகாம் சென்னை மேடவாக்கத்தில் கடந்த வாரம் 15.4.17 அன்று நடந்தது.. ஒரு குடும்பத்திற்கு தோட்டம் அமைத்து கொடுத்து நண்பர்களுக்கு பயிற்சியும் கொடுத்தாயிற்று.. 20பேர் குறைந்தபட்சம் இருந்தால் போதும் எங்கே இருந்தாலும் அழையுங்கள்..பயிற்சி கொடுக்கின்றோம்.. ஒரு செண்ட் நிலமோ மாடியோ இருந்தால் அவ்விடம் உங்களுக்கான காய்கறி தேவைகளை பூர்த்தி செய்யும்..என்பதை மறவாதீர்கள்..

இரண்டு செண்ட் அளவிற்கும் குறைவான பரப்பு ஒரு குடும்பம் வருடம் முழுவதும் பயன்படுத்தும் எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யுமாம்.. முயற்சி செய்து பாருங்கள்.. சித்திரை மாதம் எள்ளு விதைக்க சிறந்த பருவமாதலால் இந்த விசயத்தை உங்களுடன் பகிர்கின்றோம்..

நன்றி..
ஆதியகை
Whatsapp: 8526366796
www.aadhiyagai.com
www.aadhiyagai.blogspot.in
www.facebook.com/aadhiyagai
www.youtube.com/aadhiyagaiWednesday, 19 April 2017

புதியதோர் உலகம் செய்வோம்

பொதிகை தொலைக்காட்சியில்
ஏப்ரல் 16ஞாயிறு இரவு 8.30 முதல் 9மணி வரையிலும், மறு ஒளிபரப்பு ஏப்ரல் 21 வெள்ளி மாலை 5 மணி முதல் 5.30 மணி வரையிலும் ஒளிபரப்பாகிறது. சுய உணவு தேவையை பூர்த்தி செய்திட வேண்டும்.அதுவே அனைத்திற்கும் ஆதாரம் என்ற ஒற்றை நோக்கத்திற்காக இயங்குபவர்களை இந்த நிகழ்ச்சியில் படம் பிடித்து காட்டியுள்ளார்கள். அரை மணி நேரம் தான் இந்த நிகழ்ச்சி என்றாலும் ஒரு முறை ஒளிபரப்பு செய்திட 80,000ரூ மற்றும் மறு ஒளிபரப்பிற்காக 30,000 என செலவு ஆகும். உலகின் பெரும்பாலான நாடுகளிலும் ஒளிபரப்பாகும். இந்த அரை மணி நேர நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்திட பிரபு.MJ ஒரு தனிமனிதன் செய்த வேலைகளும் சந்தித்த நெருக்கடிகளும் ஏராளம்..

படிப்பை இடைநிறுத்தம் செய்துவிட்டு எனக்கு பிடித்த வேலைகளையெல்லாம் தேடி செய்துகொண்டிருந்த சமயம்.. என்ன வேலை கிடைத்தாலும் செய்யவேண்டுமென தேடி கொண்டிருப்பேன். அந்த சமயத்தில் 2013இல் கிடைத்த முகநூலில் நண்பராக அறிமுகமானவர் "Prabu Mj" அண்ணா.. அவ்வபோது அழைத்து பேசுவார்.. நலம் விசாரிப்பார்.. ஒரு வழியாக விவசாயத்தில் விருப்பம் ஏற்பட்டு இதில் பயணப்பட துவங்கி ஒரு பாதை கிடைத்துவிட அவ்வபோது செல்பேசியில் அழைத்து பாராட்டு வாங்குகேன். ஒரு வருடத்திற்கு முன்பு thewire.in என்ற ஆங்கில இதழுக்கு பரமுவை பற்றிய கட்டுரை எழுத வேண்டுமென்றார். வெறுமனே தோட்டம் அமைப்பதையும் விதைகள் சேகரிப்பதையும் எதற்கு அண்ணா என கேட்டபோது மக்களுக்கு நீ தேவையா இருக்கையோ இல்லையோ.. நீ செய்யற வேலை தேவைப்படும் என கூறி பரிந்துரை செய்தார்..  இப்படியாக சென்றுகொண்டிருக்கையில் கடந்த வருடத்தில் அண்ணாவிடமிருந்து அழைப்பு.. பொதிகையில் புதிதாக "புதியதோர் உலகம் செய்வோம்" என்ற நிகழ்ச்சி துவங்க இருக்கின்றது. சமுதாயத்திற்காக, விவசாயத்திற்காக இயங்கும் இளைஞர்களை மக்களிடம் அடையாளம் காட்டிட வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி, அதில் நீ செய்யும் விசயங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என கூறினார்..
கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சென்னை சென்று 80% படப்பிடிப்பு நடந்தது. மீதம் 20% சென்னையில் அமைத்த தோட்டங்களில் படமெடுக்க கேட்டனர். தோட்டக்காரர்களிடம் அனுமதி வாங்க வேண்டும்..ஆனால் பெரிதாக தோட்டம் ஏதுமில்லை.. அனுமதி வாங்கி கொண்டு அழைப்பதாக கூறிவிட்டு ஊருக்கு வந்தோம்.கடந்த ஒரு வருடம் சரியான சந்தர்ப்பமும் வரவில்லை. தோட்டமும் கிடைக்கவில்லை.. இதற்கிடையில் பல்வேறு விமர்சனங்களை கடந்து ஒரு வருடம் சென்னையில் வேலை செய்ததில் ஏறக்குறைய 200 வீட்டுத்தோட்ட நண்பர்களும் 20-30தோட்டங்களும் மாதிரியாக கிடைத்தது..

அதே சமயம் பிரபு அண்ணாவிடமும் விமர்சனங்கள் நெருக்கடிகளும் சென்றுள்ளது. இந்த பையனை பற்றி நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யாதீர்கள் என்று எச்சரிக்கைகள் சென்றுள்ளது.. அதே சமயம் தொலைக்காட்சி சார்ந்தவர்களும் இதை தவிர்த்து விடலாமென முடிவெடுத்து ஒதுக்கி வைத்துவிட்டனர்.

என்னை முடக்க வேண்டுமானால் எனக்கு ஆதரவாகவும் ஆதாரமாகவும் இருக்கும் அனைத்தையும் முடக்கும் வேலைகள் சுற்றிலும் நடந்துகொண்டிருந்த சமயம் அது..

தம்பி, இவர்களெல்லாம் பார்க்காத பரமனை எனக்கு தெரியும்.. தனிப்பட்ட மனிதனை எனக்கு தெரியாது.. ஒவ்வொருவருக்கும் மூன்று முகங்கள் உள்ளதென ஜப்பான் வாசகம் ஒன்று சொல்கிறது.. மக்களுக்கு தேவையான ஒன்றை, தேவையான ஒன்றை செய்யற.. சமூக வலைதளங்களை கடந்து சாதரண மக்களுக்கும் நீ செய்யும் வேலைகள் செல்லவேண்டி உள்ளது..  அதுக்காக மட்டும்தான் நான் படமெடுத்து இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒளிபரப்ப விரும்புகிறேன் என்றார்..
இந்த ஒரு வருட இடைவெளியில் குறைந்தது நூறு முறையாவது தொடர்பு கொள்ள முயற்சி செய்திருப்பார். ஆனால் இந்த ஒளிபரப்பே வேண்டாம்.. ஒதுங்கி சென்று சிவனேன்னு வேலை செய்வோமென இருந்துவிட்டேன்..
பிரபு அண்ணாவின் முயற்சியால் நாம் அனைத்து மக்களிடமும் சென்றுள்ளோம்.. தனியாக, குழுவாக ""சுய உணவு தேவையை பூர்த்தி செய்திட வேண்டும். அதுவே அனைத்திற்கும் ஆதாரம்"" என்ற விசயத்திற்காக வேலை செய்துகொண்டிருந்ந எங்களை, எங்களின் நோக்கத்திற்காக மட்டும் மக்களிடம் கொண்டு போய் சேர்த்திட்ட பிரபு அண்ணாவிற்கே எங்களின் நன்றிகள் அனைத்தும்..சேரும்.

ஞாயிறு ஒளிபரப்பான அந்த இரவிலிருந்து இன்று வரை அழைப்புகள் வந்துகொண்டே உள்ளது.. அழைத்தவர்களில் அதிகமானோர் கிராமத்து மக்கள்..
தம்பி 30செண்ட்டுல வெண்டை போட்டிருக்கேன் வீட்டுலயே உரம் செய்யலாம்ன்னு சொன்னயே என்னவெல்லாம் செய்யலாமென சொல்லு என ஒரு அம்மா..
நிகழ்ச்சி பார்த்ததிலிருந்து உங்களின் மீது ஒரு ஈர்ப்பு.. நல்ல மனிதனை அடையாளம் கண்டேன்..ஈரோடு வருகையில் கண்டிப்பாக
வீட்டிற்கு வாருங்கள் என ஒரு மருத்துவர்..
எங்க ஊரு ஏரியில வண்டல் மண் எடுக்க விடமாட்டேங்குறாங்க.. இனி பேசும்போது கண்டிப்பா இந்த விசயத்தை அழுத்தமாக பேசுங்க என திருவண்ணாமலை விவசாயி..
பயிற்சி நடந்தா சொல்லுங்க..
உங்க குழுவோடு இணைத்துக்கோங்க..
விதை வேண்டும்..
தோட்டம் அமைக்கனும்..
இப்படியாக 260க்கும் அதிகமானவர்கள் அழைத்து பேசியுள்ளார்கள்..

பிரபு அண்ணா சொன்னது போல கிராமத்து மக்களிடம் பொதிகை தொலைக்காட்சியின் மூலம் ஒரு விசயத்தை ஒரு துளி அளவு கொண்டு சென்றுவிட்டோம்.. இதற்காக தான் இத்தனை முறை அழைத்து சுற்றியுள்ளவர்களை சமாளித்து நினைத்ததை நடத்தி காட்டிவிட்டார்..

மனமகிழ்வோடு இதை எழுதுகிறேன்..
நன்றிகளுடன்..
புதியதோர் உலகம் செய்வோம்.
Prabu Mj
Doordasan tv
Food First Group -Chennai
பரமுவாகிய நான்..

நிகழ்ச்சி பற்றி

                              பிரபு.MJ

அக்பர் அண்ணா

சந்திரா அக்கா

ஜெயலக்ஷ்மி அக்கா

மார்ட்டீனா அக்கா